இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

12/22/2013

சம்மாந்துறை பிரதேச சபையின் 2014ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றம்.

(எம.ரீ.எம்.பர்ஹான்)
சம்மாந்துறை பிரதேச சபையின் 2014ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் அன்மையில் சம்மாந்துறை அமிர் அலி பொது நூலக கேற்போர் கூடத்தில் பிரதேச சபை தவிசாளர் அல் ஹாஜ் ஏ.எம்.எம்.நொஷாட் அவர்களினால் சமர்பிக்கப்பட்து.

இன் நிகழ்வில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு அங்கத்தவர்கள் ஐவரும், ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர்கள் மூவரும், ஐக்கிய தேசிய கட்சியை சார்ந்த ஒரு உருப்பினரும் கலந்து கொண்டு ஏகமனதாக 2014ம் ஆண்டிற்கான வரவுத்திட்டத்திற்கு ஆதரவளித்தனர்.
இவ்வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடத்தக்க முக்கியமான அம்சங்களாக,

01. இந்நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட 2014ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் குறிப்பிட்டதற்கு அமைவாக எமது சபையிற்கு மாதாந்தம் ரூபா:1000000.00 வீதம் ஆண்டுவருமானமாக ரூபா:12000000.00 வருமானமாக கிடைக்கவுள்ளது. இவ் வருமானம் எமதுசபை வருமான திரட்டில் பெரும்பங்கினை வகிக்கின்றதுஇஇத்தொகையினைக் கொண்டே 2014ம் வருடத்திக்கான இப்பிரதேசத்தின் சகல அபிவிருத்தி வேலைகளையும் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

02. இப்பிரதேசத்தில் 17925 குடும்பங்கள் இருக்கின்ற போதிலும்; 8000 குடும்பங்கள் மட்டுமே வரியிறுப்பாளர்களாக உள்ளனர். இந்த அடிப்படையில் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கான பிரதான வருமானப் பகுதியாகக் காணப்படுகின்ற சோலை வரியானது புதிய வரி மதிப்பீட்டிற்கு அமைவாக ரூபா:4000000.00 அறவிடக் கூடிய தொகையை மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது, இச்சபையின் அனுமதிக்கப்பட்ட ஆளணியினைக் கொண்டு இவ்வரி வருமானத்தை திரட்டுவதானது பாரிய சவாலாகவும் உள்ளது.

03. பிரதேச சபையினால் சேகரிப்படுகின்ற திண்மக்கழிவுகளில் 60 - 80 வீதமான உக்கக்கூடிய கழிவுகளாக காணப்படுவதனால் இக்கழிவுகளைக் கொண்டு சேதனப்பசளை தயாரிப்பதன் மூலம் மேற்படி சுமையைக் குறைக்கும் அதேவேளை இவற்றின் மூலம் வருமானத்தை பெறுதல்இ சூழலைப்பாதுகாத்தல் ஆகிய நிலைகளை ஏற்படுத்தும் பொருட்டு சேதனப்பசளை தயாரிக்கும் நிலையமொன்றினை அமைப்பதற்கான உதவியினை சுற்றாடல் அதிகார சபையின் 'பிலிசறு' திட்டத்தின் கீழ்  பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி இவ்வாண்டில் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றதுஇஅவ்வனுமதி கிடைக்கும் பட்சத்தில் சேதனப்பசளை தயாரிக்கும் நிலையம் பூரணப்படுத்தப்பட்டு 2015ஆம் வருடத்தில் இருந்து சேதனப் பசளை விற்பனை மூலம் வருமானம் கிடைப்பதோடு திண்மக்கழிவுகளை வழங்குவதற்காக காரைதீவுஇஅட்டாளைச்சேனை பிரதேச சபைகளுக்கு செலுத்தும் செலவினமும் குறைவடையும்.

இவ்வாறு முயற்சிகளை மேற்கொள்ளும் அதேவேளை பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கும் வகையில் கழிவுகளின் உருவாக்கத்தினைக் குறைத்தல் கழிவு சேகரிப்பு நடவடிக்கையின் போது தடையின்றி உதவி வழங்கும் போது தான் இச்சேவையில் நாம் எதிர்பார்க்கும் நோக்கத்தினை அடையமுடியும். இதனால் தான் இடமாற்று நிலையத்திற்கான கட்டணமாக தேவைப்படுகின்ற 3 மில்லியன் இவ்வரவு செலவுத்திட்டத்தில் எதிர்பார்க்கும் செலவாக காட்டப்பட்டுள்ளது.

04. இது காலவரையில் மாகாண சபையின் கீழ் இயங்கிவந்த வங்களாவடியில் அமைந்துள்ள ஜனாதிபதி விளையாட்டு தொகுதியினை சிறந்த முறையில் செயற்படுத்தும் பொருட்டு சென்ற 2012ம் ஆண்டு தொடக்கம் சம்மாந்துறை பிரதேசசபை கையேற்றுள்ளது. அத்துடன் இவ் விளையாட்டுத் தொகுதியினை கொண்டு நடாத்துவதற்கான செலவினை திட்டமிட்டுள்ள அதேவேளை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் வேறு சேவைகளை வழங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தையும் சேர்த்து மொத்தமாக இவ்வாண்டிற்கு ரூபா:1.4 மில்லியனை வருமானமாகவும் உத்தேசிக்கப்பட்டள்ளது.

05. சம்மாந்துறை பிரதேச சிறுவர்களின் நலன்கருதி அவர்களுடைய ஒற்றுமையினையும்இ மனஉறுதியினை மேம்படுத்தும் நோக்கில் பல பகுதிகளில் சிறுவர்பூங்கா அமைப்பதற்;கு இவ்வரவு செலவுத்திட்டத்தில் ரூபா:1000000.00 நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.

06. அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் மஹிந்த சிந்தனையின் கீழ் பெண்களின் சுயதொழில் ஆற்றலினை மேம்படுத்தும் நோக்கில் பெண்களுக்கான சிறுகடன் உதவி வழங்கும் திட்டத்திற்கு அமைய எமது சபையின் வரவு செலவுத்திட்டத்தில்        ரூபா: 1000000.00 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

07. சம்மாந்துறையில் கல்வி வளர்ச்யினை மேம்படுத்தும் நோக்கில் புதிய பாலர்பாடசாலை, அறிவகம் மற்றும் நூலகஅபிவிருத்தி போன்ற நலன்புரி செலவீனங்களுக்காக மொத்த செலவில் 9வீத நிதி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது.

08. எமது பிரதேசமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தினை விவசாயத்தில் தங்கியுள்ளதால் அவர்கள் மழைகாலங்களில் விவசாய வடிகான்(வடிச்சல்)யினை சீற்செய்வதற்காகவும்இ பொதுவடிகான்களை அமைப்பதற்காகவும் டுடுனுகு

09. திட்டத்தின் கடன் உதியுடன் JCB கொள்வனவுசெய்வதற்காக இவ்வரவுசெலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மற்றும் ஊழியர்களின் நலன்கருதி புதிய முச்சக்கரவண்டி ஒன்று கொள்வனவு செய்யவதற்கு இவ்வரவுசெலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

10. இவ்வரவு செலவுதிட்டமானது சேவை நோக்கத்தினை பிரதானமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. பிரதேச சபையின் செலவுகளை ஈடுசெய்கின்ற நிதிப்பங்களிப்பான தண்டப்பணமும்இ முத்திரைத்தீர்வையும் உரிய நிறுவனங்களிடமிருந்து வரவேண்டிய நிலுவைகளை இவ்வருடத்தில் பெறலாம் என உத்தேசிக்கப்பட்டு வரவு செலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
 

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா