இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/02/2014

சபாப் அமைப்பினால் ஏழை மாணவர்களுக்கு கற்றல் உபாகரணம் வழங்கி வைப்பு

(ஹனீபா)
ஜம்இய்யதுல் சபாப் அமைப்பினால் அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில், அட்டாளைச்சேனை, ஒலுவில், நிந்தவூர், அக்கறைப்பற்று, சம்மாந்துறை அகிய பிரதேசங்களில்; இருந்து தெரிவு செய்யப்பட்ட தந்தையர்களை இழந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (02) மாலை சம்மாந்துறை அல்உஸ்வா மதரசா வளாகத்தில் நடைபெற்றது.

இந்த வைபவத்தில் 156 மாணவர்களுக்கு மிகவும் பெறுமதிமிக்க கற்றல் உபகரணங்கள் அடங்கிய பொதியினை சம்மாந்துறை அல்உஸ்வா மதரசாவின் ஸ்தாபகரும் அதிபருமான மௌலவி ஐ.எல்.எம்.முஸ்தபா அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

இவ்வைபவத்தில் மதரசா நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா