இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

5/10/2013

பெண் எம்.பி.க்களை கவர அமைச்சர் போட்டுள்ள திட்டம்


பெண் பாராளுமன்ற உறுப்பினர்களை கவரும் பொருட்டு பாராளுமன்றத்துக்கு காற்சட்டை அணிந்து செல்வதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் குமார் வெல்கம தெரிவித்துள்ளார்.

மேலும் இனிமேல் பாரம்பரிய உடையுடன் பாராளுமன்றத்துக்கு செல்லப்போவதில்லையெனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பொது நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ரோசி சேனாநாயக்க, உபேக்ஷா சுவர்ணமாலி போன்ற அழகான பெண் பாரளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதாகவும் அவர்களின் பார்வையை தன் பக்கம் திருப்ப விரும்புவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் இம்முடிவை அடுத்து தற்போது பாராளுமன்றத்துக்கு காற்சட்டை அணிந்து செல்வதாகவும், இதனால் பெண் உறுப்பினர்களின் பார்வை தன் பக்கம் திரும்பியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் பாராளுமன்றத்தில் ரோசி சேனாநாயக்க அழகான பெண்மணி என வர்ணித்து சர்ச்சையில் சிக்கியவர் குமார் வெல்கம என்பது குறிப்பிடத்தக்கது.
(வீரகேசரி)

0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா