இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

2/09/2014

இஸ்லாத்தை பின்பற்றுவதில் பெருமையடைகின்றேன் : இசையமைப்பாளர் யுவன்

(VI)
இஸ்லாம் மதத்தை பின்பற்றுவதில் தான் பெருமையடைவதாகவும் மூன்றாவது திருமணம் செய்து கொள்ளவில்லை எனவும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.
 
 
அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, 
 
'நான் மூன்றாவது தடவையாக திருமணம் செய்துகொள்ளவில்லை. அது நம்பகத்தன்மையற்ற செய்தி. மேலும் நான் இஸ்லாத்தை பின்பற்றுகிறேன். அதனால் நான் பெருமையடைகின்றேன்.
 
எனது முடிவிற்கு எனது குடும்பம் ஒத்துழைப்பு வழங்கியுள்ளது இதனால் எனது தந்தைக்கும் எனக்கும் எவ்விதமான கருத்து முரண்பாடுகளும் இல்லை என அதில் தெரிவித்துள்ளார்.


»»  read more

துபாயில் இடம்பெற்ற இலங்கை கிரிக்கட் வீரர்களை பாரட்டும் விழா

துபாயில் உள்ள இலங்கை தூதுவராதலயமும் துபாய் வாழ் இலங்கை கிரிக்கட் அமைப்பும் சேர்ந்து இலங்கை கிரிக்கட் வீரர்களை கௌரவிக்கும் முகமாக அன்மையில் ஒரு பாராட்டு விழாவினை  Palm Jumeirah Atlantic நட்சத்திர ஹோட்டலில் ஏற்பாடு செய்து இருந்தது.

மிக விமர்சையாக இடம்பெற்ற  இந் நிகழ்வில் இaலங்கை கிரிக்கட் அணியின் தலைவர் அஞ்சலோ மத்யூ இ மகேல ஜயவர்த்தன இ குமார் சங்கக்கார மற்றம் தேசிய கிரிக்கட் அணியின் சகல வீரர்களும் கலந்து கொண்டனர்.

துபாயில் உள்ள இலங்கைக்கான பிரதித்திதூதுவர்  எம்.எம்.அப்துல் றஹீம் இ இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டு செயலாளர் நிசாந்த ரணதுங்க உட்பட துபாயில் உள்ள கிரிக்கட் துறையோடு தொடர்புடைய உயர் பிரதி நிதிகள்இ அதிகாரிகள் மற்றும் சார்ஜா கிரிக்கட் மைதானத்தின் உரிமையாளர் அஷ் சேக் புகாதீர் முகம்மட் என பல்வேறு பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.






»»  read more

2/05/2014

துபாயில் இடம் பெற்ற 66வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

இலங்கையின் 66வது சுதந்திர தின உத்தியோக பூர்வ கொண்டாட்டம் பெப்ரவரி நான்காம் திகதி செவ்வாய் கிழமை அன்று காலை துபாயில் உள்ள இலங்கை பிரதி தூதுவராலயத்தில் மிக விமர்சையாக நடைபெற்றது.

தூபாயில் உள்ள இலங்கை பிரதித்தூதுவர் அப்துல் றஹீம் தேசிய கொடியை ஏற்றி நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார். தேசிய கீதம் மங்கள விளக்கேற்றல்இ தேசிய வீரர்களுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி மற்றும் ஜனாதிபதி இ பிரதம மந்திரி இ வெளிவிவகார அமைச்சர் அவர்களின் ஆசிச்செய்திகள் ஆங்கிலம்இ சிங்களம்இ தமிழ் மொழிகளில் பிரதித்தூதுவர் அப்துல் றஹீம் மற்றும் ஏனைய உத்தியோகத்தினரால் வாசிக்கப்பட்டது. மேலும் பௌத்த இந்து இஸ்லாமிய கிறீஸ்தவ சமயப்பெரியார்கள் நாட்டுக்கும் துபாய் வாழ் இலங்கையர் அனைவருக்கும் மும் மொழிகளிலும் ஆசி வழங்கினர்.

அப்துல் றஹீம் தனது பிரதான உரையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள நிரந்தரமான அமைதியை வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு தீய சக்திகள் சீர்குழைக்க முனைவதாகவும் அதனை இலகுவாக வெற்றி கொள்வது இலங்கையர் அனைவரினதும் மதஇ மொழி வேறுபாடு அற்ற ஒற்றுமையின் மூலமே முடியும் என்று எடுத்துறைத்தார் மேலும் இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் இடையிலான தொடர்பு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களின் அன்மைய விஜயத்தின் மூலம் மேலும் நெருக்கம் அடைந்திருப்பதாகவும் விளக்கினார்.

துபாய் வாழ் இலங்கையர்கள் சுமார் 300பேர் அளவில் 04.02.2014 அன்று வேலை தினமாக் இருந்தும் சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சியில் பங்கு கொண்டதோடு பிரதித்தூதுவராலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலங்கை மரபு உணவு வகைகளையும் சுவைத்து மகிழ்ந்ததோடு தமது பாரட்டுக்களையும் தெரிவித்தனர்.








»»  read more

11/19/2013

அப்துல் கலாமின் உடல்நிலையில் முன்னேற்றம்


தில்லியில் கடந்த வெள்ளிக்கிழமை திடீரென மயங்கி விழுந்து, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. 

அவர் புது தில்லி ராஜாஜி மார்கில் உள்ள தனது இல்லத்தில் திடீரென மயங்கி விழந்ததையடுத்து, ராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

மயக்கமடைந்து கீழே விழந்ததில் நெற்றிப் பகுதியில் ஏற்பட்ட லேசான காயத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

பூரண குணமடையும் நிலையில் உள்ள அவர் ஓரிரு நாள்களில் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்படுவார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
»»  read more

10/24/2013

சிவாஜி சிலையால் போக்குவரத்துக்கு பாதிப்பா? விளக்கமளிக்குமாறு உத்தரவு


நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலை வைக்கப்பட்டு இருப்பதால், காமராஜர் சாலை போக்குவரத்தில் பாதிப்பு உள்ளதா? என்பது பற்றி போக்குவரத்து பொலிஸ் அதிகாரி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னை உயர்நீதிமன்றத்தில் 2006-ம் ஆண்டு பி.என்.சீனிவாசன் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், காமராஜர் சாலை மற்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில், காந்தி சிலைக்கு முன்பாக நடிகர் சிவாஜி கணேசனின் சிலையை வைப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது. 

போக்குவரத்து காரணங்களுக்காக இந்த சாலையில் சிவாஜி கணேசனின் சிலையை வைக்க அனுமதிக்கக்கூடாது. அதை வேறு ஒரு இடத்தில் நிறுவ அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். 

என்றாலும், அரசு முடிவு செய்திருந்த அந்த இடத்தில் சிவாஜி கணேசனின் சிலை வைக்கப்பட்டது. 

இந்த நிலையில் தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ்குமார் அக்ரவால், நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது. 

மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் ஆர்.காந்தி ஆஜரானார். அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமயாஜி ஆஜரானார். 

சிவாஜி கணேசன் சிலையை ராணிமேரி கல்லூரி முன்பு நிறுவப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள சாலைகளில் போக்குவரத்துக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை என்று அட்வகேட் ஜெனரல் வாதிட்டார். 

இதற்கு மூத்த வக்கீல் காந்தி பதில் அளித்து வாதிட்டபோது, நெடுஞ்சாலைகளில் சிலைகள் நிறுவப்படக்கூடாது. அங்கு சிலை அமைப்பதற்கு அனுமதி கிடைத்திருந்தாலும், போக்குவரத்துக்கு அந்த சிலை இடையூறாக உள்ளது. 

காமராஜர் சாலையில் இருந்து டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலைக்கு வலதுபுறமாக திரும்பும்போது, வாகன ஓட்டிகள் பக்கவாட்டில் பார்க்க முடியாத அளவுக்கு பார்வையை சிலை மறைக்கிறது என்று குறிப்பிட்டார். 

அதைத்தொடர்ந்து நீதிபதிகள், சிவாஜிகணேசன் சிலை குறித்து இப்படி கருத்து கூறப்படுவதால், அந்த பகுதிக்கான போக்குவரத்து பொலிஸ் உதவிக்கமிஷனர் தகுந்த விளக்கமளித்து மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். 

இந்த மனு மீதான விசாரணையை நவம்பர் 13-ம் திகதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
»»  read more

10/08/2013

இது இஸ்லாத்துக்கும் குடும்பத்துக்கும் சரிவராது : நடிகை நஸ்ரியா

(திரைப்படம் இஸ்லாத்துக்கு முரணானது என்பதை நஸ்ரிய உணர மாட்டாரா?-Sammanthurai Web)
தமிழக திரைப்பட நடிகையான நஸ்ரியா தான் நடித்த திரைப்படத்தில் சில காட்சிகளில் தனது விருப்பத்துக்கு மாறாக வேறு ஒருவர் தன்னைப் போல் நடிக்க வைக்கப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். 

அந்தக் காட்சிகள் தனக்கும் தனது குடும்பத்துக்கும் தான் சார்ந்த இஸ்லாமிய மதத்துக்கும் ஒவ்வாத வகையில் இருப்பதாகவும் ஆகவே அவற்றை உடனடியாக நீக்குமாறு தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் உத்தரவிட வேண்டும் என்றும் அவர் சென்னை பொலிஸ் ஆணையரைக் கேட்டிருக்கிறார். 

இவை குறித்து தான் ´´நையாண்டி´´ என்ற அந்தத் திரைப்படத்தின் இயக்குனரான சற்குணத்திடம் முறையிட்டபோது அவர் தன்னை மிரட்டியதாகவும், தயாரிப்பாளரை தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் தனது முறைப்பாட்டில் அவர் கூறியுள்ளார். 

தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் ஒரு சில படங்களில் நடித்துள்ள நஸ்ரியா, சமீபத்தில் நடித்து தமிழில் வெளியாகியுள்ள ´´ராஜா ராணி´´ திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆகியுள்ளார். 

´´நையாண்டி´´ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளதால், அப்படியான காட்சிகள் அந்தப் படத்தில் இருந்தால், அந்தத் திரைபடத்திற்கு தடை விதிக்கவும் நஸ்ரியா கோரியுள்ளார். இயக்குநர் சற்குணம் மறுக்கிறார் 

நடிகை நஸ்ரியாவின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள இயக்குனர் சற்குணம், பாடல் காட்சியில் தான் நடிக்கவில்லை என்று சொன்ன நஸ்ரியா மீடியா நண்பர்களோடு அமர்ந்து படம் பார்த்து, அது தானில்லை என்பதை நிரூபிக்க வேண்டும் என்றும் சவால் விடுத்துள்ளார். 

இந்தத் திரைப்படத்தில் ´இனிக்க இனிக்க´ என தொடங்கும் ஒரு பாடல் காட்சியில் நஸ்ரியா நடித்துள்ளதாகவும், இப்பாடலை படத்தொகுப்பு செய்யும் பொது ஒரு குறிப்பிட்ட இடத்தில், நெருக்கமான காட்சி தேவைப்படுவதாக தான் உணர்ந்ததாகவும், இதற்காக நாயகியை தொடர்பு கொண்டபொழுது, தான் கேரளா மாநிலத்தில் இருப்பதால் அந்த ஒரு குளோஸ்-அப் காட்சியை மட்டும் வேறு யாரையாவது நடிக்கவைத்து முடித்து கொள்ளுங்கள் என்று கூறியதாகவும் சற்குணம் கூறியுள்ளார். 

இவ்வாறு கூறிய நடிகை இப்போது தனக்கு சுயவிளம்பரம் தேடி கொள்வதற்காகவே இவ்வாறு புகார் அளித்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளார். 

இப்படி திரைப்படம் வெளியாகும் சமையங்களில் உருவாகும் சர்ச்சைகள் விளம்பர நோக்கத்திற்கானவையே என்ற கருத்து சினிமா விமர்சகர்கள் மத்தியில் காணப்பட்டாலும், வேறு சிலரோ இது கடுமையான கண்டனத்துக்கு உரியது என்றும் தீர்வு காணப்படவேண்டிய பிரச்னை என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
»»  read more

10/07/2013

ஆண்களுக்கு 13 வயது வளர்ப்பு மகளை திருமணம் செய்வதற்கு அனுமதிக்கும் சட்டம் - ஈரானில் நிறைவேற்றம்


ஈரானில் ஆண்கள் தமது 13 வயது வளர்ப்பு மகள்மாரை திருமணம் செய்து கொள்வதற்கு அனுமதிக்கும் சட்டமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

இச்சட்டமானது அந்நாட்டின் புதிய ஜனாதிபதி ஹஸன் ரோவ்ஹானி தனது மிதவாதக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் முன்னேற்றத்தை எட்டவில்லை என்ற கவலையை தோற்றுவித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஈரானிய பாராளுமன்ற உறுப்பினர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்தச் சட்டம் சிறுமிகள் தமது 13 வயதில் தமது வளர்ப்புத் தந்தையையும் 15 வயதுடைய சிறுவர்களையும் திருமணம் செய்வதற்கு அனுமதியளிக்கின்றது.

அதேசமயம் 13 வயதுக்கு குறைந்த சிறுமிகள் தமது தந்தையின் அனுமதியை மட்டுமே பெற்று திருமண பந்தத்தில் இணைய முடியும்.
ஈரானிய ஜனாதிபதி ரோஹ்ஹானி அமெரிக்க ஜனாதி பராக் ஒபாமாவுடன் முக்கியத்துவமிக்க தொலைபேசி உரையாடலை மேற்கொண்டு சில தினங்களில் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈரான் அமெரிக்காவுக்கிடையே நேரடி பேச்சுவார்த்தைகள் இடம் பெற்றமை கடந்த 34 வருடங்களில் இதுவே முதற் தடவையாகும். இது தொடர்பில் ஈரானிலுள்ள நீதிக் குழுவொன்றுக்காக பணியாற்றி வரும் சட்டத்தரணியான ஷாடா சாட்ர் விபரிக்கையில்,தத்தெடுத்த குழந்தையொன்றை திருமணம் செய்ய ஈரானிய கலாசாரத்தின் ஓர் அங்கமல்ல.

இத்தகைய நிகழ்வுகள் ஏனைய உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஈரானில் குறைவாகவே இடம்பெறுகின்றன.ஆனால்,தற்போது நிறைவேற்றப்பட்ட சட்டம் சிறுவர் துஷ்பிரயோகத்தை சட்டபூர்வமாக்குவதாக உள்ளது என்று கூறினார்.

»»  read more

10/05/2013

வீட்டுக்கூரையில் வைத்து பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டேன்- பாடகி மடோனா


நியூயோர்க்கிற்கு வந்த புதிதில் தான் கத்தி முனையில் மிரட்டப்பட்டு பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டதாக பிரபல பாப் பாடகி மடோனா தகவல் வெளியிட்டுள்ளார்.

55வயதாகும் மடோனா தனது இளமைக் கால நிகழ்வுகள் தொடர்பில், ஹார்பெரின் பசார் சஞ்சிகைக்கும மனந்திறந்து பேசுகையில் இதனை தெரிவித்துள்ளார். 

 நியூயோர்க் என்னை இரு கைகளாலும் அரவணைத்து வரவேற்ற நகரம் இல்லை. நியூயோர்க்கிற்கு இடம்பெயர்ந்த முதலாவது வருடம், நான் கத்திமுனையில், வீட்டுக்கூரை ஒன்றில் வைத்து பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டேன். 

எனது வீடு மூன்று முறை கொள்ளையடிக்கப்பட்டது. நான் மிகப்பெறுமதியாக கருதும் எனது வானொலியை ஒரு முறை திருடிச்சென்றார்கள். நான் வெறுத்து ஒதுஙக்கூடிய வாழ்க்கை நிலையிலிருந்தே எனது ஒவ்வொரு முன்னேற்றகரமான பாதையும் வடிவமைக்கப்பட்டது. 

பல தடவைகள் சப்பாத்துப் பெட்டி போன்ற எனது படுக்கையறையில் தன்னந்தனியாக கட்டுன்று அழுதிருக்கின்றேன். என்னை நான் திடப்படுத்தி மன உறுதியுடன் இச்சூழ்நிலைகளை எதிர்த்துப் போராடியிருக்காவிடின் இன்று இந்த உலகில் எங்கிருந்திருப்பேன் என தெரியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

வெறும் 35 டாலர்களுடனும், பல கனவுகளுடனும் நியூயோர்க்கிற்கு வந்தவர் மடோனா. இன்று உலகின் முன்னணி பாப் பாடகர்கள் வரிசையில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்து பல கோடி ரசிகர்களை சம்பாதித்திருக்கிறார்.
»»  read more

10/03/2013

சவூதியில் நிர்வாண நடனமாடிய இளைஞ்ஞருக்கு கசையடி


சவூதி அரேபியாவில் " நிர்வாண நடனம்" என்றறியப்படும் வழக்கு ஒன்றில், நாட்டின் தார்மீக விதிகளை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டில் நான்கு இளைஞர்களுக்கு மொத்தமாக4,000 கசையடிகளும், 20 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனையும் விதித்து நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்திருக்கிறது.

இந்த நான்கு இளைஞர்களும் தலைநகர் ரியாத்துக்கு வடமேற்கே உள்ள போரய்டா என்ற இடத்தில் ஒரு கார் மீது ஏறி நின்று நடனமாடி அதை தாங்களே படம் பிடித்துக்கொண்டனர்.

இந்த நடனமாடியவர்களில் ஒருவர் நிர்வாணமாக நடனமாடினார். இந்த வீடியோவை அவர்கள் இணையத்திலும் பிரசுரித்தனர்.

நிர்வாண நடனமாடியவருக்கு மிகக் கடுமையான தண்டனையாக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 2,000 கசையடிகளும், 13,000 டாலர்களுக்கு மேலான அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்த தண்டனைகள் மிகவும் லேசானவை என்று அரச தரப்பு வழக்குரைஞர் ஆட்சேபித்தார். இந்த நால்வருக்கும் மேல்முறையீடு செய்ய உரிமை இருக்கிறது. 
»»  read more

10/02/2013

டெல்லி சிறையை சுற்றிப் பார்த்த அமெரிக்க உலக அழகி

அமெரிக்காவை சேர்ந்த முன்னாள் உலக அழகி ஒலிவியா டெல்லி திகார் சிறையை சுற்றிப்பார்த்தார். அமெரிக்காவை சேர்ந்தவர் முன்னாள் உலக அழகி ஒலிவியா பிரான்செஸ் கல்போ கடந்த ஆண்டு உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். 

ஒலிவியா 10 நாட்கள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ளார். பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், பெண்களுக்கான அதிகாரம் மற்றும் எய்ட்ஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். கடந்த ஞாயிறுக்கிழமை டெல்லியில் நடைபெற்ற எச்ஐவி, எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு பேரணியில் ஒலிவியா கலந்து கொண்டார். முதன்முறையாக இந்தியா வந்துள்ள ஒலிவியா, மகாவீர் குடியிருப்பு பகுதிக்கு சென்று, துப்புரவு பணியில் இருந்து விடுபட்டு சமூக சேவகர்களாக மாறிய பெண்களிடம் கலந்துரையாடினார். 

இதையடுத்து, நேற்று முன்தினம் திகார் சிறையை பற்றி அறிந்துகொள்ள ஒலிவியா அங்கு சென்றார். திகார் சிறையில் உள்ள மத்திய சிறை எண் & 2 பகுதிக்கு சென்ற ஒவிலியா, சுமார் 2 மணி நேரம் சுற்றிப்பார்த்தார். சிறைச்சாலை குறித்து ஒலிவியாவுக்கு சிறைத்துறை டிஜிபி விம்லா மெஹ்ரா விளக்கி கூறினார். சிறையில் கைதிகள் தயாரிக்கும் பொருட்கள் குறித்து ஒலிவியா கேட்டறிந்தார். 

இதையடுத்து, சிறைச்சாலையில் கைதிகளின் கலைநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சிகளை அவர் கண்டுரசித்தார். நிகழ்ச்சியின் முடிவில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை கைவிடும் வகையிலான உறுதிமொழி எடுக்கப்பட்டது. கைதிகளுடன் சேர்ந்து ஒலிவியாவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டார். 

பின்னர், சிறையில் உள்ள சிறப்பு விருந்தினருக்கான புத்தகத்தில் ஒலிவியா தனது கருத்தை பதிவு செய்தார். அதில், "நீங்கள் ஒரு அழகான சுழற்சியை உருவாக்கியுள்ளீர்கள். அழகான எதிர்காலத்திற்காக விதைகளை நடுவது போன்று இருக்கிறது இந்த பணி. உங்களுடைய செயலுக்காக அனைருக்கும் நன்றி. திகார் சிறையானது வருகிற ஆண்டுகளில் எவ்வாறு வியக்கத்தக்க வகையில் இருக்கும் என்பதை என்னால் கற்பனை செய்ய முடிகிறது. கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்" என்று எழுதியிருந்தார். இந்நிகழ்ச்சியின்போது, உலக அழகி ஒலிவியாவுடன், வடிவமைப்பாளர் சஞ்சனா ஜான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
»»  read more

9/23/2013

சவூதியில் போதைவஸ்தை கடத்தியவருக்கு மரணதண்டனை


சவூதி அரேபியாவில் போதைவஸ்து கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ஒருவருக்கு செவ்வாய்க்கிழமை தலையை வாளால் வெட்டி மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.

வலீட் ஸெயினெட்டின் என்ற மேற்படி நபருக்கு வட ஜாவ் பிராந்தியத்தில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.

அவரது மரணதண்டனையுடன் இந்த வருடம் சவூதியில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டவர்கள் தொகை 67 ஆக உயர்ந்துள்ளது.
»»  read more

பாலியல் ஆசையை தூண்டும் : பாக்.கில் அறிவியல் பாடத்திற்கு தடை


பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண அரசு, ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் பாடம் நடத்த தடை விதித்துள்ளது.

இந்த புத்தகத்தைப் படிப்பதால் மாணவர்களின் பாலியல் ஆசை தூண்டப்படும் என்பதால் இந்த தடை உத்தரவு என்று கூறப்பட்டுள்ளது.

லூகாரைச் சேர்ந்த கிராமர் பள்ளி என்ற தனியார் பாடசாலையில் அறிவியல் பாடம் நடத்துவதற்கு மாநில அரசு தடை விதித்துள்ளது. பெற்றோர்களிடமிருந்து இதுதொடர்பாக புகார் வந்ததால்தான் இந்த தடை உத்தரவாம். 

இதேபோல பல்வேறு தனியார் பாடசாலைகளிலும் அறிவியல் பாடம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாம்.

இதுகுறித்து மாகாண கல்வி அமைச்சர் ராணா மசூச் அகமது கூறுகையில், பெற்றோர்களிடமிருந்து புகார்கள் வந்ததால் தடை விதித்துள்ளோம். பாலியல் ஆசையைத் தூண்டும் வகையில் இந்தப் பாடசாலைகளின் அறிவியல் பாடம் உள்ளதால் தடை விதிக்கப்படுகிறது. இதை ஏற்க முடியாது என்றார் அவர்.

மேலும் இந்த அறிவியல் பாடம் தொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளதாம் இந்த மாகாண அரசு.
»»  read more

9/22/2013

பொது இடங்களில் லிப் டு லிப் முத்தத்திற்கு தடை - ஆஸ்திரிய அரசு


ஆஸ்திரிய அரசு பொது இடங்களில் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதில் காதலர்கள் பொது இடங்களில் கொடுக்கும் லிப் டு லிப் முத்தம் முதல் சிகரெட் பிடிப்பது வரை பல தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்த தடை உத்தரவுகளுக்கு பெரும்பாலானோர் ஆதரவும் சிறிய அளவில் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

கலை கலாச்சாரத்திற்குப் பெயர் போன வியன்னாவின் பெருமையை காக்கும் வகையில் இந்த உத்தரவை அந்த நாட்டு போக்குவரத்துத்துறை அமல்படுத்தியுள்ளதாம். பொது இடங்களில், பொதுப் போக்குவரத்துகளில் இனிமேல் இப்படி நடந்தால் அது அநாகரீகமாக கருதப்பட்டு அபராதம் விதிக்கப்படுமாம்.

தம்பதிகள் நெருக்கமாக அமருவது, லிப் டு லிப் வைத்து முத்தமிடுவது தடை செய்யப்பட்டுள்ளது. வியன்னாவில் பொதுப் போக்குவரத்தை வியனர் லினியன் என்ற நிறுவனம்தான் கவனிக்கிறது. இந்த நிறுவனத்திற்கு நிறையப் புகார்கள் வந்ததாம். அதில்,பொது போக்குவரத்து வாகனங்களில் பப்ளிக்காக முத்தம் கொடுப்போரால் பெரும் சங்கடம் ஏற்படுவதாக மக்கள் குமுறியிருந்தனராம்.

அதேபோல செல்போன்களில் படு சத்தமாக பேசுவதையும் தடை செய்துள்ளனர். இது அக்கம் பக்கத்தில் இருப்போருக்கு இடையூறாக இருப்பதால் இந்த தடை. இனிமேல் மெதுவாகத்தான் செல்போனில் பேச வேண்டுமாம்.இந்த உத்தரவுகளை கண்காணிக்கவும்,தவறு செய்வோரைக் கையும் களவுமாக பிடிப்பதற்கும் ஆட்களை நியமித்துள்ளனராம்.

இதேபோல பலர் திடீரென டிரஸ்ஸைக் கழற்றிப் போட்டு நிர்வாணமாக காட்சி தருவதும் அங்கு சகஜமாகும். அதற்கும் தடை போட்டுள்ளனர்.ஒருமுறை ஓடும் ரயிலிலேயே ஒரு ஜோடி உடலுறவில் ஈடுபட்டு சிக்கி பரபரப்பை ஏற்படுத்திய சம்பவமும் அங்கு நடந்துள்ளதாம்.
»»  read more

9/20/2013

பிரான்ஸில் மினிமிஸ் போட்டிக்கு தடை


பிரான்ஸில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான அழகிப்போட்டிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அழகிப் போட்டி நடத்துவது உலக நாடுகளில் சகஜமான விஷயம் தான். 

ஆனால், சிறு குழந்தைகளைப் பிரதானப்படுத்தி நடத்தப்படும் அழகிப் போட்டிகளால் குழந்தைகளின் மனவளர்ச்சி பாதிப்படைவதாக தெரிவித்து 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான அழகிப்போட்டிக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது பிரான்ஸ். 

பிரான்சின் சிறு நகரங்களில் இதுபோன்ற குழந்தைகளுக்கான அழகிப்போட்டிகள் மிகவும் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது. 

பிரான்ஸ் நாட்டில் இதுவரை 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான மினி மிஸ் என்ற பெயரில் அழகிப் போட்டிகள் நடைபெற்று வந்தன. இப்போட்டியில் கலந்து கொள்ளும் சிறுமிகள் விதவிதமான கவர்ச்சி உடை அணிந்து பெரியவர்களைப் போலவே ஒய்யார நடை நடந்து மேடைகளில் வலம் வருவார்கள். 

அத்தோடு, விதவிதமான மேக்கப் செய்து தங்கள் குழந்தைகளை அழகுபடுத்தி இருப்பார்கள் அவர்களது பெற்றோர்கள். 

சிறு வயதிலேயே இத்தகைய மேக்கப் போடுவதால் குழந்தைகளுடைய தோல் பாழாவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வந்தனர். இத்தகைய போட்டிகளில் பங்கேற்கும் குழந்தைகளுக்கு விளம்பர வாய்ப்புகள் வந்து குவிகின்றதாம். 

இதன் மூலம் அவர்கள் மனதில் சிறு வயதிலேயே வயது முதிர்ச்சி ஏற்படுவதாக அவர்கள் கவலை தெரிவித்தனர். 

இந்நிலையில் அழகிப் போட்டியானது குழந்தைகளை ஆபாச முறையில் காட்டப்படும் நிகழ்ச்சி என்று செனேட்டர் மையமானது எதிர்ப்பு தெரிவித்தது. 

தொடர் எதிர்ப்புகளைத் தொடர்ந்து தற்போது குழந்தைகளுக்கான அழகிப் போட்டியானது பிரான்ஸ் நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது. தடையை மீறி இத்தகைய போட்டிகள் நடத்துபவர்களுக்கு 30,000 யூரோ அபராதமும், 2 வருடங்கள் சிறை தண்டனையும் வழங்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

ஆனால் அனைத்து செனேட்டர்களும் இந்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை. மேலும் சோசலிச கட்சியானது இந்த தண்டனை மிக அதிகம் எனக் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
»»  read more

9/05/2013

சீன ஆற்றில் செத்து மிதந்த பல்லாயிரக்கணக்கான மீன்கள்


சீனாவின் ஹூபெய் மாகாணத்தின் பியுஹே ஆற்றில் இரசாயன தொழிற்சாலையின் அம்மோனிய கழிவுகள் கலந்ததையடுத்து அந்த ஆற்றில் இருந்த மீன்கள் எல்லாம் செத்து மிதந்தன. 

உடனடியாக அப்பகுதிக்கு வந்த சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் செத்து மிதந்த 100 டன் மீன்களை வெளியே எடுத்து சேகரித்தனர். 

கொட்டப்பட்டிருந்த அந்த இறந்த மீன்கள் பனித்திட்டுகள் போன்று காட்சியளித்தன. இதனால் அப்பகுதி மீனவர்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். 

இந்த வருடம் தொடக்கத்தில் ஷாங்காய் மாகாண ஆற்றில் இதுபோன்று 16 ஆயிரம் பன்றிகள் செத்து மிதந்து வந்த சம்பவம் அதிர்ச்சியூட்டியது. இதற்கு அந்த ஆற்றின் கரையில் இருந்த பன்றி பண்ணை மீது குற்றம் சாட்டப்பட்டது. 

இப்போது 100 டன் மீன்கள் இறந்துபோனதற்கு ஹூபெய் மாகாண ஒரு இரசாயன தொழிற்சாலை மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் முன்னேறி வரும் சீனா இதுபோன்ற சுற்றுச்சூழல் மாசு அடையும் பிரச்சினையை சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
»»  read more

8/30/2013

ஆபாச நடனமாடிய பாப் பாடகி உள்ளிட்ட 11 பேருக்கு மரண தண்டனை


வடகொரியாவில் ஆபாச நடனமாடி, அதனை சிடிக்களாக விற்பனை செய்த பாப் பாடகி மற்றும் அவரது குழுவில் இடம்பெற்ற 11 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 

உன்னாஸ் ஆர்கெஸ்ட்ரா என்ற இசைக் குழுவை நடத்தி வரும் ஹயான் சாங்-வோல் என்பவர், ஆபாசமாக நடனமாடி அதை வீடியோ படம் எடுத்து பல்வேறு நாடுகளில் விற்பனை செய்துள்ளார். இது வடகொரிய நாட்டு சட்டப்படி குற்றமாகும். 

இதன் அடிப்படையில் கைது செய்யப்பட்ட ஹையான் சாங் -வோல் உட்பட இசைக் குழுவைச் சேர்ந்த 12 பேர் கைது செய்யப்பட்டு, விசாரணையின் முடிவில் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 

இதையடுத்து, இயந்திர துப்பாக்கியால் சுட்டு அவர்கள் 12 பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு விட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

உயிரிழந்த ஹையான் சாங்- வோல் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் முன்னாள் காதலி என்பது குறிப்பிடத்தக்கது.
»»  read more

8/26/2013

மாவீரன் அலெக்ஸாண்டரின் கல்லறை கண்டுபிடிப்பு?

இவர் கி.மு. 323 இல் தனது 32 ஆவது வயதில் காலமானார். இக் காலப்பகுதியில் எகிப்து, பேர்ஷியா, ஆசியாவையும் கைப்பற்றியிருந்தான்.
கி.மு.323-ல் ஜூன் 10 அல்லது 11 ஆம் திகதி பாபிலோனில். இருப்பினும் இவரது மரண திகதி மற்றும் மரணத்திற்கான காரணம் தொடர்பில் பல விவாதங்கள் இன்றும் இடம்பெற்ற வண்ணமே  உள்ளன.
இந்நிலையில் பேரரசன் அலெக்ஸாண்டரின் கல்லறையை கண்டுபிடித்துள்ளதாக ஆராய்ச்சிகள் தெரிவித்துள்ளனர்.
கிறீஸ் நாட்டின் எதேன்ஸ் நகரிலிருந்து வடக்கே 370 மைல் தொலைவில் இக் கல்லறை அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆரம்பத்தில்  அலெக்ஸாண்டரின் கல்லறை எகிப்திலேயே உள்ளதாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் முக்கியத்துவம் மிக்க நபரொருவரது கல்லறையை கண்டுபிடித்துள்ளதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஐகடாரினி பெரிஸ்டெரி தெரிவித்துள்ளார்.
அப்பகுதியில் பாரிய மண் மேடுபோன்ற பகுதியொன்றைக் கண்டுபிடித்துள்ளனர். இதனைச் சூழ பளிங்கு கற்களால் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இச்சுவரானது கி.மு. 4 ஆம் நுற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கக் கூடுமென கணிக்கப்பட்டுள்ளது.
சுமார்  498 மீற்றர் உயரத்தில் பிரமிட் போன்ற உருவத்தில் மேற்படி மண்மேடு காணப்படுகின்றது.
இது அலெக்ஸாண்டரின் தந்தையான மெசிடோனியவின் பிலிப் II வின் கல்லறையை விட சுமார் 10 மடங்கு பெரியதெனத் தெரிவிக்கப்படுகின்றது.
அலெக்ஸாண்டர் மட்டுமன்றி அவரது மனைவி ரொக்சேன், மற்றும் அவரது  பதவியை அடுத்து ஏற்றவர் போன்றோரின் உடல்களும் அங்கேயே புதைக்கப்பட்டிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும் கிறீஸ் நாட்டின் கலாசார அமைச்சு இக் கண்டுபிடிப்பானது முக்கியமானதொன்றெனினும், ஆராய்ச்சி முழுமையாக முடியும் முன்னர் அதனை மாவீரன் அலெக்ஸாண்டருடையது எனக் கூறுவது எந்தளவு தூரத்துக்கு பொருத்தமானதென கேள்வி எழுப்பியுள்ளது.

»»  read more

8/23/2013

இந்தோனேசியாவில் உயர்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு கன்னித்தன்மை பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளதாக கல்வி அதிகாரிகளின் அறிவிப்பிற்கு கடும் எதிர்ப்பு


இந்தோனேசியாவில் உயர்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு கன்னித்தன்மை பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளதாக கல்வி அதிகாரிகளின் அறிவிப்பிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

இந்தோனேசியாவின் உள்ள சுமத்ரா தீவில் அமைந்துள்ள பிரபுமுலிக் மாவட்டத்தில் உயர்நிலை பள்ளி மாணவிகளுக்கு அடுத்த ஆண்டு முதல் கன்னித்தன்மை பரிசோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாக அம்மாகாண கல்வி அதிகாரிகள் அறிவித்தனர். 

இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுகுறித்து கல்வி அதிகாரி முகமது ரஷீத் கூறுகையில், திருமணத்திற்கு முன்பாக செக்ஸ் உறவை தடுப்பதற்கும், விபசாரத்தால் மாணவிகள் பாதிக்கப்படுவதை தடுப்பதற்காகவும் இது போன்ற திட்டம் ஒன்றை அடுத்த ஆண்டு முதல் செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது என்று தெரிவித்தார். 

ஆனால் இது மனித உரிமைகளுக்கு எதிரானது என கடும் சர்ச்சை எழுந்துள்ளது. பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக இணையதளங்களிலும் ஏராளமானோர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கருத்துகளை தெரிவித்திருந்தனர். இதனால் இந்த உத்தரவு சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

குழந்தைகள் மீது வன்முறையை திணிப்பதும், அவர்களை அச்சுறுத்துவதுமான இது போன்ற அறிவிப்புகளை வெளியிடக் கூடாது என்றும் எதிர்ப்பாளர்கள் தெரிவித்தனர். 

இதுகுறித்து மாகாண கல்வி அதிகாரி விடோடோ கூறுகையில், 

மாணவிகளுக்கு தேவையான எவ்வளவோ நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் இருக்கும் போது, இது போன்ற பரிசோதனைகள் தேவையற்றது. மேலும் இதற்கு எதிர்ப்பு கிளம்பியதும் அந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது என்றார். 

இதுகுறித்து தேசிய குழந்தைகள் உரிமை ஆணையர் ஏரிஸ் மெர்டகா, ஜகார்தாவில் அளித்த பேட்டியில், மாணவிகளுக்கு கன்னித்தன்மை இழப்பு என்பது செக்ஸ் நடவடிக்கைகளால் மட்டுமல்ல, விளையாட்டு, உடல் நலக் குறைவு போன்றவற்றால் கூட ஏற்பட வாய்ப்புள்ளது. 

எனவே அதிகாரிகளின் இந்த திட்டம் கடுமையான கண்டனத்திற்குரியதாகும் என்று தெரிவித்துள்ளார்.
»»  read more

8/20/2013

வினோதினி மீது ஆசிட் வீசியவனுக்கு ஆயுள் தண்டனை


சென்னையில் பொறியாளராக பணியாற்றி வந்த வினோதினி மீது ஆசிட் வீசிய சுரேஷுக்கு காரைக்கால் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

காரைக்காலைச் சேர்ந்த வினோதினி மீது ஆசிட் வீசப்பட்டு, அவர் மரணம் அடைந்தது தொடர்பான வழக்கு விசாரணை காரைக்கால் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பு இன்று 20-08-2013 வெளியிடப்பட்டது.

அதில், ஆசிட் வீச்சில் வினோதினி பலியான வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து காரைக்கால் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. காயப்படுத்துதல், கொடுங்காயம் ஏற்படுத்துதல், கொலை செய்ய முயலுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும்,வினோதினியின் தந்தை ஜெயபால் மீதும் ஆசிட் பட்டு காயம் ஏற்பட்டது குறித்த வழக்கில், சுரேஷுக்கு மேலும் நான்கரை ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையைக் கொண்டாடி விட்டு நவம்பர் 14ம் தேதி  காரைக்காலில் இருந்து சென்னை திரும்ப பேருந்து நிலையத்துக்கு வந்த வினோதினி மீது சுரேஷ் ஆசிட் வீசினான். இதில் படுகாயம் அடைந்த வினோதினி, மருத்துவ சிகிச்சை பலனின்றி பிப்ரவரி 12ம் தேதி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
»»  read more

8/15/2013

சுறாமீன் தாக்கியதில் கையைப் பறிகொடுத்த நபர்


அமெரிக்காவின் ஹவாய் தீவில் மாயி என்ற இடத்தில் அமைந்துள்ள ஒயிட் ராக் கடற்பகுதியாகும். நேற்று இந்தப் பகுதியில் கடலில் மூழ்கி நீந்திக் கொண்டிருந்த ஜெர்மன் பயணி ஒருவரை சுறாமீன் தாக்கியதில் அவரது வலது கையை இழந்துள்ளார். 

விபத்து நடந்ததைக் கேள்விப்பட்டு அவசரகால உதவியாளர்கள் வந்தபோது அவர் மயக்க நிலையை அடைந்திருந்தார். 

கடலிலிருந்து அவரை மீட்ட உதவியாளர்கள் அவரை மாயியில் உள்ள மருத்துவ மையத்தில் சேர்த்துள்ளனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.. 

இந்த சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து இரண்டு புறமும் ஒரு மைல் தூரத்திற்கு கடற்கரை மூடப்பட்டுள்ளது. இன்று அதிகாரிகள் சம்பவ இடத்தை ஆராய்ந்த பின்னரே கடற்கரையை மீண்டும் திறப்பது குறித்து முடிவு செய்வார்கள். 

இதே இடத்தில் கடந்த பெப்ரவரியில் ஒரே நாளில் இரண்டு பேரும், ஜூலை மாத இறுதியில் ஒருவரும் ஆக இதுவரை நான்கு பேர் சுறாமீனின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். 

சமீப காலங்களில் சுறா மீன்களின் தாக்குதல் அதிகரித்துள்ளது. ஆயினும், புளோரிடா பல்கலைக்கழக கணக்கீடுகளின்படி, இதனால் ஏற்படும் இறப்பு சதவிகிதம் இரண்டாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 
»»  read more
புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா