MN:இருகைகளுமின்றி ஏற்கனவே பல சாதனைகள் படைத்த ஜெஸிகா தற்போது அதன் உச்சக் கட்டமாக விமானம் ஓட்டி சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் பிறந்தார் ஜெஸிகா. பிறவியிலேயே இரு கைகளையும் இழந்த நிலையில் பிறந்த ஜெஸிகா. தற்போது தனது 30ஆவது வயது வரை ஏராளமான சாதனைகளால் பலருக்கும் முன்னுதாரமாய் விளங்குகிறார். சிறுவயதிலிருந்தே கால்களை கைகளாகவும் பயன்படுத்தி தன்னுடைய வேலைகளை தானே செய்யப்பழகிக்கொண்டார். பின்னர் தற்காப்புக்கலையில் கறுப்புப் பட்டி, கணனியில் நிமிடத்திற்கு 25 சொற்களை டைப் செய்தல், கார் ஓட்டுதல் என பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இவரின் சாதனைகளை அறிந்த பாப்பரசர் 16ஆம் ஆசிர்வாதப்பர் தனது பாராட்டுக்களை தெரிவித்திருந்தார்.
இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment