இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

2/27/2014

நாளைமுதல் 14 நாட்களுக்கு இறைச்சிக்கடைகளை மூட கல்முனை முதல்வர் நிஸாம் காரியப்பர் தலைமையில் தீர்மானம்

-எம்.வை.அமீர்,எஸ்.எம்.எம்.ரம்ஸான்,எம்.ஐ.சம்சுதீன்-

கடந்த 2014-02-19ம் திகதி கால்நடை உற்பத்தி சுகாதாரப் பணிபாளர் அவர்களால் விடுக்கப்பட்ட அதிவிசேட வர்த்தமான அறிக்கையின் கீழ் விலங்குகளுக்கு கால்வாய் நோய் பரவியுள்ளதாகவும் இதில் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தை நோய் தொற்றுப்பிரதேசமாகவும் பிரகடனப்படுத்தி பசுமாடுஇஎருமைமாடுஇசெம்மறியாடுஇவெள்ளாடு மற்றும் பன்றி போன்ற விலங்குகளை  கால்வாய் நோய் பரவக்கூடிய விலங்காகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த அடிப்படையில் கடந்த சில நாட்களாக அம்பாறை மாவட்டத்தின் சில பிரதேசங்களில் குறித்த நோய் தொற்றுதலுக்கு உள்ளான விலங்குகள் இனம்காணப்பட்டதால் குறித்த பிரதேசங்களில் கால்நடைகளை உணவுக்காக அறுப்பதை அந்தந்த உள்ளுராட்சி சபைகள் தடை செய்திருந்தன.

இன்று கல்முனை முதல்வர் நிஸாம் காரியப்பரின் தலைமையில் கல்முனை மாநகரசபை எல்லைக்குள் கால்நடை வியாபாரம் செய்வோர் மற்றும் இறைச்சிக்கடை உருமையாளர்களுடனான விசேட சந்திப்பு ஒன்று கல்முனை மாநகரசபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கல்முனை மாநகரசபை ஆணையாளர் ஜே.லியாகத்அலி,கல்முனை மாநகரசபையின் பிரதம சுகாதார வைத்தியர் எம்.சீ.எம்.மாஹிர்  மற்றும் முதல்வரின் செயலாளர் ரீ.எல்.எம்.பாரூக் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கல்முனை மாநகரசபை எல்லைக்குள் குறித்த நோய் தொற்று இடம்பெற்றிராத போதும் சம்மாந்துறை மற்றும் காரைதிவு போன்ற அயல் பிரதேசங்களில் குறித்த நோயினால் பீடிக்கப்பட்ட கால்நடைகள் இனம்கானப்பட்டுள்ளதாலும் குறித்த நோய் காற்றின் ஊடாக பரவக்கூடியது ஆகையாலும் கல்முனை மாநகர எல்லைக்குள் எதிர்வரும் 14 நாட்களுக்கு கால்நடைகளை உணவுக்காக அறுப்பதை தவிர்த்து கால்நடைகளை உன்னிப்பாக அவதானித்து அவற்றுக்கு உரிய தடுப்பு மருந்துகளை வழங்குவது எனவும்இ இரண்டு வாரங்களின் பின்னர் மீண்டும் கூடி எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் சம்மந்தமாக முடிவு எடுப்பது எனவும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. 



0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா