இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

12/03/2013

நாவிதன்வெளி பிரதேச செயலகப்பிரிவுக்கு உட்பட்ட நாவிதன்வெளி சமுர்த்தி வங்கி உடைப்பு Photos

(ஹனீபா)
அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேச செயலகப்பிரிவுக்கு உட்பட்ட நாவிதன்வெளி சமுர்த்தி வங்கி நேற்று முந்தினம் (01) நள்ளிரவு  இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளது.

சமுர்த்தி வங்கியின்  முகாமையாளர் அறையின் பின்புறமாகவுள்ள ஜன்னல் கண்னாடி உடைக்கப்பட்டு அதன் கிறில் கம்பிகள் வெட்டப்பட்டு உள்ளே நுளைந்த நபாரினால் ஆவண தீக் காப்புப் பெட்டி உடைக்கப்பட்டுள்ளது அத்துடன் பணக்காப்புப் பெட்டியினையும் உடைப்பதற்கான பல முயற்சிகள் அனைத்தும் மேற் கொள்ளப்பட்டும் பணக்காப்புப் பெட்டி உடைக்கப்படமுடியாத நிலையில் வேறு வங்கியின் எந்தவொரு ஆவணங்களுக்கும் சேதம் விளைவிக்காது சம்பவத்துடன் சம்மந்தப்பட்ட நபர்கள் திரும்பிச் சென்றுள்ளனர்.

நேற்றுக் (02) காலை வங்கி உத்தியோகத்தர் ஒருவர் வங்கிக் கடமையின் நிமித்தம் வங்கியினை திறக்கின்ற போது வங்கி உடைக்கப்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டதை அடுத்து சம்பவம் தொடர்பாக பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச பொலிஸ் நிலையம் என்பவற்றுக்கு தகவல் வழங்கியதை அடுத்து சவளக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் மற்றும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவு மேப்ப நாய்கள் சகிதம் விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர்.

தொடர்ந்தும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன சம்பவ இடத்துக்கு அம்பாறை மாவட்ட சமுர்த்தி இணைப்பாளர் ஐ.அலியார் சகிதம் அம்பாறை மாவட்ட கணக்காய்வு அதிகாரிகள் மற்றும் மேற்பார்வை அதிகாரிகள் சமுகம் கொடுத்து சம்பவம் தொடர்பாக அறிந்து கொண்டனர்.


0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா