இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

5/12/2013

மாணவர்களுக்கு இலத்திரனியல் பருவச் சீட்டு



பாடசாலை மாணவர்கள் பாடங்களுக்காக இதுவரை பயன் படுத்திய கார்ட்போர்ட் மாதாந்த பருவச் சீட்டுக்குப் பதிலாக 03 இலட்சம் இலக்ட்ரோனிக் கார்ட்பத்திரங்களை இலவசமாக வழங்க போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

பிரயாணத்துக்கான கட்டணம் பஸ் நடத்துனரால் இலக்ட்ரோனிக் மெஷின் இயந்திரத்தால் அறவிடும் முறை அமுலாகுமென போக்குவரத்துச் சபையின் உபதலைவர் எல்.ஏ. விமலரத்ன தெரிவித்தார். வெளியில் தெரியாத போதும் உள்பகுதியில் பிள்ளையின் பெயர், வயது, பிரயாணப்பாதைபோன்ற தகவல்கள் இதில் இடம்பெறும். இதை வேறு எவருக்கும் கைமாற்ற இயலாது.

காட்பத்திரம் காணாமற் போனால் 200 ரூபா செலுத்தி காட் பத்திரத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

காட்பத்திரத்தில் பணம் முடிந்தால் தொலைபேசிகளைப் போன்று பிள்ளைகள் ‘ரீலோட்” செய்து கொள்ளலாம். எதிர்வரும் காலத்தில் இலக்ட்ரோனிக் கார்ட் பத்திரத் துக்காகப் புகைப்படமும் சேர்க்கப்படுமென்று உபதலைவர் தெரிவித்தார்.

இத்திட்டத்தில் முதற்கட்டமாக பொரள்ளை ரத்னாவலி மகளிர் வித்தியாலயத்தைச் சேர்ந்த 98 பேருக்கு கார்ட் பத்திரங்கள் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
Bas TN

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா