(எம்.ரீ.எம்.பர்ஹான்)
கடந்த சில காலங்களாக சம்மாந்துறைக்குள் யானைகள் புகுந்து வீடுகள்,மதில்கள்,பயிர்தோட்டங்கள் மற்றும் எல்லாவற்றுக்கும் மேலான மனித உயிர்களையும் காவுகொண்டிருந்ததை யாவரும் ஊடகங்கள் வாயிலாக அறிந்திருப்பீர்கள்.
இவ்வாறு பல்வேறு அட்டகாசம் புரிந்த யானைகளின் தொல்லை மீண்டும் ஏற்படலாம் என்ற அச்சம் சம்மாந்துறை மக்கள் மனதில் நிலைகொண்டுள்ளது. இதற்க்கு சாண்றாக மீண்டும் சம்மாந்துறை சேகப்பற்று வட்டைக்குள் யானைக்கூட்டம் நிலைகொண்டுள்ளது.
வன விலங்கு அதிகாரிகளே! இது உங்கள் கவணத்திற்கு
அச்சத்தில் வாழும் மக்கள் துயர் துடைக்க யானைக்கூட்டங்களை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு சம்மாந்துறை சமூகம் தயவாய் வேண்டுகிறது.

0 comments:
Post a Comment