இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

2/25/2014

இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் செனெட உறுப்பினர் அசாம் ஆற்றிய உரை

(எம்.ரீ.எம்.பர்ஹான்)
கடந்த 6வது இளைஞர் பாராளுமன்ற கூட்டத்தொடரில் 'சமாதானம் அபிவிருத்தி மற்றும் மனித உரிமைகள் - தற்போதய இளைஞர் தலைமுறையூடான சவால்கள் மற்றும் புதிய வாயப்புக்கள்' என்ற தலைப்பில் அம்பாறை மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் செனெட உறுப்பினரும், ஆயுள்வேத வைத்திய மாணவருமான ஏ.ஆர்.அஸ்ஸாம் அவர்கள் ஆற்றிய உரையின் பிரதி

கடந்த 30 வருடகால கொடூர யுத்தத்தின் மூலம் அங்கவீனர்களாகவும், உறவை, மானம், சொத்து, இழந்து நிற்கும் மக்களும் உயிரை இழந்து சமாதியாக உள்ள எமது தேசத்தவரும் எனறு தெரியாமல் உயிரை விட்ட பச்சிளம் குழந்தைகளும் எமக்கு மறக்க முடியாத யுத்தத்தின் வடுவை எமக்கு தந்து 'எதிர்காலத்தில் யுத்தம் வேண்டாம்' என்ற எதார்தத்தை நம் அனைவருக்கும் உணரச்செய்துள்ளது.

பௌத்தம், இந்து. இஸ்லாம், கிறிஸ்தவம், சமயங்கள் சண்டையிடுவதற்காக அல்ல மாறாக மாணிட சமாதானத்திற்காக என்ற உண்மையை இளைஞர்கள் ஆகிய நாம் தேசத்திற்கு சொல்ல வேண்டும். எமது தேசத்தின் சமாதானத்தை குழப்பதற்கு வெளிநாட்டு சக்திகள் செயற்படுகிறதோ இல்லயோ உள்நாட்டில் செயற்பாட்டில்

எமது தேசத்தில் புதிதாக முளைத்துள்ள இனவாத குழுக்கள் மூலம் பள்ளிவாசல்கள் இந்து கிறிஸ்தவ ஆலயங்கள் ஏன்? பௌத்த விகாரைகள் கூட தாக்கப்பம் செயற்பாடானது 1956ம் ஆண்டு தனிச்சிங்கள் சட்டம் மூலம் உருவான யுத்தத்தை ஆரம்பிக்கின்ற செயற்பாடாக நான் காண்கிறேன்.

கௌரவ சபாநாயகர் அவர்களே 'டு.வு.வு.நு இயக்கம் இருந்திருந்தால் நல்லம் அது எமக்கு பாதுகாப்பு' என்று மக்களை சிந்திக்கும் அளவு அழுத்தம் இடம் பெறும் நிலையை ஓர் இலங்கையர் என்ற அடிப்படையில் எதிர்க்கிறேன்.

ஏனெனில் 'சிங்கள மொழியில் கல்வி கற்கின்ற அனைத்து கற்கைகளும் தமிழ் மொழியில் கற்பதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது' சமுத்திரவியல் பல்கலைகழகம், இலங்கை தொழில்நுட்ப கல்லூரி, இலங்கை திறந்த பல்கலைகழகம்

கௌரவ சபாநாயகர் அவர்களே 1974ம் ஆண்டு கிழக்கிலங்கையில் முதல் முதலாக உருவாக்கப்பட்ட தொழில்நுட்ப கல்லூரியான எங்களது சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரியானது எதிர்வரும் ஏப்ரல் மாதம் 40ம் ஆண்டை பூர்த்தி செய்கின்ற நிலையில் நிர்வாககட்டடம் விரிவுரைக்கட்டடம், கணணி மையம், வாசிகசாலை போன்ற வசதிகள் அற்று அனாதைகளாக சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரி காணப்படுகின்றது.

கடந்த அம்பாறையில் நடைபெற்ற 'தயட்டகிருள' நிகழச்சித்திட்டத்திற்கு 212 மில்லியன் ஒதுக்கப்பட்டாலும் சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரிக்கு வெருமனே 1 லட்சம் மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளது.

2500 அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்திருந்தாலும் 800 மாணவர்களே மாத்திரமே உள்வாங்கக் கூடிய நிலையும் ஏனைய 1700 மாணவர்களுக்கு கட்டட வசதி குறைபாட்டினால் வாய்ப்பு வழங்க முடியாதுள்ளது. என்பதை கருத்திக் கொண்டு அக்குறைப்பாட்டை நிவாத்தி செய்யுமாறு இளைஞர் விவகார திறன் அபிவிருத்தி அமைச்சரிடம் வேண்டுகிறேன்.

கௌரவ சபாநாயகர் அவர்களே அனைத்து உலக மனித உரிமை பிரகடனத்தை உள்வாங்கிய 1978ம் ஆண்டு  அரசியல் அமைப்பின் அத்தியாயம் 03, அத்தியாயம் 04, அத்தியாயம் 14, 15, குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துமே வெறுமனே புத்தகத்தில் மாத்திரமே உள்ளது.

ஏனெனில் மாணவர்களுக்கு மேல் மாகாணத்திற்கு 7.5மூ யும், கிழக்கு மாகாணத்திற்கு 4.3மூ ம் வழங்கப்படுகின்றது. அதன் விளைவு மேல் மாகாணத்தில் 18மூ ம், கிழக்கு மாகாணத்தில் 10மூ மாத்திரமே உயர்தரத்தில் சித்தியடைகின்றனர்.

அத்தோடு கைக்தொழில் பயிற்சிற்கு பதிவு செய்ப்பட்ட அரச நிறுவணங்கள் ஊடாக மேல் மாகாணத்தில் 35000 மாணவர்களும் கிழக்கு மாகாணத்தில் வெறுமனே 7500 மாணவர்களுக்கு மாத்திரமே வாய்ப்பு வழங்கப்படுகின்றது.
அவ்வாறாயின் மேல் மாகாணத்தில் உள்ளவர் மாத்திரந்தான் இலங்கயைரா? நாங்கள் இலங்கையர் இல்லையா?

இலங்கை உண்iமையிலே ஆசியாவின் ஆச்சரியம்தான் ஏனெனில் பிறக்கின்ற ஒவ்வொரு சிசுவும் கடனாளியாக பிறக்கின்றது. 28மூ நீண்டகால சுகவீனத்திற்கு உட்பட்டவரும், 25மூ குறைந்தளவானா வருமானம் உடையவரும் 8மூ மின்சார வசதியற்றவரும் 3மூ குடிநீர் வசதியற்றவரும் 7மூ மலசல கூட வசதியற்றவரும் 3மூ சேரிப்புரம் உள்ளது ஆசியாவின் ஆச்சரியம்தான்.

இதை விட ஆச்சரியம் 2000ம் ஆண்டு 4193908 மாவணவர்களின் தொகை 2010ல் 3940072 மாணவர்களாக குறைவடைந்துள்ளது. அத்தோடு 2000ல் ஆண்டில் 10615 பாடசாலைகள் 2010ல் ஆண்டில் 10502 பாடசாலைகளாக குறைவடைந்தது ஆசியாவின் ஆச்சரியம்தான்.

இலங்கை பிரஜைகளாகிய எமக்கு பக்கச்சார்பற்ற நடுநிலையான நிலை மிககொடூரமானது சில தனியார் இலத்திரனியல் ஊடகங்கள் பக்கச்சார்பற்றவர்கள் என மாறுதட்டடி கொண்டாலும் தங்களின் நிறுவணத்தின் அரசியலே செய்கின்றனர். அத்தோடு எமக்கு நாட்டின் ஒழுக்கத்திற்கும் ஆப்பு வைக்கின்றனர். ஆனால் எமது அச்சி ஊடகங்;கள் பாராதக்கது.

கௌரவ சபாநாயகர் அவர்களே பௌத மக்கள் பஞ்ச சீலத்தையும் இந்து மக்கள் கீதாசாரத்தையும் இஸ்லாமிய மக்கள் புனித அல்குர்ஆன் கிறிஸ்தவ மக்கள் 10 கட்டளைகளையும் பின்பற்றகின்ற போது வேறுபட்ட சமயத்தின் ஊடாக ஒன்றுபட்ட இலங்ககையை உருவாக்க முடியும்.
             

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா