இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

5/07/2013

காதலன் உதவியோடு கனவணை கழுத்தறுத்து கொன்ற மனைவி


மன்னார்குடியில், கள்ளக் காதலனுடன் சேர்ந்து, கணவனின் கழுத்தை அறுத்து கொலை செய்த மனைவி மற்றும் அவரது கள்ளக் காதலனை, பொலிசார் கைது செய்தனர். 

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை சேர்ந்தவர், கலைச்செல்வன். இவர், அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார். 

இவரது மனைவி ஜெகதீஸ்வரி, 32. திருமணம் ஆகி, ஏழு ஆண்டுகளான நிலையில், குழந்தை இல்லை. 

இந்நிலையில், சோழபாண்டி கிராமத்தைச் சேர்ந்த, வினோத், 27, என்பவருடன், ஜெகதீஸ்வரிக்கு, கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதை, பலமுறை கலைச்செல்வன் கண்டித்துள்ளார். 

இதனால், இருவருக்கும், கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, கலைச்செல்வன், கடையை பூட்டி, வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது, ஜெகதீஸ்வரி, வினோதுடன் வீட்டில் இருந்துள்ளார். 

ஆத்திரம் அடைந்த கலைச்செல்வன், வினோதை துரத்தியுள்ளார். அவர், மொட்டை மாடிக்கு ஓடினார். 

அங்கு, ஜெகதீஸ்வரியுடன் சேர்ந்து, திட்டமிட்டபடி, கலைச்செல்வனை, கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, அதற்கான தடயங்களை மறைத்ததுடன், ரத்தங்களையும் கழுவினர். 

இது குறித்து, மன்னார்குடி பொலிசாருக்கு, அப்பகுதியினர் தகவல் தெரிவித்தனர். பொலிசார், வினோத் மற்றும் ஜெகதீஸ்வரியை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா