இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/04/2014

சம்மாந்துறையை சேர்ந்த அலியார் இமாமுதீன் சமதான நீதவானாக சத்தியப்பிரமானம்

(ஹனீபா)
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட கல்லரிச்சல்-03ம் பிரிவில் வசிக்கும் அலியார் இமாமுதீன் என்பவர் கல்முனை நீதி நிர்வாக மாவட்டத்துக்கான சமதான நீதவானாக அண்மையில் கல்முனை மாவட்ட நீதிபதி எம்.பி.முகைடீன் முன்னிலையில் சத்தியப்பிரமானம் செய்து கொண்டார்.

நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் சிபார்சுக்கு அமைவாக இந்நியமனத்தைப் பெற்றுக் கொள்ளும் இவர் சம்மாந்துறை கல்லரிச்சல் பிரதேசத்தை சேர்ந்த அலியார், பாத்தும்மா தம்பதியர்களின் சிரேஷ;ட புதல்வாராவர் இவர் சம்மாந்துறை இல்மதீனா வித்தியாலயத்தில் தனது கல்வியினை மேற்கொண்டுள்ளார்.

இவர் பல்வேறு சமூக சேவை அமைப்புக்கள் மற்றும் பொது அமைப்புக்களில் இணைந்து செயற்படும் ஒரு சமூகசேவையாளர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா