VI: நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள ஹலால் தொடர்பான சர்ச்சை ஒரு பாரிய பிரச்சினை இல்லையென ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
அரச தகவல் திணைக்களத்தில் இன்று புதன்கிழைமை இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள ஹலால் பிரச்சினை என்பது ஒரு பாரதூரமான விடயமல்ல. இது ஒரு சாதாரண பிரச்சினை. இப் பிரச்சினையை ஏதோ ஓர் இடத்திலிருந்து யாரோ பெரிதாக்கி விடப்பார்க்கின்றனர்.
இதேவேளை, சில நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்ற பொருட்களுக்கு ஹலால் சான்றிதழ் தேவைப்படுகின்றது. இந்நிலையில் ஹலால் சான்றிதழ் இன்றி பொருட்களை எவ்வாறு ஏற்றுமதி செய்வது. இப் பிரச்சினை குறித்து பெரிதாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment