BBC+TK:வாஷிங்டன்: இணையத்தள தொடர்பாடல் சேவையான ஸ்கைப்,தனது நாளாந்த சேவைகளில் இடம்பெறும் நெருக்கடிகளுக்காக மன்னிப்பு கோரியுள்ளது.
உலகிலுள்ள பல மில்லியன் மக்களால் பயன்படுத்தப்படும் இணையத் தொலைபேசி வலையமைப்பான ஸ்கைப் தனது சேவைகளினை வழங்குவதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பாகவே மன்னிப்புக்கோரியுள்ளது.
அமெரிக்கா,ஐரோப்பா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிலுள்ள அதிகளவான ஸ்கைப் பாவனையாளர்கள் ஸகைப் தொர்பான பிரச்சினைகள் பற்றி முறையிட்டுள்ளனர்.
இந்நிலையில் 2007 ஆம் ஆண்டில் ஸ்கைப் சேவையில் மிகப்பெரிய நெருக்கடி ஏற்படும் வரை மக்களுக்கு நம்பிக்கையானதும் தரமானதுமான சேவைகளை வழங்குவது தொடர்பாக ஸ்கைப் நிறுவனம் பெருமிதம் கொண்டிருந்தது.
எனினும் அதன் தொலைத்தொடர்பு வலையமைப்பில் ஏற்படுகின்ற சிக்கல்கள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் பொறியியலாளர்கள் மற்றும் களச் செயற்பாட்டுக்குழு என்பன வலையமைப்பினைச் சீர்செய்வதற்காக அயராது செயற்பட்டு வருவதாக அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும்,பாவனையாளர்கள் குறித்த சேவையினை இயக்கும் போது அது ஏனைய சேவைகளுடன் முரண்படுவதாகவும் அதனால் ஸ்கைப் வலையமைப்பினுள் நுழைய முடியாமல் இருப்பதாகவும் அதிகளவான முறைப்பாடுகள் தமக்குக் கிடைப்பதாக ரீட்ரைட் இணையத்தளம் தெரிவித்துள்ளது.
அத்துடன்,குறித்த சிக்கல்களை ஸ்கைப் வலையமைப்பு 1 கோடி அழைப்புகளை இழப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாளொன்றுக்கான சாதாரண அழைப்புகளின் அளவு 2 கோடிகளாக இருக்கும் அதேவேளை நவீன உலகின் தலைசிறந்த சேவைகளில் ஒன்றாக ஸ்கைப் உள்ளது எனவும் கருதப்படுகிறது.
0 comments:
Post a Comment