இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

12/05/2013

சம்மாந்துறையில் புலமை வெற்றியாளர்களை பாராட்டும் விழா

(தாஹ நளீம் ,ஹனீபா )

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களை பாராட்டு நிகழ்வு சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தில் 2013.12.04 இன்று நடைபெற்றது.

இந் நிகழ்வு பாடசாலையின் அதிபர் ரீ.எம். தௌபீக் அவர்களின்  தலைமையில் நடைபெற்றதுடன்  பிரதம அதிதியாக சம்மாந்துறையின் புதிய வலயக்கல்விப் பணிப்பாளர் ஆளுயு. ஜலீல்இ மற்றும் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான றகீம்,ஆர்ஆ. லாபீர், உதவிக் கல்விப் பணிப்பாளர் காதர் மற்றும் சமாதனக்கல்வி இணைப்பாளர். ஏ.ஏ. முகம்மட், ஆசிரிய ஆலோசகர்  கைறுன்னிஸா அகமட் ஆகியோர் கலந்து சிறப்பித்ததுடன் மாணவர்களை வளப்படுத்திய ஆசிரியர்களான  றகீமா மன்சூர், ஏ.பீ. பரீதா, எஸ்.எல். மன்சூர்,  அமீறா றிம்லான் ஆகியோருடன் இணைந்து சித்தி பெற்ற 41 மாணவர்களுக்கு நினைவுச்சின்னமும் ஆசிரியர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டது.

இம்முறை கூடுதலான மாணவர்களை சித்தியடை வைத்த பெருமையும் இப்பாடசாலையைச் சாறும். அத்துடன் 190 புள்ளிகளைப் பெற்ற மாணவனான யுசுணு. ஹனீன் அவர்களுக்கு விசேட பாராட்டுக்களும் பெற்றோர்களால் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வு சிறப்பாக நடைபெறுவதற்குரிய ஏற்பாடுகளை  அதன் பிரதி அதிபர் ஏ.எம்.தாஹாநழீம் முன்னின்று நடத்தினார்.

இந்நிகழ்வினை சித்தியடைந்த மாணவர்களின் பெற்றார்களினால் ஏற்பாடு செய்யப்பட்டது.0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா