இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/02/2014

அம்பாறை மாவட்ட செயலகத்தில் 2014ம் வருடத்தினை வரவேற்று பல்வேறு நிகழ்வுகள்

(ஹனீபா)
அம்பாறை மாவட்ட செயலகத்தில் 2014ம் வருடத்தினை வரவேற்று பல்வேறு நிகழ்வுகள் நோற்று (2014.01.01) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன மாவட்ட செயலாளர் நீல் டி அல்வீஸ் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றன.

சுகல மதங்களையும் பிரதிபலிக்கும் வகையிலான மதநிகழ்வுகளுடன் ஆரம்பமான இந்த வைபவத்தில் அரச உத்தியோகத்தர்கள் 2014 தமது கடமைகளை ஏற்று மக்களுக்கு புதிய பரிமானத்துடனான சிறந்த அற்பணிப்புடனான சேவையினை வழங்கும் முகமான உறுதிப்பிரமான நிகழ்வு சிங்கள, தமிழ் மொழிகளில் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மாவட்ட செயலகத்தில் சிறந்த முறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற சிரேஷ;ட அதிகாரிகள் நினைவுப்பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மரக்கன்று

கள் நடப்பட்டதுடன் பொதுமக்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கு மாமரக்கன்றுகள் மற்றும் புதிய இன முருங்கை, மிளகு போன்ற மரக் கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த வைபவத்தில் மாவட்ட செயலாளர் நீல் டி அல்வீஸ், மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.விமலநாதன், பிரதம கணக்காளர், ஐ.எம்.ஹூசைன், பிரதம பொறியியலாளர் எம்.றாசீக், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.அன்வர்தீன்,மாவட்ட சமுர்த்தி உதவி ஆணையாளர் யூ.பி.எஸ்.அனுறுத்தபியதாச உட்படமாவட்ட செயலகத்தின் சகல திணைக்களங்களினதும் உயரதிகாரிகள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா