இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

11/27/2013

மல் 3ம்வீதியினை மக்களின் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு

-ஹனீபா
படங்கள் - ஹனீபா,எம்.ரீ.எம்.பர்ஹான்
தயட்டக் கிருல்ல வேலைத்திட்டத்தின் கீழ் சம்மாந்துறைப் பிரதேசத்தில் 2மில்லியன் ரூபா செலவில் நவீன முறையில் புனரமைக்கப்பட்ட மல் 3ம்வீதியினை மக்களின் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு இன்று (27) மாலை 5.00 மணிக்கு சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் நடைபெற்றது.

இந்த விழாவில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட செயலாளர் நீல் டி அல்வீஸ் கலந்து கொண்டு வீதியின் பெயர் பலகையினை திரைநீக்கம் செய்து வைத்தார்.

மேலும் இந்த வைபவத்தில் சம்மாந்துறைப் பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷhட், உதவி தவிசாளர் எம்.ஏ.கே.றஹ்மான், உதவி மாவட்டச் செயலாளர் கே.விமலநாதன், அம்பாறை மாவட்ட பிரதம கணக்காளர் ஐ.எம்.ஹூசைன், மாவட்ட பிரதம பொறியியலாளர் எம்.ஐ.எம்.றாசீக், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.அன்வர்தீன், மாவட்ட உதவித் திட்டமிடல் பணிப்பாளர்களான ஐ.எல்.தௌபீக், எஸ்.விவேகானந்த ராஜா, மாவட்ட உள்ளக கணக்காய்வு அத்தியட்சகர் கணகரெத்தினம், மாவட்ட விவசாய பணிப்பாளர் ஐ.எல்.லத்தீப், மாவட்ட காணி உத்தியோகத்தர் கே.எல்.முசம்மில், பிரதேச சபையின் செயலாளர் எ.ஏ.சலீம், உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.அப்துல் லத்தீப், கணக்காளர் ஏ.எல்.மஹ்றூப். உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஹம்சார் உட்பட பலர் கலந்த கொண்டனர்.

தயட்டக்கிருல்ல வேலைத்திட்டத்தின் கீழ் சம்மாந்தறைப் பிரதேசத்துக்க 134.7 மில்லியன் ரூபாய்களை மாவட்ட செயலாளர் அவர்களினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இத்தொகை ஏனைய பிரதேசங்களையும் விட கூடுதலானதாகும் எனவும் இதற்காக மாவட்ட செயலாளருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டன.

இந்த நிதியானது 34 வேலைத்திட்டகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் வீதி அபிவிருத்திக்கு 55 மில்லியன்களும், வைத்திய சாலைக்கு 30 மில்லியன்களும், இப்பிரதேசத்தில் மெலதிக நெற் களஞ்சிய சாலை அமைப்புக்காக 25 மில்லியன் ரூபாய்களும் ஒதக்கப்பட்டிருப்பதாகவும் அத்துடன் பள்ளிவாசல்கள, தேவாலயங்கள் என்பவற்றுக்கும் இதர பணங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும். கூறப்பட்டன.

இவ்வைபவத்தில் மாவட்ட செயலாளர் நில் டி அல்வீஸ், தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷhட், பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், மாவட்ட பிரதம பொறியியலாளர் எம்.ஐ.எம்.றாசீக் ஆகியோருக்கு பிரதேச பொதுமக்களால் பொன்னாடை போத்தி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.




 

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா