இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

2/27/2014

கல்முனை நகர மண்டபம் தனியார் கம்பனி ஒன்றுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது

(ஹனீபா)
கல்முனை மாநகர சபைக்கு சொந்தமான கல்முனை நகர மண்டபம் தனியார் கம்பனி ஒன்றுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது இதற்கான ஒப்பந்தம் நேற்று (26) மாலை கல்முனை நாநகர முதல்வரின் செயலகத்தில் முதல்வர் சட்டத்தரணி எம்.நிசாம் காரியப்பர் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத்அலி, மாநகரசபையின் சிரேஷ;ட வேலை அத்தியட்சகர் எம்.ஐ.ஏ.மஜீட்,ம நகர சபையின் பதில் சட்ட அதிகாரி சட்டத்தரணி எம்.பி.எம்.பௌஷhன், முதல்வரின் செயலாளர் ரீ.எல்.எம்.பாறுக், குறித்த கம்பனி உரிமையாளர்களும் கலந்த கொண்டனர்.

மாதம் ஒன்றுக்கு நாற்பதாயிரம் என்ற அடிப்படையில் ஆறு மாதங்களுக்கான வாடகைப்பணம் இரண்டு இலட்சத்து நாற்பதாயிரம் குறித்த கம்பனியினால் மாநகர சபைக்கு செலுத்தப்பட்டது.

இந்த மண்டபம் 1994ம் ஆண்டு உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டு பொது நிகழ்வுகளுக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் அலுவலகப் பாவனைக்காகு குத்தகைக்கு விடப்பட்டிருந்தது.

2010ம் ஆண்டு கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அதன் சொந்தக் கட்டிடத் தொகுதிக்கு மாற்றப்பட்டதை அடுத்து இம்மண்டபம் பாழடைந்த நிலையில் இருந்து வந்தது.

பின்னர் பல இலட்சம் செலவில் புனரமைப்பு செய்யப்பட்டும் பொதுமக்களின் தேவைக்கு பயன்படாது மூடப்பட்டு கானப்பட்டன.

இந்நிலையிலேயே முதல்வர் சட்டத்தரணி எம்.நிசாம் காரியப்பர் நகர சபையின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன் இம்மண்டபத்தை குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.




0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா