இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

3/25/2014

சம்மாந்துறை மக்களை தலைமை தாங்கக் கூடிய அரசியல் தலைமைகள் சம்மாந்துறையிலிருந்தே உருவாக்கப்பட வேண்டும் : எம்.ஐ.எம்.மன்சூர்


(ஹனீபா)
சம்மாந்துறை மக்களை தலைமை தாங்கக் கூடிய அரசியல் தலைமைகள் சம்மாந்துறையிலிருந்தே உருவாக்கப்பட வேண்டும் மாற்றான் தாய் மனப்பாங்குடன் செயற்பட்டுவரும் பிர பிரதேசங்களைச் சேர்ந்த அரசியல் தலைமைகளால் சம்மாந்துறை மண்னுக்கு அரசியல் தலைமைதாங்க ஒரு போதும் முடியாது என கிழக்கு மாகாண சகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் சூழுரைத்தார்.

இன்று (23) சம்மாந்துறை அல்மர்ஜான் மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற மஹிந்த சிந்தனையின் கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்ற நிறைவான இல்லம் வழமான தாயகம் எனும் தேசிய நிகழ்சிசித்திட்டத்தின் கீழான கிராமிய மக்கள் ஒன்று கூடலும் நடமாடும் சேவையும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் நடைபெற்ற நடமாடும் நிகழ்வை ஆரம்பித்து வைத்து தொடர்ந்து உரையாற்றுகையில் சம்மாந்துறை மண் ஆண்டான்டு காலமாக அரசியல் தலைமைகளால்; அலங்கரிக்கப்பட்டு அபிவிருத்தி கண்டு வந்த இந்தப் பிரதேசம் இன்று எமது மக்கள் செய்த துரோகத்தனமான சதிகளினால் தேசிய அரசியலில் எமது மக்களுக்காக பேசக்கூடிய அரசியல் தலைமைகள் இல்லாது சம்மாந்துறை என்ற அம்பாறை மாவட்டத்தின் முதுகெலும்பாக காணப்படகின்ற பிரதேசம் அநாதரவாக்கப்பட்டுள்ளது.

எமது அரசியல் தலைமை மர்ஹூம் அன்வர் இஸ்மாயீல் அவர்களின் மரணத்தின் பின்னர் எமது ஊரின் அரசியல் தலைமையாக தாரைவாக்கப்பட்ட அமைச்சர்கள் எமது மக்களின் அபிலாiஷகள் எதையும் பூர்த்தி செய்யமல் எமது மக்களுக்கு அரசியல் தலைமை வழங்கிக் கொண்டிருக்கின்றது என்பது வேதனைக்குரிய விடயமாகும் இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது இந்த ஊரின் இந்த மக்களின் தேவைகளையும் பிரச்சினைகளையும் இனங்கண்டு அதற்குரிய தீர்வை பெற்றுக் கொடுக்கக் கூடிய திராணி இந்த ஊரில் பிறந்த ஒருவருக்குத்தான் இருக்க முடியும்.

இதனை செய்வதற்கு சம்மாந்துறையை சேர்ந்த நௌஷhட்டாக இருந்தாலம் சரி, அமீராக இருந்தாலும் சரி, மன்சூராக இருந்தாலும் சரி அல்லது இந்த ஊரைச் சேர்ந்த யாராவது ஓருமகன் தான் தலைமைதாங்கமுடியும்.

இந்த ஊரின் தலைமையினை பொறுப்பேற்றுள்ள அமைச்சர் கடந்த மூன்று ஆண்டகளுக்கும் எமது ஊரின் அபிவிருத்தி தொடர்பாக குறைந்தது ஒரு மாதத்துக்கு ஒரு கூட்டத்தையாவது கூட்டியிருந்தால் 36 கூட்டங்கள் நடத்தப்பட்டிருந்திருக்கும் அவ்வாறு நடத்தப்பட்டிருப்பின் இங்கு குறிப்பிடப்பட்ட மலசல கூடப்பிரச்சினை, வீடில்லாப்பிரச்சினை, நீர்பாசன பிரச்சினை பொன்ற பலதரப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றிருக்க முடியும் இதுகால வரைக்கும் எங்களது வற்புறுத்தல்களுக்கு அமைவாக இரன்டு மூன்று கூட்டங்கள் மாத்திரம் நடத்தப்பட்டுள்ளது அதுவும் எமது பிரதேசத்தின் அபிவிருத்திக்காக அரசாங்கத்தினால் ஒதுக்கப்படுகின்ற நிதியினை கூறுபோடுவதற்காக பங்கிடுவதற்காக கூட்டப்படுகின்றது இவ்வாறு பங்கீடு செய்வதறகான அரசியல் தலைமைகள் எங்களுக்கு தேவையில்லை பொதுமக்கள் மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் எதிர்காலத்தில் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்ததார்.

ஆரசியல் அற்ப சுகங்களுக்காக சிலர் தமது அரசியல் அதிகாரங்களை சூரையாடி வருகின்றனர்.

அரசாங்கம் எமது நாட்டின் ஜனாதிபதி அவர்களின் தூரநோக்கு சிந்தனைக்கு அiவாக இந்த நாட்டிலுள்ள 14022 கிராமசேவகர் பிரிவுகளிலும் இவ்வாறான மக்கள் ஒன்று கூடல்களையும் நடமாடும் சேவைகளையும் நடாத்தி நிறைவான இல்லம் வழமான தாயகம் என்ற தாரக மந்திரத்துக்க அமைவாக மக்களின் தேவைகளை அறிந்து அவர்களுடைய காலடிக்கு சென்று நிறைவு செய்கின்ற ஒரு மகத்தான பணியினை முன்னெடுத்து வருகின்றனர்.

பொதுமக்களாகிய நாம் எமக்குக் கிடைக்கின்ற சாதகமான சூழ்நிலைகளை பயன்படுத்தி எம்மை வழப்படத்திக் கொள்ள வெண்டும் எனவும் அமைச்சர் மன்சூர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஏனைண திணைக்களங்களின் அதிகாரிகள் உள்ளுர் அரசியல் தலைமைகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த வைபவத்தில் சிரேஷ;ட பிரஜைகள் சிலர் கௌரவிக்கப்பட்டனர் அத்துடன் சிப்தொர புலமைப்பரிசில், மற்றும் சமுர்த்தி நிவாரண கொடுப்பனவுகளும் அதிதிகளால்; வழங்கி வைக்கப்பட்டன.











0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா