இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/07/2014

லயன்ஸ் கழகத்தினால் கௌரவிப்பு நிகழ்வு


(ஹனீபா)
சர்வதேச லயன்ஸ் கழகத்தின் 306 சீ2 மாவட்டத்தின் கல்முனைநகர லயன்ஸ் கழகத்தின் உறுப்பினரான மைஹோப் குழுமத்தின் முகாமைத்துவபணிப்பாளர் லயன் லயன் சித்தீக் நதீர் கிழக்கு மாகாணத்தின் பிராந்தியம்-09ன் வலயம் 01,02ன் முதலாவது எம்.ஜே.எப் ஆக நேற்று (05) கொழுப்பு கலதாரி ஹொட்டலில் நடைபெற்ற 'மெல்வின் ஜோன்ஸ் பெலோவ் நைட்' நிகழ்வின் போது அதற்கான சின்னம் சூட்டி கௌரவிக்கப்பட்டார்.

கிழக்கு மாகாணத்திலிருந்து இந்த எம்.ஜே.எப் பட்டத்தை பெற்றுக் கொள்ளும் இரண்டவாது நபர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். 'மெல்வின் ஜோன்ஸ் பெலோவ்' நிதியம் என்பது சர்வதேச லயன்ஸ் கழகம் காணப்படுகின்ற 230க்கு மேற்பட்ட நாடுகளில் வாழுகின்ற வறுமையுடன் காணப்படும் குழந்தைகள் மற்றும் முதியவர்களின் கண்பார்வை குறைபாடுடைய மக்களின் கண்களுக்கான வில்லைகள் மற்றும் அதனோடு சம்மந்தப்பட்ட கண்ணாடிகள் என்பவற்றை வழங்குகின்றதும் சிறுவர்களின் பாரிய சத்திர சிகிச்சைகள்,செயற்கை அங்கங்களையும் பெற்றுக் கொடுத்தல் பொன்றபாரிய உதவிகளை செய்யும் ஒரு நிதியமாகவும் அந்த நிதியத்துக்கு பாரியளவு பங்களிப்புச் செய்யும் லயன்ஸ் கழக உறுப்பினர்களுக்கு அதன் ஸ்தாபகரின் ஞாபகாத்தமாக வழங்கப்படுகின்ற ஒரு சர்வதேச கௌரவ பட்டமாகும்.

'மெல்வின் ஜோன்ஸ் பெலோவ்' வேலைத்திட்டத்தின் தவிசாளர் கலாநிதி லயன் பிரேமசிறி ஹேவாவசம் பி.எம்.ஜே.எப் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் பிரதம அதிதியாக சர்வதேச லயன்ஸ் கழகத்தின் 306 சீ2 மாவட்டத்தின் ஆளுணர் லயன் லசந்த பெரேரா.எம்.ஜே.எப் கலந்த கொண்டார். கௌரவ அதிதியாக முன்னாள் சர்வதேச தலைவர் லயன் மஹேந்திர அமரசூரிய. பீ.எம்.ஜே.எப் கலந்து கொண்டார்.

இலங்கையின் பலபாகங்களிலுமுள்ள லயன்ஸ் கழகங்களில் பிராந்திய,வலய,கழக கீ உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.





0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா