(எம்.ரீ.எம் பர்ஹான்)
நாடு பூராகவும் தொடர்ச்சியான மழை பெய்துவருவதனால் போக்கு வரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் விபத்துக்களும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் மாவடிப்பள்ளி பாலத்தில் மேலாக நீர் பெருக்கெடுத்ததினால் இன்று (2014.12.23) பி.ப 3.00 மணியளவில் லொரி ஒன்று வெள்ளத்தினால் அடித்துச்செல்லப்பட்டது.
இது தொடர்பாக மேலும் அறியவருவதாவது
கல்முனை அம்பாறை பிரதான வீதியுடாக அம்பாறையை நோக்கி சென்ற லொரி விபத்தக்குள்ளகியதுடன் அதில் பயனித்த சாரதி மற்றும் உதிவியாளர் மயிரிலையில் உயிர்தப்பினர.; மேலும் இங்கு போக்குவரத்து பொலிஸ் பிரிவினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பொலிஸார் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் வாகணங்களை செலுத்தும் சாரதிகள் அவதானமாக செலுத்துவதுடன் முற்ச்க்கர வண்டி, மோட்டார் சைக்கில் மற்றும் துவிச்சக்கர வண்டிகள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன் வாகணங்களை அவதானமாக செலுத்துமாறும் கேட்டுக்கொண்டனர்.
அத்துடன் முற்ச்க்கர வண்டி, மோட்டார் சைக்கில் மற்றும் துவிச்சக்கர வண்டிகளை கொண்டு செல்வதற்க்காக விஷேட போக்கவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
அந்த விசேட போக்கு வரத்து ஏற்பாட்டுக்கு கட்டணம் Rs. 100 அறவிடப்படுகிறது.