இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

5/10/2013

சவூதி அரேபிய அரசாங்கம் இலங்கைக்கு பேரீத்தம் பழங்கள் அன்பளிப்பு


புனித ரமழான் நோன்பை நோற்கும் முஸ்லிம் மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கென சவூதி அரேபிய அரசாங்கம் ஒரு தொகை பேரீத்தம்பழங்களை இலங்கைக்கு அன்பளிப்புச் செய்துள்ளது. இந்த பேரீத்தம் பழங்களை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் வைபவம்நேற்று கொழும்பு விசும்பாயவில் இடம் பெற்றது.

இலங்கையிலுள்ள சவூதி அரேபிய தூதுவர் அப்துல் அஸீஸ், பிரதமர் தி.மு.ஜயரத்னவிடம் இந்த பேரீத்தம் பழங்களை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

இது தொடர்பான நிகழ்வில் சிரேஷ்ட அமைச்சர் அல்ஹாஜ்.ஏ.எச்.எம்.பவுஸி, மேல்மாகாண ஆளுநர் அல்ஹாஜ்.அலவி மவ்லானா ,புத்த சாசன பிரதி அமைச்சர் எம்.கே.ஏ.டீ.குணவர்த்தன, எரிசக்தி பிரதி அமைச்சர் அல்ஹாஜ். அப்துல் காதர், முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பணிப்பாளர் . எம்.எச்.எம்.சமீல் ஆகியோரும் கலந்துக் கொண்டனர்.

ரமழான் நோன்பை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் சவூதி அரேபிய அரசாங்கம் இலங்கை முஸ்லீம்களுக்காக பேரீத்தம் பழங்களைவழங்கி வருவதுடன் இந்த ஆண்டும் 200 மெட்ரிக் தொன் பேரீத்தம் பழங்களை வழங்கவுள்ளது.

சவூதி அரேபிய அரசினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்படும் இந்த பேரீத்தம் பழங்கள் முஸ்லிம் கலாசார திணைக்கத்தினூடாக நாடுமுழுவதிலும் உள்ள பள்ளிவாசல்கள் மூலம் சகல முஸ்லிம் மக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படஉள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா