இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

3/01/2014

கமு/சது வீரத்திடல் அல் ஹிதாயா வித்யாலய இல்ல விளையாட்டு போட்டி

(எம்.ரீ.எம்.பர்ஹான்)
சம்மாந்துறை வலயத்திற்குட்பட்ட கமு/சது வீரத்திடல் அல் ஹிதாயா வித்யாலய இல்ல விளையாட்டு போட்டி   அண்மையில் அதிபர் எம் எல் பதுதீன் தலைமையில் பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.

இவ் இல்ல விளையாட்டு போட்டியில் ஹிறா(சிவப்பு), அறபா(நீலம்), மினா(பச்சை) ஆகிய அணிகள் கலந்துகொண்டன. இறுதியில்  அறபா (நீலம்) அணி முதலிடத்தையும் மினா(பச்சை) மற்றும் ஹிறா(சிவப்பு), ஆகிய அணிகள் முறையே இரண்டாம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.

இவ்விழாவிற்கு அதிதிகளாக சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹாசீம், உதவிக்கல்விப்பணிப்பாளர் (உடற்கல்வி) ஏ.முஸ்ற்றாக் அலி, பிரதி அதிபர்கள், பகுதிப் பொறுப்பாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 

0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா