இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

5/10/2013

ஜனாதிபதி, பஷிலை சந்திக்க மு.கா. தீர்மானம்


கிழக்கு மாகாண சபையின் மு.கா. உறுப்பினர்களும் அவர்களை சார்ந்தவர்களும் அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாகுகின்றமை தொடர்பிலும் அங்கு பொது மக்கள் எதிர்கொள்ளும் செளகரியங்கள் குறித்தும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆகியோரை சந்தித்து விரிவாக ஆராய்வதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
 
அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கிம் தலைமையில் செயலாளர் ஹஸன் அலி, தவிசாளர் பஷீர் சேகுதாவூத் மற்றும் பாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்கள் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடத்திய விசேட சந்திப்பிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அக்கட்சியின் பதவி வழிசார்ந்த உயர்பீட உறுப்பினர் ஒருவர் கேசரியிடம் தெரிவித்தார்.
 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
 
கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவையை முதல்வர் உடனடியாக கூட்ட வேண்டுமென இதன்போது ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. குறித்த அமைச்சரவையில் கிழக்கில் இடம்பெறும் சில இடமாற்றங்கள் தொடர்பிலும் புல்மோட்டை உள்ளிட்ட காணி விவகாரம் தொடர்பிலும் உடன் கவனம் செலுத்தப்பட்டு தீர்வு காணப்பட வேண்டுமெனவும் இதன்போது மு.கா. உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
 
அத்துடன், தொடர்ந்தும் அரசியல் பழிவாங்கல்களும் பொது மக்கள் அசெளகரியங்களும் கிழக்கில் இடம்பெறுவதாக கூறி அது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஆகியோருடன் மு.கா.வின் விசேட குழு பேச்சுவார்த்தை நடத்தும் எனவும் அங்கு தெரிவிக்கப்பட்டது.
 
இதனை தொடர்ந்தும் கி ழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் கிழக்கு மாகாண அமைச்சரவையை எதிர்வரும் திங்களன்று கூட்டுவதற்கு முடிவு செய்துள்ளார் என தெரிவித்தார்.
 
இதனடிடையே நேற்று முன்தினம் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் நடைபெற்ற விசேட கூட்டம் ெதாடர்பில் அக்கட்சியின் செயலாளர் நாயகம் ஹஸன் அலி கேசரியிடம் பின்வருமாறு தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கின்றனர். அத்துடன், குறித்த மாகாண சபையில் மு.கா. உறுப்பினர்கள் தொடர்ந்தும் அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாகின்றனர். இதனால் கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவையை அதன் முதலமைச்சர் உடனடியாக கூட்டுவதுடன் அதில் மு.கா. உறுப்பினர்கள் தொடர்ச்சியாக பழிவாங்கல்களுக்கு உட்படுவது மற்றும் பொது மக்கள் பிரச்சினையை தொடர்பில் விரிவாக ஆராய்ந்தோம். முதலமைச்சர் அமைச்சரவையை கூட்டும் பட்சத்தில் எமது உறுப்பினர்கள் அங்கு குறித்த விடயங்கள் தொடர்பில் வெளிப்படையாகவும் விரிவாகவும் பேசவுள்ளனர். இதற்கு அங்கு உரிய தீர்வு ஒன்று கிடைக்கப்பெறாத பட்சத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் மு.கா. ஈடுபடும் என தெரிவித்தார்.
Bas VV

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா