(ஹனீபா,சியாட்)
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு யூனொப்ஸ நிருவனத்தினதும்; சம்மாந்துறைப் பிரதேச சபையினதும் அனுசரனையுடன்; சம்மாந்துறை பிரதேச செயலகம், வலயக் கல்வி பணிமனை, சம்மாந்துறைப் பொலிஸ் நிலையம், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் என்பன என்பன இணைந்து ஏற்பாடு செய்த விழிப்புணர்வு ஊர்வலமும், கூட்டமும் இன்று (04) செவ்வாய்கிழமை சம்மாந்துறையில் நடைபெற்றது.
சம்மாந்துறைப் பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாட் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு காலை 9.00மணிக்கு சம்மாந்துறை பூ மரத்துச் சந்தியிலிருந்து ஆரம்பமான ஊர்வலம் சம்மாந்துறை அப்துல் மஜீட் நகர மண்டபத்தை வந்தடைந்ததுடன் அங்கு உலக சுற்றடல் தினம் தொடர்பான உரைகளும் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் யூனொப்ஸ் நிறுவனத்தின் முகாமைத்தவப் பணிப்பாளர் திருமதி ஹனா, பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், அம்பாறை மாவட்ட சுற்றாடல் அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.நஜீப், பிரதேச சபையின் உப தவிசாளர் எம்.ஏ.கே.றஹ்மான், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜயந்த தஹனக்க, உதவித்திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஹம்சார், பிரதேச சபையின் செயலாளர் ஏ.ஏ.சலீம் உட்பட பொதுச் சுகாதாரப் பரீசோதகர்கள்,கிராம உத்தியோகத்தர்கள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள், மாணவர்கள், பெதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Great