இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

12/18/2013

முப்பெரும் விழா

கிழக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகம், உள்ளுராட்சி கிராம அபிவிருத்தி சுற்றாடல் அமைச்சு, பாலர் பாடசாலைக் கல்விப் பணியகம் இணைந்து நடாத்திய முப்பெரும் விழா (16) சம்மாந்துறை மஜீட் மண்டபத்தில் மிகக் கோலாகலமாக இடம் பெற்றது.

கிழக்கு மாகாண பாலர் பாடசாலை செயலாற்றுப் பணிப்பாளர் ஏ.எல்.இப்றாகீம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

மேலும் கிழக்கு மாகாண சுகாதாரஇ சுதேச வைத்தியஇ சமூகசேவைகள்இ சிறுவர் நன்நடத்தைஇ கூட்டுறவுஇ விளையாட்டுஇ தொழில் நூட்பக் கல்வி அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர்இ மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம்இ முதலமைச்சரின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ்இ கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியக தவிசாளர் பொன். செல்வநாயகம்இ பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இவ்விழாவில் பாலர் பாடசாலைகளுக்கு உபகரணங்கள் வழங்கல்இ பயிற்சியை முடித்துக் கொண்ட பாலர் பாடசாலை ஆசிரியைகளுக்கு வழிகாட்டல் கைநூல்கள் வழங்கல்இ சாதனையாளர்களைக் கௌரவித்தல் போன்ற நிகழ்வுகள் இடம் பெற்றன.தமிழ்இ முஸ்லிம்இ சிங்கள பாலர்களின் கண்கவர் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றன.

இங்கு உரையாற்றிய முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீட் ' இதுவரை காலமும் கிழக்கு மாகாணத்திலுள்ள பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு ஒரு முறையான வழிகாட்டி நூல் இருக்கவில்லை.

சிறந்த பயிற்சிகள் இருக்கவில்லை. ஆனால் இன்று அவர்களுக்கு முறையான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. கிழக்கு மாகாணம் முழுவதற்குமான ஒரே வழிகாட்டியை அறிமுகம் செய்துள்ளோம்.

இனி இவ்வாசிரியர்களிடம் பயிற்றுவிக்கப்படும் சிறுவர்கள் இந்த நாட்டின் சிறந்த பிரஜையாகஇ சிறந்த கல்விமான்களாகஇ எங்களை வழிநடத்தக் கூடிய நல்லவர்களாகஇ வல்லவர்களாக வருவார்கள் என்பதில் ஐயமில்லை' எனத் தெரிவித்தார்.

மாகாண அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் உரை நிகழ்துகையில் ' கிழக்கு மாகாணத்தில் 3000 பாலர் பாடசாலை ஆசிரியைகள் இருக்கின்றனர். அவர்களின் தியாகங்களுக்கு விலை பேச முடியாது.

ஆனால்இ அவர்களுக்கு ஊக்குவிப்புத் தொகையாக மாதமொன்றுக்கு ஒருவருக்கு 3000ரூபாவாவது வழங்க வேண்டும் என எமது முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இவ்வாறு ஒருவருக்கு மாதம் 3000ரூபா வழங்க வேண்டுமென்றாலும் 90இ00இ000ரூபாய் பணம் தேவையாகவுள்ளது. எனவேஇ இவ்வருடத்திலிருந்து எமது சபை ரூபாய் ஒரு கோடியை இவ்வாசிரியர்களுக்கு ஊக்குவிப்புக் கொடுப்பனவாக வழங்குவதற்குஒதுக்கீடு செய்ய வேண்டுமென எமது முதலமைச்சரிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்' என்றார்.





0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா