இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

9/28/2013

சம்மாந்துறையில் சூழல் பாதுகாப்பும், டெங்கு ஒளிப்பு வேலைத்திட்டம்


(ஹனீபா)
சம்மாந்துறை குட் பிரன்ஷிப் இளைஞர் கழகமும் சம்மாந்துறைப் பிரதேச சபையும் இணைந்து ஏற்பாடு செய்த சூழல் பாதுகாப்பும், டெங்கு ஒளிப்பும் எனும் தலைப்பிலான விளிப்புணர்வு வேலைத்திட்டமும், ஊர்வலமும் இன்று (28)  கிராம சேவை உத்தியோகத்தர் ஐ.எல். ஒஜிஸ்கான் தலைமையில் சம்மாந்துறை அல் அமீர் வித்தியாலய முற்றலில் இருந்து இந்த நிகழ்வு ஆரம்பமானது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் கலந்து கொண்டார். கௌரவ அதிதிகளாக சம்மாந்துறைப் பிரதேச சபையின் உதவி தவிசாளர் எம்.ஏ.கே.றஹ்மான், பிரதேச சபையின் செயலாளர் ஏ.ஏ.சலீம், பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஏ.முஹம்மட், இளைஞர் சேவை அதிகாரி பைஷhல் அமீன், சமுர்த்தி உத்தியோகத்தர் ஏ.எல்.நஸீர் சம்மாந்துறை குட் பிரன்ஷpப் இளைஞர் கழக தலைவர் ஏ.எம்.றிஷவி உட்பட சூழல் பாதுகாப்பு பொரிஸ் உத்தியோகத்தர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், இளைஞர் கழக உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் வீதி ஊர்வலத்துடன் வீடுவீடாக சென்று பரிசோதனைகள் இடம் பெற்றதுடன் விளிப்பூட்டல் நிகழ்வுகளும் இடம் பெற்றன.


0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா