இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

5/09/2013

முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடை மிகச் சிறந்தது : தேவபொட்ட சோரத் தேரர்

முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடை மிகச் சிறந்தது. ஆபாச உணர்வுகளைத் தூண்டாத மரியாதைக்குரிய ஆடையாகும். எங்கள் சமூகப் பெண்களின் ஆடைகள் கூட ஆபாசத்தை உண்டு பண்ணும் விதத்தில் அமைந்துள்ளன என்று அக்கரைப்பற்று விஹாராதிபதி தேவபொட்ட சோரத் தேரர் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட சர்வமதத் தலைவர்களுக்கான மாநாடு நிந்தவூர் மாவட்டத் தொழிற் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது. இதன் போது கருத்து தெரிவிக்கும் போதே தேவபொட்ட சோரத் தேரர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

எல்லாச் சமூகங்களிலும் குழப்பங்களை உண்டு பண்ணக்கூடிய சிறு சிறு குழுக்கள் இருக்கத்தான் செய்கின்றன. நேர்மையில்லாத குழப்பவாதிகளான அவர்கள் அழிந்து விடுவர். இதற்காக நாம் சமாதானத்தைக் காப்பதிலிருந்து விலகி நிற்கக் கூடாது என்றார்.


இதேவேளை இங்கு உரையாற்றிய அம்பாறை மாவட்ட பிராந்திய கட்டளைத்தளபதி பிரிகேடியர் ஹரன் பெரேரா,

'நாட்டின் ஆங்காங்கே நடைபெறும் ஒரு சில விரும்பத்தகாத செயல்களை வைத்துக் கொண்டு நாம் பிழையாகச் சிந்திக்கக் கூடாது. நமது அம்பாறை மாவட்டத்தில் நாம் அமைதியைக் காத்து ஒற்றுமையுடன் வாழ்ந்தால் முழு நாடும் சீர்பெறும். எனவே இங்கு கூடியிருக்கும் மும்மதத் தலைவர்களிடம் நான் பணிவாக வேண்டுவது, நமது அம்பாறைப் பிராந்தியத்தில் சாந்தி, சமாதானம் ஓங்க அவரவர் சமூகத்தவர்களை நல்வழிப்படுத்த முன்வர வேண்டும் என்றார்.

0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா