இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

9/20/2013

பிரான்ஸில் மினிமிஸ் போட்டிக்கு தடை


பிரான்ஸில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான அழகிப்போட்டிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அழகிப் போட்டி நடத்துவது உலக நாடுகளில் சகஜமான விஷயம் தான். 

ஆனால், சிறு குழந்தைகளைப் பிரதானப்படுத்தி நடத்தப்படும் அழகிப் போட்டிகளால் குழந்தைகளின் மனவளர்ச்சி பாதிப்படைவதாக தெரிவித்து 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான அழகிப்போட்டிக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது பிரான்ஸ். 

பிரான்சின் சிறு நகரங்களில் இதுபோன்ற குழந்தைகளுக்கான அழகிப்போட்டிகள் மிகவும் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது. 

பிரான்ஸ் நாட்டில் இதுவரை 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான மினி மிஸ் என்ற பெயரில் அழகிப் போட்டிகள் நடைபெற்று வந்தன. இப்போட்டியில் கலந்து கொள்ளும் சிறுமிகள் விதவிதமான கவர்ச்சி உடை அணிந்து பெரியவர்களைப் போலவே ஒய்யார நடை நடந்து மேடைகளில் வலம் வருவார்கள். 

அத்தோடு, விதவிதமான மேக்கப் செய்து தங்கள் குழந்தைகளை அழகுபடுத்தி இருப்பார்கள் அவர்களது பெற்றோர்கள். 

சிறு வயதிலேயே இத்தகைய மேக்கப் போடுவதால் குழந்தைகளுடைய தோல் பாழாவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வந்தனர். இத்தகைய போட்டிகளில் பங்கேற்கும் குழந்தைகளுக்கு விளம்பர வாய்ப்புகள் வந்து குவிகின்றதாம். 

இதன் மூலம் அவர்கள் மனதில் சிறு வயதிலேயே வயது முதிர்ச்சி ஏற்படுவதாக அவர்கள் கவலை தெரிவித்தனர். 

இந்நிலையில் அழகிப் போட்டியானது குழந்தைகளை ஆபாச முறையில் காட்டப்படும் நிகழ்ச்சி என்று செனேட்டர் மையமானது எதிர்ப்பு தெரிவித்தது. 

தொடர் எதிர்ப்புகளைத் தொடர்ந்து தற்போது குழந்தைகளுக்கான அழகிப் போட்டியானது பிரான்ஸ் நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது. தடையை மீறி இத்தகைய போட்டிகள் நடத்துபவர்களுக்கு 30,000 யூரோ அபராதமும், 2 வருடங்கள் சிறை தண்டனையும் வழங்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

ஆனால் அனைத்து செனேட்டர்களும் இந்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை. மேலும் சோசலிச கட்சியானது இந்த தண்டனை மிக அதிகம் எனக் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா