இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

10/02/2013

டெல்லி சிறையை சுற்றிப் பார்த்த அமெரிக்க உலக அழகி

அமெரிக்காவை சேர்ந்த முன்னாள் உலக அழகி ஒலிவியா டெல்லி திகார் சிறையை சுற்றிப்பார்த்தார். அமெரிக்காவை சேர்ந்தவர் முன்னாள் உலக அழகி ஒலிவியா பிரான்செஸ் கல்போ கடந்த ஆண்டு உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். 

ஒலிவியா 10 நாட்கள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ளார். பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், பெண்களுக்கான அதிகாரம் மற்றும் எய்ட்ஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். கடந்த ஞாயிறுக்கிழமை டெல்லியில் நடைபெற்ற எச்ஐவி, எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு பேரணியில் ஒலிவியா கலந்து கொண்டார். முதன்முறையாக இந்தியா வந்துள்ள ஒலிவியா, மகாவீர் குடியிருப்பு பகுதிக்கு சென்று, துப்புரவு பணியில் இருந்து விடுபட்டு சமூக சேவகர்களாக மாறிய பெண்களிடம் கலந்துரையாடினார். 

இதையடுத்து, நேற்று முன்தினம் திகார் சிறையை பற்றி அறிந்துகொள்ள ஒலிவியா அங்கு சென்றார். திகார் சிறையில் உள்ள மத்திய சிறை எண் & 2 பகுதிக்கு சென்ற ஒவிலியா, சுமார் 2 மணி நேரம் சுற்றிப்பார்த்தார். சிறைச்சாலை குறித்து ஒலிவியாவுக்கு சிறைத்துறை டிஜிபி விம்லா மெஹ்ரா விளக்கி கூறினார். சிறையில் கைதிகள் தயாரிக்கும் பொருட்கள் குறித்து ஒலிவியா கேட்டறிந்தார். 

இதையடுத்து, சிறைச்சாலையில் கைதிகளின் கலைநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சிகளை அவர் கண்டுரசித்தார். நிகழ்ச்சியின் முடிவில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை கைவிடும் வகையிலான உறுதிமொழி எடுக்கப்பட்டது. கைதிகளுடன் சேர்ந்து ஒலிவியாவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டார். 

பின்னர், சிறையில் உள்ள சிறப்பு விருந்தினருக்கான புத்தகத்தில் ஒலிவியா தனது கருத்தை பதிவு செய்தார். அதில், "நீங்கள் ஒரு அழகான சுழற்சியை உருவாக்கியுள்ளீர்கள். அழகான எதிர்காலத்திற்காக விதைகளை நடுவது போன்று இருக்கிறது இந்த பணி. உங்களுடைய செயலுக்காக அனைருக்கும் நன்றி. திகார் சிறையானது வருகிற ஆண்டுகளில் எவ்வாறு வியக்கத்தக்க வகையில் இருக்கும் என்பதை என்னால் கற்பனை செய்ய முடிகிறது. கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்" என்று எழுதியிருந்தார். இந்நிகழ்ச்சியின்போது, உலக அழகி ஒலிவியாவுடன், வடிவமைப்பாளர் சஞ்சனா ஜான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா