பட்டதாரிப் பயிலுனர்களுக்களுக்கு தேசிய தொழில் தகைமை (என்.வீ.கியூ) மேம்பாடு தொடர்பான பயிற்சி செயலமர்வு இன்று (13) வியாழக்கிழமை சம்மாந்துறைப் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.வை.எம்.றிபாத் தலைமையில் நடைபெற்றது.
பட்டதாரிப் பயிலுனர்களின் அறிவுத்திறனை மேலும் வலுவூட்டி மேம்பாடடையச் செய்யும் நோக்கூடன் இளைஞர் அலுவல்கள் திறன் அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் மாவட்ட தொழில் பயிற்சி நிலையத்தினால் நடாத்தப்பட்ட இச் செயலமர்வில் வளவாளர்களாக சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், நிந்தவூர் மாவட்ட தொழில் பயிற்சி நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ஏ.ஏ.ஜாபிர், சம்மாந்துறை தொழில் பயிற்சி நிலையத்தின் பொறுப்பதிகாரி ஏ.ஆர்.எம்.ராஜீ , எம்.எச்.எம்.ஹஷPர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment