பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கி வருகின்ற இலங்கை சமுர்த்தி அதிகார சபையின் 2013ம் வருடத்துக்கான அம்பாறை மாவட்டத்தின் தமிழ் பிரதேசங்களுக்கான சமுர்த்தி உற்பத்தி வர்த்தக கண்காட்சியும் விற்பணையும் எதிர் வரும் 26ம் திகதி காலை 8.30 தொடக்கம் மாலை வரைக்கும் சம்மாந்துறை அல்மர்ஜான் மகளிர் கல்லூரி வளாகத்தில் பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ளது.
சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் நடைபெறவுள்ள இவ் வர்த்தக கண்காட்சியில் அம்பாறை மாவட்டத்தின் அமைச்சர்கள், மாகாண அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் தலைவர்கள், மாவட்ட செயலாளர், மாவட்ட சமுர்த்தி உதவி ஆணையாளர் உட்பட திணைக்களங்களின் தலைவர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இவ்வர்த்தக கண்காட்சியில் அம்பாறை மாவட்டத்தின் பொத்தவில் தொடக்கம் நாவிதன் வெளி பிரதேசம் வரைக்குமான பிரதேச செயலகங்களிலிருந்தும் உற்பத்திப் பொருட்கள் காட்சிப்படுத்தப்படுவதுன் விற்பணையும் இடம் பெறவுள்ளதாக சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.பி.எம்.ஹூசைன் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment