இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

10/25/2013

சம்மாந்துறையில் மினி சூறாவெளி : கூரை ஓடுகள் தூக்கி வீசப்பட்டள்ளது

• •
(ஹனீபா,எம்.ரீ.எம்.பர்ஹான்)
இன்று (25) மாலை வீசிய பலத்த காற்று (மினி) சூறாவெளி காரணமாக அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பிரதேசத்திலுள்ள பல வீடுகள், கடைகள என்பவற்றின் கூரைகளும், மற்றும் அல்மர்ஜான் மகளிர் கல்லூரியின் மூன்றாவது மாடியின் கூரை ஓடுகள் தூக்கி வீசப்பட்டள்ளதுடன் மரங்களும் முறிந்து வீழ்ந்துள்ளன.

அத்துடன் அம்பாறை பிரதான வீதியில் விளினையடியில் வந்து கொண்டிருந்த  பிக்கப் வாகனம் ஒன்று இந்த மினி சூறாவெளி காரணமாக திடிரென பிரதான வீதியில் மூன்று சுற்றுக்கள் சுழன்றதுடன் பின்னர் பாதையோரத்தில் இருந்த மின் கம்பத்துடன் மோதி பிக்கப் வாகனம் சேதமடைந்துள்ளதுடன் மின் கம்பம் முழுமையாக சேதமடைந்துள்ளது வாகனத்தில் வந்தவர்கள் தெய்வாதீனமாக எந்தவித ஆபத்துக்களும் இன்றி உயிர் தப்பியுள்ளனர்.






0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா