இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

5/10/2013

மகளை பிறருக்கு பங்குபோட்ட தந்தை


கேரள மாநிலம் கொச்சி பறவூர் பகுதியைச் சேர்ந்தவர் சுதீர், கூலித்தொழிலாளி. இவரது மனைவி லைலா. இந்த தம்பதிக்கு ஒரு மகள் உண்டு. கூலித்தொழிலில் போதிய வருமானம் கிடைக்காததால் சுதீரின் குடும்பம் வறுமையில் வாடியது. இந்த நிலையில் சுதீருக்கு ஒரு விபரீத எண்ணம் ஏற்பட்டது. சுலபமாக பணம் சம்பாதிக்க பெற்ற மகளையே விபசாரத்தில் ஈடுபடுத்த அவர் முடிவு செய்தார். 

இதற்காக அந்த பகுதியைச் சேர்ந்த ஓமணா என்ற புரோக்கரை அணுகி தனது திட்டத்தை வெளிப்படுத்தினார். விபசாரத்தில் கரை கண்ட புரோக்கர் ஓமணாவும், சுதீரிடம் பண ஆசை காட்டி அந்த திட்டத்தை உடனே செயல்படுத்த வழிமுறைகளை வகுத்து கொடுத்தார். இதைத்தொடர்ந்து 2011-ம் ஆண்டு பறவூரின் வெளிப்புறத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் ஒரு வீட்டை இவர்கள் தேர்ந்தெடுத்தனர். 

இதன் பிறகு தனது மகளை ஏமாற்றி சுதீர் ஒரு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு அந்த வீட்டிற்கு சென்றார். அங்கு புரோக்கர் ஓமணா வாடிக்கையாளர்களுடன் தயாராக இருந்தார். அன்று அந்த வீட்டில் அந்த இளம் பெண்ணின் கற்பை 7 வாலிபர்கள் சூறையாடினார்கள். விடிய விடிய இந்த கொடூரம் நடை பெற்றது. 

பெற்ற மகளையே விபசாரத்தில் ஈடுபடுத்திய சுதீர் அந்த 7 வாலிபர்களிடமிருந்து ரூ.18 ஆயிரம் பணம் பெற்றார். அதில், ரூ.500-ஐ ஓமணாவுக்கு கொடுத்தார். பிறகு தனது மகளை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு வீட்டுக்கு சென்று விட்டார். தனக்கு நேர்ந்த கொடூரம் பற்றி தாய் லைலாவிடம் கூறி மகள் அழுதாள். 

ஆனால் தாய் மவுனமாக இருந்து விட்டார். இதனால் அந்த பெண் கொச்சி பொலிஸில் தனக்கு நடந்த கொடுமைப் பற்றி புகார் கூறினார். பொலிஸார் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த வழக்கு கொச்சி கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. 

பெற்ற மகளையே விபசாரத்தில் ஈடுபடுத்திய சுதீருக்கும் அதற்கு உடந்தையாக இருந்த புரோக்கர் ஓமணாவுக்கும், தலா 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.7 வாலிபர்களுக்கும் தலா 7 ஆண்டு சிறைத்தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.

0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா