இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

12/12/2013

'திவிநெகும' மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும்....

(ஹனீபா)


சார்க் நாடுகளுக்கிடையில் வருமைமட்டம் குறைந்த நாடாக இலங்கை காணப்படுகின்றது இங்கு 69 வீதமாகவே வறுமை காணப்படுகின்றது. வறுமை கூடிய நாடாக பாக்கிஸ்தான், பங்களாதேஷ;, இந்தியா, நேபாளம் போன்ற நாடுகள் காணப்படுகின்றன என பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் சாந்த பண்டார தெரிவித்ததார். திவிநெகும வாழ்வின் எழுச்சி தேசிய வேலைத்திட்டம் தொடர்பாக அம்பாறை மாவட்டத்தின் கரையோரப்பிரதேசத்திலுள்ள பிரதேச செயலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள், சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிரத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர்களுக்க விளக்கமளிக்கம் மாநாடு அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட உரையாற்றும் பொதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் 2014 ஜனவரி மாதத்திலிருந்து திவிநெகும திணைக்களம் ஸ்தாபிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதனால் எமத நாட்டிலுள்ள 25 ஆயிரம் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் 16 ஆயிரம் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் திவிநெகும அபிவிரத்தித் திணைக்களத்தின் கீழ் வறுமை ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.

2016ம் ஆண்டினை இலக்காகக் கொண்டு பொருளாதார அபிவிரத்தி வேலைத்திட்டக்கினைக் முன்னெடுப்பதற்கான வரவு செலவுத்திட்டம் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்டள்ளது.

இத்திட்டத்தின் மூலம் நாட்டிலுள்ள அனைத்து தரப்பினரும் நன்மை பெறவள்ளனர்.தனிநபர் கொண்ட குடும்பங்களின் நிலை அறிந்து அந்த இடத்திலிருந்து அவர்களைக் கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டங்கள் மன்னெடுக்கப்படவுள்ளளது எனவும் தெரிவித்தார்.

மக்களுக்கு சேவை செய்வதற்காக ஒவ்வொரு துறைகள் ரீதியாக எடுத்துக் கொண்டால் ஒரு கிராமத்தில் சுமார் 50க்கு மேற்பட்ட உத்தியோகத்தர்கள் கடமையாற்றகின்றனர். ஆனால் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள அதிகாரிகள் தங்களது கடமைகளை மிகவும் அர்ப்பணிப்புடனும்,பொறுப்புணர்ச்சியுடனும் சேவையாற்ற வேண்டும்.
இந்த நாட்டிலுள்ள அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படகின்ற சம்பளம்  மக்களின் வரிப்பணம் மாத்திரமன்றி அந்நிய நாடகளிடமிருந்து கடன்கள் பெற்றும் வழங்கப்படுகின்றன.

அண்மையில் எமது நாட்டில் 45 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டள்ளன இவர்களில் 35 ஆயிரம் பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளன எஞ்சியுள்ள பட்டதாரிகளுக்கு 2014ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளனஎனவும் தெரிவித்ததார்
இவ்வைபவத்தில் அம்பாறை மாவட்ட செயலகத்தின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.


 

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா