இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

4/23/2013

பொதுபலசேனாவுக்கு யஹியாகானின் அதிரடி பதில்


பொதுபலசேனா அமைப்பினர் எமலோகத்தில் காரியாலயம் திறந்தாலும்  முஸ்லிம்கள் ஒருபோதும்அஞ்சப்போவதில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பணிப்பாளரும் அம்பாறை மாவட்ட பொருளாளருமாகிய ஏ.சீ.யஹியாகான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற அம்பாறை மாவட்டத்தின் முகவெற்றிலை என வர்ணிக்கப்படுகின்ற கல்முனை பிரதேசத்தில் பொதுபலசேனாவின் காரியாலயத்தினை அமைக்கவுள்ளதாக அதன் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் டிலந்த விதானகே அண்மையில் தெரிவித்திருந்த நிலையில் இவ்வாறான இனவாதத்தை தூண்டக்கூடிய செயற்பாடுகளை வன்மையாக கண்டிப்பதாகவும், பொதுபலசேனா அமைப்பு ஒரு அரசாங்கமல்ல இவர்கள் எமலோகத்தில் அலுவலகம் திறந்தாலும் முஸ்லிம்கள் அச்சம் கொள்ளவோ, அலட்டிக்கொள்ளவோ தேவையில்லையென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பணிப்பாளரும் அம்பாறை மாவட்ட பொருளாளருமாகிய ஏ.சீ.யஹியாகான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பொதுபலசேனா அமைப்பு பௌத்த தர்மத்தை நேசிக்கின்றவர்கள் என்றால் 30 வருட கால கொடிய யுத்தத்தினால் இந்நாடு படுமோசமாக அழிவடைந்தது மட்டுமல்லாது பல உயிர்களையும் பலிகொண்டது.

இன்று யுத்தம் முடிவடைந்த பின் மக்கள் சுதந்திர காற்றினை சுவாசிக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் இனங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்தக்கூடிய வகையில் கீழ்தர செயற்பாடுகளில் ஈடுபடாமல் இன மத பேதங்களை மறந்து இந்நாட்டை முன்னேற்றுவதற்கு ஏனையவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டும். மாறாக மதத்தின் பெயரால் இந்நாட்டை பிளவுபடுத்துகின்ற எந்த செயற்பாட்டிலுல் யாரும் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது என்றார்.

அமெரிக்காவின் பொஸ்டன் ஏற்பட்ட குண்டு வெடிப்புச் சம்பவத்தினை பயங்கரவாத செயற்பாடல்ல என ஒபாமா கூறுகிறார். ஆனால் பொதுபலசேனா அமைப்பினர்கள் அமெரிக்காவுக்கு அறிவுரை கூறுகிறார்கள் இது அல்கைதா, ஜிஹாத் போன்ற முஸ்லிம் பயங்கரவாத அமைப்புக்களின் செயற்பாடு. மேலும் இம் அமைப்புக்கள் இலங்கை மற்றும் வங்காளதேஸம் ஆகிய நாடுகளில் செயற்படுகின்றது.

இவ் அமைப்பின்  செயற்பாட்டுக்கு இலங்கையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை ஆதரவு வழங்கி வருகின்றது  என குறிப்பிட்டதானது முஸ்லிம்கள் மீது இவ்அமைப்பு கொண்டுள்ள காழ்புணர்ச்சியை காட்டுவது மட்டுமல்லாது, சர்வதேச மட்டத்தில் இந்நாட்டு முஸ்லிம் மக்களுக்கு கலங்கத்தினை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கின்ற இவ்வாறான செயற்பாடுகளையும், முஸ்லிம்களின் மதிப்புமிக்க  அமைப்பான அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையினை அர்த்தமில்லாமல் மதிகெட்ட தனமாக விமர்சிப்பதை உடன் நிறுத்த வேண்டும்.


குறுகிய சிந்தனைகளை கொண்டு செயற்படும் இவ் அமைப்பின் நடவடிக்கையினால் பெரும்பான்மை கண்ணியத்துக்குரிய பௌத்த மதத்தலைவர்கள், அரசியல்வாதிகள், மற்றும் புத்தீஜீவிகள் கவலைகள் தெரிவிப்பதுடன் வெட்கித் தலைகுனிகின்றார்கள்.

சர்வதேசத்தின் சதிவலையில் சிக்கித் தவிக்கும் சந்தர்ப்பத்தில் முஸ்லிம் மக்களும், முஸ்லிம் நாடுகளும் கைகொடுத்துதவியதை இவர்கள் மறந்துவிட்டார்களா? அப்போது இவ் பொதுபலசேனா அமைப்பு எங்கே சென்றிருந்தது. நாம் பொறுமையாகவும, நிதானமாகவும் செயற்படுகின்றோம். ஆனால் பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு என்பதை புரிந்து கொள்ளவேண்டும். மேலும் முஸ்லிம் சமூகம் பிளவுபடாமல் ஒன்றுபட்டு ஒரணியில் நின்று செயற்பட்டால் எந்தச் சக்தியாலும் எம்மை எதுவும் செய்துவிட முடியாது என்பதை மனதில் வைத்துச் செயற்பட வேண்டுமென்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் எனவும்; ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பணிப்பாளரும் அம்பாறை மாவட்ட பொருளாளருமாகிய ஏ.சீ.யஹியாகான் மேலும் தெரிவித்தார்.

1 comments:

  • Mubeen says:
    April 23, 2013 at 3:34 AM

    ippothan thookkathilirunthu viliththar pola.

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா