இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/02/2015

நீண்ட அமைதிக்கு காரணம் உண்டு சம்மாந்துறையில் ஹக்கீம் (Photos)

(எம்.ரீ.எம்.பர்ஹான்)

ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஜனாதிபதித்தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்;பாக நீண்ட அமைதியை மேற்கொண்டது தொடர்பாக மக்கள் பல விசனங்களை தெரித்து வந்தார்கள். இது தொடர்பாக இன்று சம்மாந்துறை விளினயடி சந்தியில் இடம் பெற்ற பொதுக் கூட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸின் தேசிய தலைவரும் முன்னால் அமைச்சருமான றவூப் ஹக்கீம் கருத்து தெரிவிக்கையில்..

இலங்கையில் பொரும்பான்மை முஸ்லீம்களின் ஆதரவைப்பெற்ற கட்சியாகிய ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் நீண்ட அமைதிக்கு காரணம் கட்சி உறுப்பினர்களை கட்சியை விட்டு பிரிந்து செல்லாமல் காப்பதற்காக அமைந்தது என அவர் குறிப்பிட்டார்.

மேலும் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில்

மக்களின் விடிவிற்க்hக தோற்றம் பெற்ற இக்கட்சி மக்களின் அபிலாசைகளுக்கு எதிராக முடிவெடுப்பது என்பது ஆபூர்வத்திலும் அபூர்வமாகும். இன்று அப்பாவி சிங்கள மக்கள் மத்தியில் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் பற்றி தப்பான இனவாத கருத்துக்கள் விதைக்கப்படுவதாகவும் இது அரசாங்கத்தின் வங்குரோத்து அரசியலை எடுத்துக்காட்டுவதாகவும் அவர் அங்கு சுட்டிக்காட்டினார்




ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை முன்னால் சுகாதார அமைச்சருமான எம்.ஐ.எம்.மன்சூர் தலைமையில் இடம்பெற்ற இந்தக்கூட்டத்தில் பாராளமண்ற உறுப்பினர்களான ஹரீஸ், பைசல் காசீம் உட்பட பல அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
»»  read more

12/28/2014

சம்மாந்துறையில் மைத்ரி வெள்ளம் (Potos)

(எம்.ரீ.எம்.பர்ஹான்)

பொது வேட்பாளர் மைதிரிபால சிரிசேனவையை ஆதரித்து இன்று 28.12.2014 சம்மாந்துறை அசரப்பா வட்டையில் மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்று இடம்பெற்றது.

சம்மாந்துறையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் றமீஸ் தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் பொது வேட்பாளர் மைதிரிபால சிரிசேன, முன்னால் மீன்பிடித்துறை அமைசரும் வைத்தியருமான றாஜித சேனாரத்தின, ஜக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவ கமிட்டியின் தலைவரும் முன்னால் அமைச்சருமான கரு ஜயசூரிய, முன்னால் பிரதியமைச்சரும் நாடளமண்ற உறுப்பினருமான அமீர் அலி, நாடாள மண்ற உறுப்பினர் எச்.எம்.ஹரீஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயம் வை.எல்.எம்.ஹமீட், முன்னால் கிழக்கு மாகாண சபை சுகாதார அமைச்சர் எம்.ஐ.மண்சூர், அனோமா கமகே, ஜக்கிய தேசிய கட்சி சம்மாந்துறை தொகுதி அமைப்பாளர் எம்.ஏ.ஹஸன் அலி உட்பட இன்னும் பல அரசியல் பிரமுகர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இன்நிகழ்வில் அதிகமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும.











»»  read more

6/04/2014

தவிசாளர் புலமைப்பரிசில்-2014


(எம்.ரீ.எம்.பர்ஹான்)
சம்மாந்துறை பிரதேச சபைக்குட்பட்ட சம்மாந்துறை, கல்லரச்சல் ,மல்வத்தை மற்றும் சென்நெல் கிராமம் போன்ற பிரதேசங்களில் 'தவிசாளர் புலமைப்பரிசில்-2014' மற்றும் நெனசல அறிவகங்களில் கற்ற 340ற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை(30) நடைபெற்றது.

சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்எம்.நௌஷாத் தமைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், நெனசல அறிவகங்களில் தகவல் தொழில்நுட்ப ஆங்கில மொழி கற்கை நெறியினைக் கற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், மாணவர்களின் கலை நிகழ்சிகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுநர் ரியட் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரம், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சுர்,அம்பாறை மாவட்ட உதவி உள்ளுராட்சி ஆணையாளர் ஏ.ஜே.எம்.இர்ஷாத், சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.என்.நஜீம், சம்மாந்துறை பிரதேசசபை செயலாளர் ஏ.ஏ.சலீம், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.








»»  read more

6/02/2014

சம்மாந்துறையில் முப்பெரு நிகழ்வுகள்

-எம்.வை.அமீர்-
இன்று (31-05-2014) கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் ஏற்பாட்டின் கீழ் சம்மாந்துறையில் ஏற்கனவே இயங்கி வந்த ஆயுர்வேத வைத்தியசாலையை  ஆயுர்வேத மாவட்ட வைத்தியசாலையாக தரமுயர்த்தி அதனை சம்மாந்துறை செந்நெல் கிராமம் 01 ல் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடத்தை சம்பிரதாய பூர்வமாக அங்குராப்பணம் செய்துவைக்கும் நிகழ்வும்,

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் விசேட குழந்தை பராமரிப்பு பிரிவு, வைத்திய அதிகாரிகளுக்கான விடுதி திறந்து வைத்தல், புதிய X-Rey இயந்திரம் கையளித்தை மற்றும் சுகவாழ்வு நிலையம் திறந்து வைத்தல் போன்ற நிகழ்வுகளும் இடம்பெற்றன.

கிழக்குமாகாண சுகாதார, சுதேச வைத்திய, மகளிர் விவகார, சிறுவர் பராமரிப்பு மற்றும் கூட்டுறவுத்துறை  அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் அவர்களின் அழைப்பின் பெயரில்  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.

கௌரவ அதிதிகளாக மாகாணசபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நசீர் மற்றும் ஏ.எல்.எம்.தவம் போன்றோருடன் மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கே.கருணாகரன், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கே.முருகானந்தன் மாகாண சுதேச மருத்துவ திணைக்கள ஆணையாளர் Dr.திருமதி எஸ்.சிறீதர் உட்பட சுகாதார சேவையைச் சார்ந்த பெரும் திரளானோர் பங்கு கொண்டிருந்தனர்.

இன்றைய நிகழ்வின் மாலை நிகழ்வுகளாக ஐன்பது வறிய குடும்பங்களுக்கு இலவசமாக மின்சார இணைப்புக்களை வழங்கும் நிகழ்வும் இரவு பிரதான வீதியில் எம்.வை.எம்.மன்சூர் அரங்கில் பொதுக்கூட்டமும் இடம்பெறவுள்ளது.





»»  read more

சம்மாந்துறையில் நிரந்தர நீதவான் நீதி மன்றம்

-எம்.வை.அமீர்-
சம்மாந்துறை மக்களின் நீண்ட நாள் தேவையாக இருந்த தனியானா நீதிமன்றம் என்ற கோரிக்கை, அண்மையில் நீதி அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவருமான ரவூப் ஹக்கீம்  அவர்களது முயற்சியால் தற்காலிக கட்டிடம் ஒன்றில் திறந்து வைக்கப்பட்டு இயங்கி வந்து. குறித்த நீதிமன்ற திறப்பு விழாவின் போது அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களால் சம்மாந்துறை மக்களுக்கு உறுதியளிக்கப்பட்டதர்க்கினங்க, (2014-05-30) சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் நிரந்தர கட்டிடத்தில்  நீதி அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவருமான ரவூப் ஹக்கீம் அவர்களது அழைப்பின் பெயரில் பிரதம நீதி அரசர் மொஹான் பீரிஸ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் மக்களது காலடிக்கு சேவையை கொண்டு செல்லும் அரசின் திட்டத்தின் கீழும் நிந்தவூர் மக்களின் தேவையை கருத்தில்கொண்டும் அங்கும் சுற்றுலா நீதிமன்றம் ஒன்றை அவசரமாக திறக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அதேவேளை நிந்தவூர் ஒலுவில் மக்களின் தேவையை கருத்தில்கொண்டு நிந்தவூருக்கும் ஒலுவிலுக்கும் இடையில் நிரந்தர பொலிஸ் நிலையம் ஒன்றை திறக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம், அம்பாறை நீதி நிர்வாக பிரதேசத்துடன் இணைக்கப்பட்டுள்ள இறக்காமம் பிரதேசத்தை அப்பிரதேச மக்களில் அநேகர் தமிழ் பேசுபவர்களாக இருப்பதால் இறக்காமம் பிரதேசத்தை அக்கரைப்பற்று நீதி நிர்வாகத்துடனும் பொத்துவில் பிரதேசத்துடன் இணைந்துள்ள திருக்கோவில் பிரதேசத்தை அக்கரைப்பற்று நீதி நிர்வாகத்துடனும்  இணைப்பதற்கான நடவடிக்கையை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.


அம்பாறை மாவட்டத்துக்கு விஜயம் செய்துள்ள பிரதம நீதி அரசர் மொஹான் பீரிஸ் உள்ளிட்ட குழுவினர் இன்று கல்முனை நீதிமன்ற கட்டிடத்தொகுதிக்குள் 500 மில்லியல் ரூபாய் செலவில் நவீன நீதி மன்றத்துக்கான கட்டிடத்தொகுதிக்கான அடிக்கல் நடும்  நிகழ்வும் இடம்பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.





»»  read more

3/25/2014

மழை வேண்டிய துஆப் பிராத்தனை


(ஹனீபா)
உலக நீர் தினத்தையிட்டும் நாட்டில் நிலவுகின்ற வறட்சியினையிட்டும் சம்மாந்துறை ஜம்யியதுல் உலம சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட மழை வேண்டிய துஆப் பிராத்தனை நிகழ்வு சம்மாந்துறை ஜம்யியதுல் உலம சபையின் கட்டிடத்தில் ஜம்யியதுல் உலம சபையின் தலைவர் மௌலவி எம்.ஐ.அப்துல் காதர் தலைமையில் நடைபெற்றது.

இந்த வைபவத்தில் அதிதிகளாக கிழக்கு மாகாண சபையின் சுகாதார சுதேச வைத்தியத்துறை சமூக சேவைகள் கூட்டுறவுத்துறை அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், பிரதம நம்பிக்கையாளர் டாக்டர் எம்.வை.எம்.முஸ்தபா, தப்லீகுல் இஸ்லாம் அரபுக்கல்லூரியின் தலைவர் கலாநிதி ஐ.எம்.இப்றாஹீம், விவசாய திணைக்களத்தின் சிரேஷ;ட மேற்பார்வை உத்தியோகத்தர் எம்.எம்.ஜெமீல், பொரும்பாக உத்தியோகத்தர் வை.ஏ.கபூர், நீர்பாசனத்திணைக்களத்தின் தொழில் நுட்ப உத்தியோகத்தர் பஸீர், விவசாயப் போதனாசிரியர்களான ஏ.அப்துல் மஜீட், ஏ.எல்.எம்பரீட், நம்பிக்கையாளர் சபையின் பிரதித் தலைவர் மௌலவி யூ.எல்.மஹ்றூப் மதனி உட்பட உலமாக்கள், விவசாய அமைப்புக்களில் தலைவர்கள் விவசாயப் பொதுமக்கள் என கூடுதலானோர் கலந்து கொண்டனர்.

இந்த விஷேட துஆப் பிராத்தனை வைபவத்தில் விஷேட உரையினை மௌலவி எம்.ஏ.ஏ.எம்.அலிஅஹமட் றசாதி அவர்கள் நிகழ்ததினார் விNஷட துஆப்பிராத்தனை நிகழ்வை அல் ஹாபிழ் மௌலவி ஹச்சுமுஹம்மட் அவர்கள் நடாத்தினார்கள்.

விஷேடமாக சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை, உலமா சபை என்பவற்றின் தீர்மானங்களுக்கு அமைவாக 23ம் திகதி இன்றைய சுபஹ் தொழுகையினை தொடர்ந்து சகல பள்ளிவாசல்களிலும் ஒவ்வொரு தொழுகை நேரத்திலும் விஷேட துஆப் பிராத்தனைகளை மேற்கொள்ளுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டன.





»»  read more

சமுர்த்தி சமுக அபிவிருத்தி மன்றத்தினால் நிர்மாணிக்கப்பட்ட 12 வீடுகளை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வு


(ஹனீபா)
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பிரதேச செயலக பிரிவின் சமுர்த்தி சமுக அபிவிருத்தி மன்றத்தினால் நிர்மாணிக்கப்பட்ட 12 வீடுகளை மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வு இன்று (23) வைபவ ரீதியாக சம்மாந்துறை சென்னல் கிராமம் -01, மலையடிக்கிராமம்-04, கருவட்டுக்கல் ஆகிய பிரவுகளில் நடைபெற்றது.

சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் நடைபெற்ற இந்த வைபத்தில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சகாதார சுதேச வைத்தியதுறை கூட்டுறவு சமுக சேவைகள் அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் கலந்த கொண்டார்.
ஏனைய அதிதிகளாக உதவிப் பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப், கணக்காளர் ஏ.எல்.மஹ்றூப், உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஹம்சார், தலைமைப்பீட சமுர்த்தி முகாமையாளர் எம்.பி.எம்.ஹூசைன், அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான ஏ.எம்.தபிக், யூ.எல்.எம்.பஸீர் உட்பட பலர் கலந்த கொண்டனர்.

சமுர்த்தி சமுக அபிவிருத்தி மன்றமானது ஒவ்வொரு வருடமும் இலங்கை சமுர்த்தி அதிகார சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் சர்வதேச புகைத்தல் எதிப்பு கொடி விற்பனை மூலம் பொற்றுக் கொள்கின்ற நிதியினைக் கொண்டு உருவாக்கப்பட்ட அமைப்பாகும் இந்த நிதியிலிருந்து வருடாந்தம் வசதி குறைந்த வீடு வசதிகள் இல்லாத குடும்பங்களுக்கு வீட்டினை அமைத்துக் கொள்வதற்கான வசதிகளை செய்த வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

2013 ஆண்டு சம்மாந்துறைப் பிரதேசத்திலுள்ள 12 கிராம செவகர் பிரவுகளில் இருந்து 12 குடும்பங்களை தெரிவு செய்து தலா ஒருவீட்டுக்கு 160000.00 ஒரு இலட்சத்து அறுபது ஆயிரம் ரூபா செலவில் மொத்தமாக 1920000.00 செலவில் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும் இந்த நிகழ்வானது வருமானம் குறைந்த குடும்பங்களின் வாழ்கையில் ஏற்படுத்தப்படுகின்ற ஒரு வரப்பிரசாதமாவதுடன் ஒரு நிரந்தர தர்மமாகும் எனவும் பிரதேச செயலாளர் மன்சூர் கருத்து தெரிவித்ததார்.

இந்த நிலைமையினை அவதானித்த அமைச்சர் மன்சூர் அந்த மக்களின் வாழ்வாதார அபிவிருத்திக்கு உதவும் வகையில் வாழ்வாதார பொருட்களை வழங்குவதற்காக பட்டியல் ஒன்றினை தயாரித்து வழங்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்.






»»  read more

சம்மாந்துறை மக்களை தலைமை தாங்கக் கூடிய அரசியல் தலைமைகள் சம்மாந்துறையிலிருந்தே உருவாக்கப்பட வேண்டும் : எம்.ஐ.எம்.மன்சூர்


(ஹனீபா)
சம்மாந்துறை மக்களை தலைமை தாங்கக் கூடிய அரசியல் தலைமைகள் சம்மாந்துறையிலிருந்தே உருவாக்கப்பட வேண்டும் மாற்றான் தாய் மனப்பாங்குடன் செயற்பட்டுவரும் பிர பிரதேசங்களைச் சேர்ந்த அரசியல் தலைமைகளால் சம்மாந்துறை மண்னுக்கு அரசியல் தலைமைதாங்க ஒரு போதும் முடியாது என கிழக்கு மாகாண சகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் சூழுரைத்தார்.

இன்று (23) சம்மாந்துறை அல்மர்ஜான் மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற மஹிந்த சிந்தனையின் கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்ற நிறைவான இல்லம் வழமான தாயகம் எனும் தேசிய நிகழ்சிசித்திட்டத்தின் கீழான கிராமிய மக்கள் ஒன்று கூடலும் நடமாடும் சேவையும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் நடைபெற்ற நடமாடும் நிகழ்வை ஆரம்பித்து வைத்து தொடர்ந்து உரையாற்றுகையில் சம்மாந்துறை மண் ஆண்டான்டு காலமாக அரசியல் தலைமைகளால்; அலங்கரிக்கப்பட்டு அபிவிருத்தி கண்டு வந்த இந்தப் பிரதேசம் இன்று எமது மக்கள் செய்த துரோகத்தனமான சதிகளினால் தேசிய அரசியலில் எமது மக்களுக்காக பேசக்கூடிய அரசியல் தலைமைகள் இல்லாது சம்மாந்துறை என்ற அம்பாறை மாவட்டத்தின் முதுகெலும்பாக காணப்படகின்ற பிரதேசம் அநாதரவாக்கப்பட்டுள்ளது.

எமது அரசியல் தலைமை மர்ஹூம் அன்வர் இஸ்மாயீல் அவர்களின் மரணத்தின் பின்னர் எமது ஊரின் அரசியல் தலைமையாக தாரைவாக்கப்பட்ட அமைச்சர்கள் எமது மக்களின் அபிலாiஷகள் எதையும் பூர்த்தி செய்யமல் எமது மக்களுக்கு அரசியல் தலைமை வழங்கிக் கொண்டிருக்கின்றது என்பது வேதனைக்குரிய விடயமாகும் இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது இந்த ஊரின் இந்த மக்களின் தேவைகளையும் பிரச்சினைகளையும் இனங்கண்டு அதற்குரிய தீர்வை பெற்றுக் கொடுக்கக் கூடிய திராணி இந்த ஊரில் பிறந்த ஒருவருக்குத்தான் இருக்க முடியும்.

இதனை செய்வதற்கு சம்மாந்துறையை சேர்ந்த நௌஷhட்டாக இருந்தாலம் சரி, அமீராக இருந்தாலும் சரி, மன்சூராக இருந்தாலும் சரி அல்லது இந்த ஊரைச் சேர்ந்த யாராவது ஓருமகன் தான் தலைமைதாங்கமுடியும்.

இந்த ஊரின் தலைமையினை பொறுப்பேற்றுள்ள அமைச்சர் கடந்த மூன்று ஆண்டகளுக்கும் எமது ஊரின் அபிவிருத்தி தொடர்பாக குறைந்தது ஒரு மாதத்துக்கு ஒரு கூட்டத்தையாவது கூட்டியிருந்தால் 36 கூட்டங்கள் நடத்தப்பட்டிருந்திருக்கும் அவ்வாறு நடத்தப்பட்டிருப்பின் இங்கு குறிப்பிடப்பட்ட மலசல கூடப்பிரச்சினை, வீடில்லாப்பிரச்சினை, நீர்பாசன பிரச்சினை பொன்ற பலதரப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றிருக்க முடியும் இதுகால வரைக்கும் எங்களது வற்புறுத்தல்களுக்கு அமைவாக இரன்டு மூன்று கூட்டங்கள் மாத்திரம் நடத்தப்பட்டுள்ளது அதுவும் எமது பிரதேசத்தின் அபிவிருத்திக்காக அரசாங்கத்தினால் ஒதுக்கப்படுகின்ற நிதியினை கூறுபோடுவதற்காக பங்கிடுவதற்காக கூட்டப்படுகின்றது இவ்வாறு பங்கீடு செய்வதறகான அரசியல் தலைமைகள் எங்களுக்கு தேவையில்லை பொதுமக்கள் மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் எதிர்காலத்தில் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்ததார்.

ஆரசியல் அற்ப சுகங்களுக்காக சிலர் தமது அரசியல் அதிகாரங்களை சூரையாடி வருகின்றனர்.

அரசாங்கம் எமது நாட்டின் ஜனாதிபதி அவர்களின் தூரநோக்கு சிந்தனைக்கு அiவாக இந்த நாட்டிலுள்ள 14022 கிராமசேவகர் பிரிவுகளிலும் இவ்வாறான மக்கள் ஒன்று கூடல்களையும் நடமாடும் சேவைகளையும் நடாத்தி நிறைவான இல்லம் வழமான தாயகம் என்ற தாரக மந்திரத்துக்க அமைவாக மக்களின் தேவைகளை அறிந்து அவர்களுடைய காலடிக்கு சென்று நிறைவு செய்கின்ற ஒரு மகத்தான பணியினை முன்னெடுத்து வருகின்றனர்.

பொதுமக்களாகிய நாம் எமக்குக் கிடைக்கின்ற சாதகமான சூழ்நிலைகளை பயன்படுத்தி எம்மை வழப்படத்திக் கொள்ள வெண்டும் எனவும் அமைச்சர் மன்சூர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஏனைண திணைக்களங்களின் அதிகாரிகள் உள்ளுர் அரசியல் தலைமைகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த வைபவத்தில் சிரேஷ;ட பிரஜைகள் சிலர் கௌரவிக்கப்பட்டனர் அத்துடன் சிப்தொர புலமைப்பரிசில், மற்றும் சமுர்த்தி நிவாரண கொடுப்பனவுகளும் அதிதிகளால்; வழங்கி வைக்கப்பட்டன.











»»  read more
புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா