இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

5/20/2015

காமக்கொலையை கண்டித்து கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம்

எம் ரீ எம் .பர்ஹான்
பூங்குடி தீவு மாணவி வித்யாவின் காமக்கொலையை கண்டித்து இனறு கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியல் கற்கை மாணவர்கள் ஏற்பாடு செய்த கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (20) இடம் பெற்றது.



»»  read more

7/17/2014

கிழக்கு பல்கலைக்கழக (SVIAS) மஜிலிஸ் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு Photos

(எம்.ரீ.எம்.பர்ஹான்)

கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகிய கற்கை நிறுவக முஸ்லிம் மஜிலிஸ் ஏற்பாடு செய்த இப்தார் மற்றும் விஷேட பயான் நிகழ்வு இன்று (2014.07.18) பல்கலைக்கழக இராசதுரை அரங்கில் இடம் பெற்றது.

இன் நிகழ்வில் மாற்றுமத அன்பர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.










»»  read more

6/28/2014

சுவாமி விபுலானந்தர் நினைவு தின கிரிக்கட் சுற்றுப் போட்டி

(எம் ரீ எம் பர்ஹான்)
சுவாமி விபுலானந்தர் அவர்களின் நினைவு தினத்தை சிறப்பிக்கும் முகமாக மட்டக்களப்பு கல்லடி கிழக்குப் பல்கலைக் கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம் ஏற்பாடு செய்திருந்த மாணவர்கள் மற்றும் அலுவலர்கள் பங்கு பற்றும் கிரிக்கட் சுற்றுப் போட்டி மிகப்பிரமாண்டமான முறையில் சிவானந்தா  தேசிய பாடசாலை மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.இந் நிகழ்விற்கு கிழக்குப் பல்கலைக் கழக உபவேந்தர் கலாநிதி.கிட்ணன் கோவிந்தராஜா பிரதம விருந்தினராக கலந்து கொண்டதுடன், அதிதிகள் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக பணிப்பாளர் கலாநிதி க.பிறேமகுமார், சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக சிரேஷ்ட உதவிப் பதிவாளர் ஏ.ஜே.கிறிஷ்டி உட்பட விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இங்கு SVIAS CHALLENGERS, SVIAS ELEVATION, SVIAS HARMONY, SVIAS CREATION , SVIAS RHYTHMS   ஆகிய அணிகளுக்கிடையே கிரிக்கட் சுற்றுப் போட்டிகள் நடைபெற்றது.இதன்போது முதலாம் இடத்தை SVIAS CHALLENGERS அணியினரும், இரண்டாம் இடத்தை SVIAS RHYTHMS அணியினரும் பெற்றுக் கொண்டனர். இவர்களுக்கு அதிதிகளால் வெற்றிக் கேடயம் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டது.







»»  read more

5/29/2014

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 09 வது பட்டமளிப்பு விழா

-எம்.வை.அமீர்-
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 9 வது பட்டமளிப்பு விழா இன்று (24-05-2014) சனிக்கிழமை 2.00 மணிக்கு பல்கலைக்கழக, ஒலுவில் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள விசேட அரங்கில் இடம்பெற்றது.

சரியாக 1.15 மணிக்கு பட்டதாரிகள் அணிவகுப்பு ஆரம்பிப்பதுடன் விழாவுக்கான ஏனைய நடைமுறைகளும் இடம்பெற்றதன் பின்னர் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் அச்சி முகம்மட் இஷாக் அவர்கள் 2.30 மணிக்கு நிகழ்வுகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதனைத்தொடர்ந்து இந்நிகழ்வின் முக்கிய பேச்சாளரான கலாநிதி பீ.வீ.ஜெயசுந்தர அவர்கள் பற்றிய அறிமுகம் ஒன்றினை உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் அவர்கள் வழங்கினார்.

பின்னர் நிகழ்வின் முக்கிய பேச்சாளரான திறைசேரியின் ஆளுநரும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளருமான கலாநிதி பீ.வீ.ஜெயசுந்தர அவர்கள் விசேட உரையாறினார்.

முதல் நிகழ்வாக சட்டத்துறையில் சாதனைபடைத்த ஓய்வுபெற்ற நீதியரசர் சீ.வீ.வீரமந்திரி மற்றும் பாயீஸ் முஸ்தபா ஆகியோருக்கு விசேட கலாநிதி பட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கற்ற 441 மாணவர்கள் அவரவர் கற்ற பிரிவுகளில் இருந்து பட்டங்களை பெற்றனர். இதில் 2011/2012 கல்வி ஆண்டில் வர்த்தக முகாமைத்துவ பீடத்ததில் வணிக நிர்வாக முதுகலை பட்டத்தை 09 மாணவர்களும், பிரயோக விஞ்ஞான பீடத்தில் இருந்து 2007/2008 கல்வி ஆண்டில் விஞ்ஞானத்தில் இளங்கலை பட்டம் (விசேடம்) 03 மாணவர்களும், பிரயோக விஞ்ஞான பீடத்தில் இருந்து விஞ்ஞானத்தில் 2008/2009 கல்வி ஆண்டில் இளங்கலை பட்டத்தை 31 மாணவர்களும் கலை கலாச்சார பீடத்தில் இருந்து 2007/2008 கல்வி ஆண்டில் விசேட பட்டத்தை 45 மாணவர்களும் கலை கலாச்சார பீடத்தில் இருந்து 2008/2009 கல்வி ஆண்டில் 89 பேரும் அரபு இஸ்லாமிய பீடத்தில் இருந்து விசேட பட்டத்தை 2007/2008 கல்வி ஆண்டில் 24 பேரும் 2008/2009 கல்வி ஆண்டில் பட்டத்தை 83 பேரும் வர்த்தக முகாமைத்துவ பீடத்தில் இருந்து 2007/2008 கல்வி ஆண்டில் வர்த்தக முகாமைத்துவ பட்டத்தை 65 பேரும் 2008/2009 கல்வி ஆண்டில் வர்த்தக பட்டத்தை 41 பேரும் 2008/2009 கல்வி ஆண்டில் விஞ்ஞான தொழில்நுட்ப பட்டத்தை 01 வரும் 2008/2009 கல்வி ஆண்டில் விஞ்ஞான தொழில்நுட்ப பட்டத்தை 52 பேரும் பெற்றனர்.
பிரயோக விஞ்ஞான பீடத்தில் இருந்து சிறந்த மாணவியாக மர்ஹும் கலாநிதி எம்.எச்.எம்.அஸ்ரப் ஞாபகார்த்த பதக்கத்தை எம்.என்.பஸ்லுல் ஹஸ்னாவும் கலைகலாச்சார பீடத்தில் இருந்து பேராசிரியர் கைலாசபதி ஞாபகார்த்த பதக்கத்தை எம்.ஆர்.றாசியாவும் வர்த்தக முகாமைத்துவ பீடத்தில் இருந்து அல் ஹாஜ் ஏ.எல்.இப்ராலெப்பை  ஞாபகார்த்த பதக்கத்தை ஏ.ஆர்.பாத்திமா தபாணியும் அல் ஹாஜ் ஏ.எம்.இஸ்மாயில் ஞாபகார்த்த பதக்கத்தை ஜீ.எம்.எம். .பாத்திமா ரக்சானாவும் பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

ஓய்வுபெற்ற நீதியரசர் சீ.வீ.வீரமந்திரி அவர்களால் ஒருதொகுதி நூல்கள் பல்கலைக்கழகத்துக்கு வழங்கி வைக்கப்பட்டதுடன், கலாநிதி பீ.வீ.ஜெயசுந்தர அவர்களுக்கு பல்கலைக்கழக உபவேந்தர் அவர்களால் நினைவுச்சின்னம் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.


அரசியல்வாதிகள் தரப்பில் இருந்து பிரதி அமைச்சர் பைசர்முஸ்தபா அவர்களும் மாகாணசபை உறுப்பினர் ஏ.எல். தவம் அவர்களும் பங்கு கொண்டிருந்தனர்.


»»  read more

4/12/2014

நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு விஜயம்

-எம்.வை.அமீர்-
எதிர்வரும் 2014-04-20 ம் திகதி இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ அவர்கள் வருகை தரவுள்ளதை முன்னிட்டும் பல்கலைக்கழகத்தின் ஏனைய நிலவரங்களை ஆராய்வதற்காகவும் மாண்புமிகு நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் இன்று காலை தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு வருகை தந்திருந்தார்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் அவர்கள் நீதி அமைச்சரை வரவேற்று எதிர்வரும் 2014-04-20 ம் திகதி திறந்து வைக்கப்படவுள்ள கட்டிடங்களின் இறுதிக்கட்ட வேலைத்திட்டங்களை சுற்றிக்காண்பித்ததுடன் எதிர்கால திட்டங்கள் தொடர்பாகவும் விபராமாக எடுத்துக்கூறினார்.

இந்நிகழ்வுகளில் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எச்.எம்.அப்துல் சத்தார் அவர்களும் விரிவுரையாளர் எம்.ஏ.எம்.சமீம் அவர்களும் சிரேஷ்ட விரிவுரையாளர் கே.எம்.முபாரக் அவர்களும் சிரேஷ்ட உதவிப்பதிவாளர் எம்.எச்.நபார் அவர்களும் பிரசன்னமாய் இருந்தனர்.



»»  read more

தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு ஜனாதிபதி வருகை தொடர்பாக உள்ளூர் பத்திரிகையாளர்களை தெளிவு படுத்தும் பத்திரிகையாளர் சந்திப்பு

-எம்.வை.அமீர்-
எதிர்வரும் 2014-04-20 ம் திகதி இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ள பல்வேறுபட்ட அங்குராப்பன நிகழ்வுகளில் பங்குகொள்வதற்காக அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ அவர்கள் வருகை தரவுள்ளார்.

இந்நிகழ்வு சம்மந்தமாக உள்ளூர் பத்திரிகையாளர்களை தெளிவுபடுத்தும் பத்திரிகையாளர் சந்திப்புஇ இன்று தென்கிழக்கு பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எச்.எம்.அப்துல் சத்தார் அவர்களும் கலை கலாச்சார பீடாதிபதி எம்.அப்துல் ஜப்பார் அவர்களும் கலந்து கொண்டிருந்த அதேவேளை விரிவுரையாளர் எம்.ஏ.எம்.சமீம் அவர்களும் சிரேஷ்ட விரிவுரையாளர் கே.எம்.முபாரக் அவர்களும் சிரேஷ்ட உதவிப்பதிவாளர் எம்.எச்.நபார் அவர்களும் பிரசன்னமாய் இருந்தனர்.

இங்கு கருத்துத்தெரிவித்த உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் எதிர்வரும் 2014-04-20 ம் திகதி காலை 10.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ள நிகழ்வில் அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ அவர்களினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அஷ்ரப் ஞாபகார்த்த நூலகமும்  வர்த்தக முகாமைத்துவ பீடத்துக்கான கட்டிடத்தொகுதியும் திறந்துவைக்கவுள்ளதாகவும்  அதேவேளை ஒலுவில் வளாகத்திலும் சம்மாந்துறையில் அமைந்துள்ள பிரயோக விஞ்ஞான பீடத்திலும் மாணவர் விடுதிக்கான அடிக்கல்களும் நடப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ அவர்கள் இப்பல்கலைக்கழகத்துக்கு இரண்டாவது தடவையாக வருகைதரவுள்ளதாகவும் அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ அவர்களின் மகிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பை அபிவிருத்தி செய்யும் திட்டத்தில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு சுமார் 360 மில்லியன் ரூபாய்கள் செலவில் கட்டி முடிக்கப்பட்ட மேற்படி கட்டிடங்களை மாணவர்களின் பாவனைக்கு திறந்து வைக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

சுமார் 2500 பேர் பங்குகொள்ளக்கூடிய மக்கள் சந்திப்பு  ஒன்றும் இங்கு இடம்பெறவுள்ளதாகவும் அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ அவர்களுடன் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பீ.திசாநாயக்க அவர்களும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் அரசியல் பிரமுகர்களும் உயர்கல்வி அமைச்சின் அதிகாரிகளும் உள்ளூர் பிரமுகர்களும் கலந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.



»»  read more

ஜனாதிபதி வருகையை முன்னிட்டு தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முனேற்பாடு சம்மந்தமான கலந்துரையாடல்

-எம்.வை.அமீர்-

எதிர்வரும் 2014-04-20 ம் திகதி இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ள பல்வேறுபட்ட அங்குராப்பன நிகழ்வுகளில் பங்குகொள்வதற்காக அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ அவர்கள் வருகை தரவுள்ளார்கள் இந்நிகழ்வை சிறப்பாக நடாத்த வேண்டும் என்ற நிலையில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் அவர்களது தலைமையில் நிகழ்வு தொடர்பான மீளாய்வுக்கூட்டம் இன்று 2014-04-11 ம் திகதி பல்கலைக்கழகத்தின் அரபிக் பீட கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள்இ துறைத்தலைவர்கள்இவிரிவுரையாளர்கள்இ நிருவாகம் சார்ந்த உத்தியோகத்தர்கள் மற்றும் கல்விசார உத்தியோகத்தர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். இங்கு நிகழ்வுகள் தொடர்பான குழுக்களின் முன்னேற்றம் தொடர்பாக ஆராயப்பட்டது.

இங்கு உரையாற்றிய உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் அவர்கள் அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ அவர்களின் வருகையை நாங்கள் சிறப்பான முறையில் நடத்த வேண்டும் என்றும் அதற்க்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

 எதிர்வரும் 2014-04-20 ம் திகதி காலை 10.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ள நிகழ்வில் அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ அவர்களினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அஷ்ரப் ஞாபகார்த்த நூலகத்தையும் வர்த்தக முகாமைத்துவ பீடத்துக்கான கட்டிடத்தொகுதியையும் திறந்துவைக்கவுள்ள அதேவேளை ஒலுவில் வளாகத்திலும் சம்மாந்துறையில் அமைந்துள்ள பிரயோக விஞ்ஞான பீடத்திலும் மாணவர் விடுதிக்கான அடிக்கல்களும் நடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுமார் 2000 பேர் பங்குகொள்ளக்கூடிய கூட்டம் ஒன்றும் இங்கு இடம்பெறவுள்ளது. அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ அவர்களுடன் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பீ.திசாநாயக்க அவர்களும் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் போன்றோருடன் அரசியல் பிரமுகர்களும் உயர்கல்வி அமைச்சின் அதிகாரிகளும் உள்ளூர் பிரமுகர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.



»»  read more

3/15/2014

தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தில் பிரியாவிடை

-எம்.வை.அமீர்-
தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தின்கல்வி சார ஊழியர் மேன்பாட்டு சங்கத்தின் ஏற்பாட்டில் பிரியாவிடை நிகழ்வு 2014-03-13 பகல் இடம்பெற்றது.

மிக நீண்டகாலமாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஆய்வுகூட தொழில்நுட்ப உத்தியோகத்தராக சம்மாந்துறை பிரயோக விஞ்ஞான பீடத்தில் கடமையாற்றிக்கொண்டிருக்கும் வன்னியசிங்கம் பவானந்தன் மாற்றுதல் பெற்று ஒலுவிலில் அமைந்துள்ள பொறியல் பீடத்துக்கு மாற்றுதல் கிடைத்து சென்றதை மையமாக வைத்தே இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வுக்கு விசேட அதிதியாக பிரயோக விஞ்ஞான பீடத்தின் சிரேஷ்ட உதவிப்பதிவாளர் பீ.எம்.முபீன் கலந்துகொண்டதுடன் தென்கிழக்கு பலகலைக்கழக கல்விசார ஊழியர் சங்கத்தலைவர் வை.முபாறக் மற்றும் பிரயோக விஞ்ஞான பீடத்தின் கல்விசார ஊழியர்களின் மேன்பாட்டு அமைப்பின் தலைவர் எம்.ஏ.றிபாயிஸ் முகம்மட்அதன் செயலாளர் பர்சானா முஸ்தபா போறோருடன் பிரயோக விஞ்ஞான பீடத்தில் கடமைபுரியும் அனைத்து கல்விசார ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

இங்கு பிரயோக விஞ்ஞான பீடத்தின் சிரேஷ்ட உதவிப்பதிவாளர் பீ.எம்.முபீன் கருத்துத் தெரிவித்தபோது ஊளியர்களுக்கிடையேயான இவ்வாறான நிகழ்வுகள் அவர்களது அன்யோன்யத்தையும் பரஸ்பர மிகுந்த இறுக்கத்தையும் காட்டுவதாகவும்  பவானந்தன் நீண்ட தூரம் பயணம் செய்து சுமார் 20 வருடங்கள் கஷ்டமான சுழலிலும் இங்குவந்து பணிபுரிந்ததை மிகவும் மகிழ்வுடன் நினைவு கூர்வதாகவும் தெரிவித்தார்.இங்கு சக ஊழியரான எஸ்.றமீசும்பவானந்தன் பற்றிய விடயங்கள் சம்மந்தமாக உரையாற்றினார்.







»»  read more

தென்கிழக்கு பல்கலைகழக பிரயோக விஞ்ஞான பீடத்தில் இரத்ததான நிகழ்வு

-எம்.வை.அமீர்-

இன்று காலை தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தில் இரத்ததான நிகழ்வு இடம்பெற்றது. பிரயோக விஞ்ஞான பீடத்தின் மாணவ சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு பொறுப்பான வைத்தியர்கள் உள்ளிட்ட குழுவினர் இரத்தம் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட சிரேஷ்ட உதவிப்பதிவாளர் பீ.எம்.முபீன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரயோக விஞ்ஞான பீட கணிதபிரிவுத்துறைத் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எச்.எம்.எம்.நளீர் மற்றும் சிரேஷ்ட மாணவர் வழிகாட்டி ஆலோசகர் கலாநிதி கே.கோமதி  போன்றோரும் கலந்து கொண்டனர்.

இரத்ததானம் செய்வதனால் ஏற்படக்கூடிய நன்மைகள் தொடர்பாக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு பொறுப்பான வைத்திய குழுவினர் மாணவர்களுக்கு விரிவாக எடுத்துக்கூறினார். இதன் பயனாக மாணவர்கள் பெரும்திரளாக கலந்து கொண்டு தங்களது இரத்தங்களை தானம் செய்தனர். அதிகமான பெண் மாணவிகள் இரத்த தானம் செய்ததது குறிப்பிடத்தக்கது.





»»  read more

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 'தேவட்ட' இசை இரவு

(எம்.வை.அமீர்)
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீட மைதான முற்றலில் இன்று 2014-03-11 மாலை பல்கலைக்கழக இரண்டாம் மற்றும் முதலாம் வருட மாணவர்கள் ஒன்றிணைந்து 'தேவட்ட' என்ற தொனிப்பொருளில்இ முற்றிலும் சிங்கள பாரம்பரிய இசை மற்றும் கலைகளை நினைவு கூறக்கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீட கணிதத்துறை தலைவர் கலாநிதி எச்.எம்.எம்.நளீர் அவர்களும் விசேட அதிதிகளாக பௌதிகதுறைத் தலைவர் கலாநிதி ஆர்.செந்தில்நிதிஇ சிரேஷ்ட மாணவ வழிகாட்டல் தலைவர் கலாநிதி கே.கோமதிஇ சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.எச்.ஹாறுன் போன்றோருடன் தென்கிழக்கு பல்கலைக்கழக சிங்கள சாஹித்திய சங்க ஆலோசகர் சிரேஷ்ட விரிவுரையாளர் அமரசிறி விக்கிரமரத்ன அவர்களும் கலந்து கொண்டனர்.

'தேவட்ட'  என்ற இரு வேலிகளுக்கிடையிலான நடைபாதை எனும் கருத்துப்பட ஒழுங்கமைக்கப்பட்டு நடைபெற்ற இந்த இசை நிகழ்வில் சிரேஷ்ட விரிவுரையாளர் அமரசிறி விக்கிரமரத்ன சிங்கள பாரம்பரிய இசையுடன் சம்மந்தப்படுத்தி இசையுடன் கூடிய சொற்பொழிவு ஒன்றை நிகழ்வு முடியும்வரை நிகழ்த்திச்சென்றார். சம்மாந்துறையில் அமையப்பெற்றுள்ள பிரயோக விஞ்ஞான பீட மைதான முற்றலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஒலுவில் வளாகத்தில் இருந்தும் பெரும்திரளான சிங்கள மாணவர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.





»»  read more

12/12/2013

கிழக்குப் பல்கழைக்கழகத்தில் ஒளி விழா நிகழ்வு

(எம.ரீ.எம்.பர்ஹான்)
கிழக்கு பல்கழைக்கழக சுவாமி விபுலாநந்தா அழகியற் கற்கை நிறுவக கத்தோலிக்க மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்த  (ஏசு பிறப்பை கொண்டாடும்) நிகழ்வு இன்று (2013-12-12) நிறுவக இராசதுறை அரங்கில் இடம் பெற்றது.
 
இன் நிகழ்வில் கத்தோலிக்க மதப்போதகர்கள், பல்கழைக்கழக கல்வி சார், கல்வி சாரா உழியர்கள் மற்றும் மாணவர்கள் நிகழ்வில் பங்கு கொள்வதை படங்களில் காணலாம்.






»»  read more
புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா