(ஹனீபா)
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிவில் பாதுகாப்புக் குழு உறுப்பினர்களுக்கான முன்னேற்ற மீளாய்வு விளிப்புணர்வுக் கூட்டம் (1906.2.13) சம்மாந்துறை அப்துல் மஜீட் நகர மண்டபத்தில் சம்மாந்துறைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜயந்த தஹனக்க தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதீதியாக அம்பாறை மாவட்ட பொலிஸ் மா அதிபர் கபில ஜெயசேகர கலந்து கொண்டார். கௌரவ அதீதிகளாக சம்மாந்துறைப் பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷஷாட், பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், கல்முனைப் பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் காமிணி தென்னக்கோன், உதவிப் பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப் உட்பட சம்மாந்தறைப் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட நிந்தவூர், அட்டப்பள்ளம், காரைதீவு, மாளிகைக்காடு, மாவடிப்பள், சம்மாந்துறை, மல்வத்தை, வளத்தாப்பிடடி, மஜீட்புரம் போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த மீளாய்வு விளிப்புணர்வுக் கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆரயப்பட்டதுடன் எதிர்வரும் காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.
0 comments:
Post a Comment