இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

10/25/2013

மனைவியை நிர்வாணமாக்கி தாக்கிய கணவன்: ஆர்ப்பாட்டத்தையடுத்து கைது

• •

இந்தியாவில் தானேவில் குடிபோதையில் மனைவியை நிர்வாணமாக்கி கூர்மையான ஆயுதத்தால் தாக்கிய கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
 
இச்சம்பவம் குறித்து தெரியவருவது, மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள பிவான்டியைச் சேர்ந்தவர் கமால் அன்சாரி(30). அவருக்கு தனது 28 வயது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குடித்துவிட்டு வந்த அன்சாரி தனது மனைவியை வீட்டில் இருந்து வெளியே இழுத்து வந்துள்ளார்.
 
தெருவில் வைத்து அவரை நிர்வாணமாக்கி கூர்மையான ஆயுதத்தால் அவரின் உடலில் பல்வேறு இடங்களில் குத்தியுள்ளார்.
 
இதில் காயம் அடைந்த அந்த பெண் பிவான்டியில் உள்ள இந்திரா காந்தி நினைவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
இந்த விவகாரத்தில் அன்சாரி மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து அவருக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தரக் கோரி நேற்று போராட்டம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து பொலிஸார் அன்சாரியை நேற்று கைது செய்துள்ளனர்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா