இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

12/07/2013

தாருல் ஈமான் மர்கஸ், 2014 வருடத்துக்கான புதிய மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பம் கோரல்

-ஹனீபா
சம்மாந்துறை மல்கம்பிட்டி வீதியிலுள்ள மர்கஸ் தாருல் ஈமான் தாருத் தவீத் அஸ்ஸலபிய்யா கல்வி நிறுவனம் 2014 வருடத்துக்கான புதிய மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரியுள்ளது.

இக்கல்வி நிலையத்தில் கல்வி கற்பதற்கான தகைமைகளாக தந்தை மரணித்த முஸ்லீம் மானவராக இருத்தல், 2014ம் வருடத்தில் 06ம் ஆண்டில் கல்வி கற்க கூடியவராக இருத்தல், 2014.01.01ல் 11வயதுக்கு உட்பட்டவராக இருத்தல், அல் குர்ஆனை நன்கு ஓதக் கூடியவராகவும், தமிழை நன்றாக வாசிக்கக் கூடியவராகவும் இருத்தல் வெண்டும்.

தெரிவு செய்யப்படும் மாணவர்களுக்கு பின்வரும் வசதிகள் செய்து கொடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன இலவச உணவு, தங்குமிடம், மருத்துவம், சீருடை என்பன வழங்கப்படும். தகுதியான பட்டதாரி ஆசிரியர்கள் மூலம் பாடசாலை மற்றும் மதரசா பாடங்கள் நடாத்தப்படும். அரபு, ஆங்கில, சிங்கள மொழிகளில் விNஷட பயிற்சிகள், தரம் 06 தொடக்கம் கா.பொ.த சாதாரணதரம் மற்றும் உயர்தரம் வரை அரச பாடசாலைகளுடன் இணைந்த பாடத்திட்டம், 11அண்டின் பின்னர் கணனி மற்றும் தொழில் கல்விப் பயிற்சி, சகல வசதிகளுடன் கூடிய கற்பதற்கு ஏற்ற சூழல்.

மாணவர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகப்பரீட்சை எதிர்வரும் 2013.12.14ம் திகதி சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது.

நேர்முகப்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் பின்வரும் ஆவணங்களுடன் சமூகம் கொடுக்கவும் மாணவர் பிறப்பு அத்தாட்சிப்பத்திரத்தின் மூலப் பிரதி, தந்தையின் மரண அத்தாட்சிப்பத்திரத்தின் மூலப் பிரதி, 2014ம் வருடத்தில் 06ம் ஆண்டில் கல்வி கற்பதை உறுதிப்படுத்தம் பாடசாலைக் கடிதம், 2013ம் ஆண்டின் பாடசாலை தேர்ச்சி அறிக்கை, மருத்தவ அத்தாட்சிப் பத்திரம் என்பவற்றுடன் சமூகம் கொடுக்க வேண்டும்.

மேலதிக விபரங்களுக்கு 0672261340, 0771507888, 0777397115. ஆகிய தொலைபேசிகளுடன் தொடர்பு கொள்ளவும்.

0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா