இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

5/10/2013

முன்னாள் பிரதி மேயர் அஸாத் சாலி விடுதலை செய்யப்பட்டுள்ளார்


கொழும்பு மாநகர முன்னாள் பிரதி மேயர் அஸாத் சாலி விடுதலை செய்யப்பட்டுள்ளார் என அவருடைய சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் தெரிவித்தார்.

அஸாத் சாலியை தடுத்து வைத்து விசாரிப்பதற்கான நீதிமன்ற அனுமதியை ரகசிய பொலிஸார் பெற்றுக்கொண்ட நிலையில், ஜனாதிபதியின் விசேட பணிப்புக்கமைய அவர் விடுவிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. 

தற்போது இவர் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளை, அஸாத் சாலி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமை மீறல் மனு மீதான விசாரணைகள் எதிர்வரும் 28ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா