இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

4/20/2014

உயர்தரம் கற்கும், கற்கவிருக்கும் மாணவ மாணவிகளுக்கான கல்வி வழிகாட்டல் கருத்தரங்கு

-எம்.ஐ.சம்சுதீன், எம்.வை.அமீர்-
இம்முறை கல்விப்பொதுத்தராதர சாதாரணதர  பரீட்சைக்கு தோற்றி கல்விப்பொதுத்தராதர உயர் தரத்துக்கு செல்ல காத்திருக்கும் மாணவ மாணவிகளுக்கான கல்வி வழிகாட்டல் கருத்தரங்கு 2014-04-19 ம் திகதி கல்முனை சாஹிரா கல்லுரி பழைய மாணவர்கள் சங்க கொழும்பு கிளையின் அனுசரணையுடன் கல்முனை மஹ்முத் மகளிர் கல்லூரியின் சேர் ராசிக்பரீட் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியல் பீட பீடாதிபதி கலாநிதி எஸ்.எம். ஜுனைதீன் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீட பீடாதிபதி கலாநிதி சபீனா இம்தியாஸ்,  தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வர்த்தக பீட சிரேஷ்ட விரிவுராயாளர் ஹம்சியா அப்துல் ரவுப், சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய கலாநிதி என்.ஆரீப் அவர்களும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலைப்பீட விரிவுரையாளர் ஏ.றமீஸ் மற்றும் தொழில்பயிற்சி அதிகார சபையின் பிரதிப்பணிப்பாளர் ஏ.ஏ. ஜாபீர் போன்றோரும் பங்கு கொண்டிருந்தனர்


கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் அதிபர் பீ.எம்.எம். பதுர்தீன் மற்றும் கல்முனை மஹ்முத் மகளிர் கல்லூரியின் அதிபர் எம்.நவாஸ் போன்றோரும் இந்நிகழ்வில் இணைந்து கொண்டிருந்தனர்.

»»  read more

தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்திலும் கல்நாட்டு விழா

-எம்.வை.அமீர்-
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 360 மில்லியன் செலவில் புதிதாக கட்டிமுடிக்கப்பட்ட அஷ்ரப் ஞாபகார்த்த நூலகம் மற்றும் வர்த்தக முகாமைத்துவ பீடத்துக்கான கட்டிடத்தொகுதிகளை, மாணவர்களின் பாவனைக்கு திறந்து வைப்பதற்காக அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் இன்று காலை 10.30 மணிக்கு ஒலுவிலுக்கு வருகை தந்திருந்தார்.  

இந்நிகழ்வுகளைத் தொடர்ந்து ஒலுவில் வளாகத்திலும் சம்மாந்துறை வளாகத்திலுமாக இரண்டு மாணவர்களுக்கான விடுத்திதொகுதிகளுக்கும் கால்கள் நடப்பட்டன.


சம்மாந்துறையில் அமைந்துள்ள பிரயோக விஞ்ஞான பீடத்தில் சுமார் 131 மில்லியன் ரூபாய்கள் செலவில் மூன்று மாடிகளைக்கொண்டதாக உயர் வசதிகளுடன் கூடிய விடுதித்தொகுதிக்கான கல்நாட்டு நிகழ்வின் பிரதம அதிதியாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பீ.திசாநாயக்க அவர்கள் கலந்துகொண்டதுடன் உயர்கல்வி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் ஜயந்த நவரத்ன அவர்களும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் அவர்களும் பதிவாளர் எச்.எம்.ஏ.சத்தார் அவர்களும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மூதவை உறுப்பினர்களும் பிரயோக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி சபீனா இம்தியாஸ், பிரயோக விஞ்ஞான பீட சிரேஷ்ட பிரதிப்பதிவாளர் பீ.எம்.முபீன்  மற்றும் திணைக்களத்தலைவர்கள் விரிவுரையாளர்கள் கல்விசாரா ஊழியர்களும் கலந்து கொண்டனர்.»»  read more

முஸ்லிம் லிபரல் கட்சி ஏனைய கட்சிகளுடன் இணக்க அரசியலில் ஈடுபடும் முஸ்லிம் லிபரல் கட்சித்தலைவர்- எம்.இஸ்மாயில்

-எம்.வை.அமீர்-
சமூகத்துக்காக சேவை செய்ய எந்த கட்சியோ அல்லது தனிநபரோ முன்வருவார்களானால் அவர்களை அரவணைத்து அவர்களுடன் இணைந்து சேவை செய்வதற்காகவே முஸ்லிம் லிபரல் கட்சி உதயம்மகியுள்ளதாக அக்கட்சியின் தலைவர் சிரேஷ்ட கணக்காளர் எம்.இஸ்மாயில் தெரிவித்தார்.

முஸ்லிம் லிபரல் கட்சி சார்பாக அக்கட்சியின் கொள்கைகள் செயற்பாடுகள் தொடர்பாக ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு இன்று முஸ்லிம் லிபரல் கட்சியின் சாய்ந்தமருதில் அமைந்துள்ள அதன் செயலகத்தில் இன்று (2014-04-19) ம் திகதி இடம்பெற்றது.

இங்கு கருத்துத் தெரிவித்த அக்கட்சியின் தலைவர் சிரேஷ்ட கணக்காளர் எம்.இஸ்மாயில், லிபரல் என்பது ஒருவரது உரிமையில் மற்றவர் தலையிடது சுதந்திரமாக வாழ்வது என்பதாகும், இந்த அடிப்படையில் தேவைகள் அதிகரித்துள்ள இந்தகாலகட்டத்தில் மக்கள் நலத்திட்டங்களுக்காக அம்மக்களின் கல்வி, சுகாதாரம், விவசாயம் கடற்றொழில் மற்றும் உட்கட்டமைப்பு போன்ற திட்டங்களுக்காகவும் முஸ்லிம்களின் இருப்பு அவர்களது நிலபுலன்களை அவர்களே நிர்வாகிக்கும் நிலையை உருவாக்குதல் போன்ற தேவைகளுக்காகவும் முஸ்லிம் லிபரல் கட்சி செயற்படும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அக்கட்சியின் தலைவர் எம்.இஸ்மாயில் ஏனைய கட்சிகளை தங்கள் ஒருபோதும் விமர்சிக்கப்போவதில்லை என்றும், அக்கட்சிகளால் முன்னெடுக்கப்படும் மக்களுக்கு பிரயோசனப்படக்கூடிய விடயங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி செயட்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

கட்சிகளின் அதிகரிப்பால் மக்கள் மத்தியில் ஜனநாயக ரீதியான செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக கூறிய தலைவர் முஸ்லிம்களுக்கு தென்கிழக்கு அலகு ஒன்றை பெற்றுக்கொள்ள தனது கட்சி பாடுபடும் என்றும் தெரிவித்தார். முஸ்லிம்களின் தேவைகளை நிறைவேற்றுவது தொடர்பில் மாண்புமிகு ஜனாதிபதி அவர்களுடனும் எதிக்கட்சிகளுடனும் பேசி அவர்களது இணக்கப்பாட்டுடன் இம்மக்களின் தேவைகளை நிறைவேற்றி வருவதாகவும் எதிர்காலத்திலும் அவ்வாறே செயட்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

அண்மையில் முஸ்லிம்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அமைதியின்மை தொடர்பாக கருத்து வெளியிட்ட முஸ்லிம் லிபரல் கட்சித்தலைவர்- எம்.இஸ்மாயில் குறித்த பிரச்சினையுடன் தொடர்புபட்ட அமைப்புக்கு இஸ்லாமிய மார்க்கத்தில் அவர்கள் எதிர்க்கும் விடயங்களை குறித்து  தெளிவாக அறிவார்கள் என்றால் இஸ்லாம் மார்க்கத்தின் மேன்மையை அறிவார்கள் என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது அக்கட்சியின் செயலாளர் எல்.றியாஸ் உட்பட அக்கட்சியின் ஆதரவாளர்களும் வருகை தந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

»»  read more

4/19/2014

மாவடிப்பள்ளி பாலத்தில் ராணுவ ஜீப் விபத்து


(எம்.ரீ.எம்.பர்ஹான்) 
ஜனாதிபதியின் கிழக்கு மாகாண வருகை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வாகனம் ஒன்று மாவடிப்பள்ளியில் இன்று சனிக்கிழமை காலை வாகன விபாத்துக்குள்ளகியது.
வெல்லவாயவிலிருந்து ஒலுவில் இராணுவ முகாமை நோக்கிச் சென்று கொண்டிருந்த இராணுவ ஜீப், சம்மாந்துறை மாவடிப்பள்ளி நெடுஞ்சாலையில் இரண்டாவது சின்ன பாலத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது வண்டியில் அமர்ந்திருந்த இராணுவ வீரர் படுகாயமடைந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
»»  read more

கல்முனையில் நடமாடும் சேவை


(ஏஎம்பி)
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலில் 'நிறைவான இல்லம் வளமான தாயகம்' எனும் தொனிப் பொருளில் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் 'கிராமிய மக்கள் ஒன்று கூடலும் நடமாடும் சேவையும்' கல்முனை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் கல்முனை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் இன்று இடம்பெற்றது.

கல்முனைக்குடி 08 – 14 வரையாக கிராம சேவகர் பிரிவுகளுக்கு இடம்பெற்ற இந்நடமாடும் சேவை, பிரதேச செயலாளர் .எம். ஹனீபா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத்தொகுதி அபிவிருத்திக்குழு தலைவருமான சட்டத்தரணி கௌரவ எச்.எம்.எம். ஹரீஸ் பங்குகொண்டு இந்நடமாடும் சேவையினை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மக்கள் பிரதிநிதிகள் குழுவின் செயலாளர் .எம். பறக்கத்துள்ளாஹ் அதிபர்கள், ஆசிரியர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், விளையாட்டுக் கழகங்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்நடமாடும் சேவையில் மக்கள் எதிர்நோக்குகின்ற நிர்வாக பிரச்சினைகளுக்கு தீர்வுகள் காணப்பட்டதுடன் இவ்வருடம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினூடாக கிராமம் கிராமமாக மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்திட்டங்கள் பற்றி அந்தந்த கிராம மக்களுடனும், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிளுடனும் கலந்துரையாடப்பட்டது.
»»  read more

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா