நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் இம் மாதம் 10 ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் 378 குடும்பங்களைச் சேர்ந்த 1586 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் நுவரெலியா மாவட்ட இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் இணைப்பாளர் மஞ்சுள தெரிவித்தார்.
இந்த இயற்கை அனர்த்தத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட 32 குடும்பங்களைச் சேர்ந்த 141 பேர் ஏழு தற்காலிக இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதவேளை நுவரெலியா மாவட்டத்தில் இயற்கை அனர்த்தத்தினால் 265 வீடுகள் பகுதி அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் லிந்துலை மவுசல்ல கீழ்ப்பிரிவு தோட்டத்தில் 13 ஆம் திகதி விறகு சேகரிக்கச் சென்ற 55 வயது ஆண் ஒருவர் வழுக்கி விழுந்து உயிரிழந்த சம்பவமொன்றும் இடம் பெற்றுள்ளதாக நுவரெலியா மாவட்ட இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் இணைப்பாளர் மஞ்சுள மேலும் தெரிவித்தார்.
Bas AD
0 comments:
Post a Comment