இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

12/08/2013

மகுடம் நூல் வெளியீட்டு விழா

(வசீர் ஸப்னி)
அட்டாளைச்சேனை தைக்கா நகர் ஸஹ்றா வித்தியாலயத்தின் 52 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மாணவர்களினால் எழுதப்பட்ட மகுடம் நூல் வெளியீட்டு விழாவும், மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் வழங்கும் நிகழ்வும், விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு வைபவமும்

வித்தியாலய அதிபர் எஸ்.எம்.சாஹிர் ஹூசைன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலக உதவிக்கல்விப் பணிப்பாளரும், இலக்கிய மதிப்பிட்டாளருமான எம்.ஐ.எம்.ஹனீபா மற்றும் உதவிக்கல்விப் பணிப்பாளர் எம்.லாபீர் ஆகியோர் கலந்து கலந்து கொண்டார்.

கௌரவ அதிதிகளாக பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் பாடசாலை பழைய மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு மகுடம் நூல் பிரதிகளை நூல் வெளியீட்டுக் குழுவின் தலைவரினால் அதிதிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.அதேபோன்று மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் வழங்கும் நிகழ்வும் இங்கு இடம்பெற்றதுடன், விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பும் இடம்பெற்றது.

பிரதம அதிதியான உதவிக்கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.எம்.ஹனீபா மற்றும் அதிதிகளினால் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இப்பாடசாலை வரலாற்றில் மாவர்களினால் நூல் ஒன்று வெளியீடப்பட்டது இதுதான் முதற்தடவையாகும்.இந்நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்வின் அதிதிகள் இப்பாடசாலையின் வரலாறு மற்றும் அதன் சாதனைகளை விளக்கிக் கூறினார்கள். விழா நிகழ்ச்சிகளை ஆசிரியர் அன்வர் நௌசாத் சிறப்பாக தொகுத்து வழங்கியமை சிறப்பம்சமாகும்.
0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா