உணவுற்பத்திப் பொருட்களுக்கு பெயர் போன நிறுவனங்களில் ஒன்றான நெஸ்லேயின் உற்பத்தியில் மாட்டிறைச்சிக்குள் குதிரை இறைச்சி கலப்படம் இடம்பெற்றுள்ளதை அந்நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.
நெஸ்லேயின் பஸ்தா என்ற உற்பத்தியில் மாட்டிறைச்சிக்குள் குதிரை இறைச்சி 1 வீதம் கலக்கப்படுவது பரிசோதனைகளில் தெரியவந்நது. இதனை முற்றாக மறுத்துவந்த நெஸ்லே நிறுவனம் தற்போது அதனை ஒப்புக்கொண்டுள்ளது.
உலகின் பல்வேறு பகுதிகளில் நெஸ்லேயின் உற்பத்திகளுக்கு தனி இடம் உண்டு. குறிப்பாக ஐரோப்பா சந்தையில் சிறந்த கேள்வி உண்டு. அங்குள்ளவர்கள் மாட்டிறைச்சியில் அதீத விருப்பம் கொண்டவர்கள் அதிகம்.
இந்நிலையில் மாட்டிறைச்சிக்குள் குதிரை இறைச்சி கலப்படம் செய்யப்பட்டுள்ளமையானது அந்நிறுவனத்திற்கு பாதிப்பாக அமையலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த கலப்படம் விவகாரம் தொடர்பில் நெஸ்லே நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்கள் நிறுவனம், தரத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கும். வாடிக்கையாளர்களின் நலனே எங்களுக்கு முக்கியம்.
எங்கள் நிறுவனத்திற்கு பொருட்களை விநியோகிக்கும் இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாட்டைச் நிறுவனங்கள் கலப்படம் செய்துள்ளமை எமக்கு தெரியவந்துள்ளது. இந்நிறுவனங்களின் தயாரிப்புக்களில் ஒரு சதவீதமான குதிரையை இறைச்சியை மாட்டிறைச்சிக்குள் கலப்படம் செய்துள்ளனர்.
இதனால் அந்நிறுவனங்களுடனாக ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டுவந்துவிட்டோம். மேலும் இது போன்ற தவறுகள் இடம்பெறாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளது.
0 comments:
Post a Comment