இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

7/10/2014

ஸதகத்துல் ஜாரியா "என அறியப்படும் ஸ்ரீ லங்கன் முஸ்லிம் சாரிட்டி-யு .கே தன்னார்வ தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள வருடாந்த பொதுக் கூட்டமும் இப்தார் நிகழ்வும்

"ஸதகத்துல் ஜாரியா "என அறியப்படும் ஸ்ரீ லங்கன் முஸ்லிம் சாரிட்டி-யு .கே    தன்னார்வ தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள வருடாந்த பொதுக் கூட்டமும்    இப்தார் நிகழ்வும் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் சனிக்கிழமை  ஜூலை மாதம் 12ஆம் திகதி கிழக்கு லண்டனின் ஈஸ்ட் ஹாம் நகரில் உள்ள  Hartley Centre இல் நடை பெற ஏற்பாடாகி உள்ளது 

இன் நிகழ்வில் பயனுள்ள இஸ்லாமிய உரை மற்றும் அமைப்பின் வருடாந்த அறிக்கை, இணையத்தள அங்குராப்பணம், மற்றும் சதகதுள் பித்ரா, சகாத் மற்றும் சதக்கா பங்களிப்போரின் நிதி சேகரிப்பு ,புதிய அங்கத்தவர்கள் அனுமதி மற்றும் இப்தார்  என்பன நடை பெரும் என எதிர் பார்க்கப்படுகின்றது 


ஸதகத்துல் ஜாரியா அமைப்பானது பிரித்தானிய  மற்றும் இலங்கையில் வசிக்கின்ற இலங்கையை பிறப்பிடமாக கொண்ட முஸ்லிம்களின் நலன்களையும்  நிலையான தர்மத்தை ஊக்குவிப்பதனையும் அடிப்படையாகக் கொண்டு  பிரித்தானியாவில் 2009 ஆம் வருடம் ஆரம்பிக்கப்பட்டு   சட்டபூர்வ சமூக நிதியமாக 2012 இல் பதிவு செய்து   சமூக நலன், கல்வி மேம்பாடு, அஹதியா இஸ்லாமிய கல்வி, தொழில் வாய்ப்பு கருத்தரங்குகள், பள்ளிவாசல் புனர்நிர்மாணம், குடிநீர் வசதிகள், மேலும் வாழ்க்கைத்தர உயர்வு போன்ற நிலையான தர்ம சேவைகளை கடந்த 5  வருட காலமாக பிரதேசவாரியான வேறுபாடுகளற்று இலங்கையிலும் பிரித்தானியாவிலும் முக்கிய சமூகப் பணிகளை ஆற்றி வருகின்றது  

கடந்த ஜனவரி மாதத்திலும் இவ் வமைப்பின் ஏற்பாட்டில்  நடந்திருந்த   "எங்கள் குடும்பமே  , எங்களின் அத்திவாரம்" என்ற தொனிப் பொருளிலான விசேட ஒன்று கூடல் நிகழ்வும்  கலந்து கொண்டோர் மற்றும் ஆர்வலர்களை மிகவும் கவர்ந்திருந்தது 

 "மேற்கத்தைய தாக்கத்தில் வளரும் எம் பிள்ளைச் செல்வங்களின் சவால்களை எதிர் கொள்ள பெற்றோராகிய நாம் தயாரா?","இஸ்லாமிய வழியில் பிள்ளை வளர்ப்ப்பும் ; பிள்ளைகள் பெற்றோர் மீது கொள்ள வேண்டிய கடப்பாடும் , கண்ணியமும்", மற்றும்  "இஸ்லாமிய குடும்ப அமைப்பை கட்டி எழுப்புவோம்"  போன்ற தலைப்புகளில் முறையே  சிறுவர் உடல் நிலை விசேட நிபுணரும் வைத்தியக் கலாநிதியுமான இலங்கையைச் முஸ்தபா ரயீஸ் , சவூதி அரேபியாவைச் சேர்ந்த உஸ்தாத் அபு பிலால் அப்துர் ரஹ்மான்  மற்றும் இந்தியாவைச் சேர்ந்த   வைத்தியர் அஹ்மத் கபீர் ஆகியோர் கலந்து தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் சிறப்புரைகளை ஆற்றி தாயகம் விட்டு  புலம் பெயர் வாழும் குடும்பத்தவர்களின்  மத்தியில்  சிறந்த விழிப்புணர்வை 
ஏற்படுத்தி இருந்தது 

இவ்வாறான மாநாடுகள், கலந்துரையாடல்கள் ஈஸ்ட் ஹாம் வாழ்  இலங்கை  இந்திய முஸ்லிம் மக்களிடையே சமூக அக்கறையை ஏற்படுத்துவதுடன் சமூக ஒற்றுமையையும் மேம்படுத்தி இருந்ததாக  நிகழ்வில் கலந்துகொண்ட மக்களிடையே பேசப்படிருந்ததும்  இங்கு குறிப்பிடத்தக்கது 


முஸ்லிம்களின் நலன்களையும்  நிலையான தர்மத்தை ஊக்குவிப்பதனையும் அடிப்படையாகக் கொண்டு செயற்படும் இத் தன்னார்வ தொண்டு அமைப்பில் சேர்ந்து செயற்பட விரும்பும் நலன் விரும்பிகள் http://www.slmcuk.org    என்ற இணையத்தள முகவரி மூலம்  தகவல்களை பெற்று  பெற்று  தொடர்பு கொள்ளுமாறு அமைப்பினர் கேட்டுக் கொள்கின்றனர் 

தகவல்: ஜெஸீம்   ஏ . ஹமீட், லண்டன்

»»  read more

6/17/2014

உயிருள்ளவரை என் சமூகத்துக்காக முன்னிற்பேன் – ஹரீஸ் எம்பி

MY.Ameer
அளுத்கமை சம்பவமானது தற்செயலாக இடம்பெற்றதன்றி திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்பட்ட வெறியாட்டமே என திகாமடுல்ல மு.கா. பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவமான அளுத்கமை மற்றும் பேருவளை முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அவர்களது இருப்புக்களுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலன்றி முழு நாட்டு முஸ்லிம்களுக்கும் விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகவே தான் பார்ப்பதாகவும் ஹரீஸ் எம்பி விடுத்துள்ள விஷேட அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஹரீஸ் எம்பி விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:

அளுத்கமை முஸ்லிம்கள் மீது இனவெறிபிடித்த காடையர்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூரத்தை நேரடியாகச் சென்று பார்த்தபோது என் மனம் கொதிப்படைந்தது மட்டுமன்றி முஸ்லிம் உம்மத்தில் அவல நிலையை நினைத்து என்னை அறியாமலேயே கண்ணீரும் சிந்திவிட்டேன்.
எந்தளவுக்கு மிகவும் கேவலமாக இறங்கி முஸ்லிம்களையும் அவர்களது வர்த்தகத்தையும் அழிக்க முடியுமோ அந்தளவுக்கு இனவெறியர்கள் கீழிறங்கியிருப்பதை என்னால் அங்கு உணர முடிந்தது.

பௌத்த தேரர் மீது முஸ்லிம் இளைஞர் தாக்குதல் நடத்தியிருப்பது உண்மையென்றால் அதற்குரிய நடவடிக்கையெடுக்க பொலிஸார் இருக்கின்ற வேளையில் அந்த ஜனநாயக வழிமுறையை பின்பற்றாது இனவெறியர்கள் நடந்து கொண்டிருப்பது உண்மையில் இச்சம்பவம் நன்கு திட்டமிடப்பட்ட முறையில் அரங்கேறியிருக்கிறது என்பதை புலப்படுத்துகின்றது.

இற்றைக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்து முஸ்லிம்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட இனவாதம் இன்று அளுத்கமை சம்பவத்துடன் அதி உச்சகட்டத்தை அடைந்துள்ளது.

ஹலால், ஹபாயா என்று பள்ளிகள் மீதான தாக்குதல், இறைச்சிக் கடைகள் மீதான தாக்குதல் என்று தொடங்கிய இனவாதிகளின் அராஜகம் மூன்று அப்பாவி முஸ்லிம்களை படுகொலை செய்தும் நூற்றுக்கு மேற்பட்டோரை காயப்படுத்தியும் பத்துக்கு மேற்பட்ட கடைகளையும், வீடுகளையும் எரித்தும் கொல்லையிட்டும் என உச்சத்தை அடைந்துள்ளது.
இற்றைவரையான முஸ்லிம்களுக்கு எதிரான அனைத்து சம்பவங்களும் அனைத்தும் பொலிஸார் பார்த்தக் கொண்டிருக்கும்போதே இடம்பெற்றுள்ளது. எனினும் இவர்களில் ஒருவரேனும் இதுவரை கைதுசெய்யப்படாமலிருப்பது முஸ்லிம்கள் அரசு மீது சந்தேகம் கொள்ள வழியேற்படுத்திக் கொடுத்துள்ளது.

நாட்டில் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொலிஸாரும் இராணுவத்தினரும் கைகட்டி வேடிக்கை பார்ப்பது மட்டுமன்றி இனவாதிகளிடமிருந்து தப்பியோடி இராணுவத்தினரிடம் அடைக்களம் தேடிய முஸ்லிம்கள் தாக்கப்பட்ட கொடூர சம்பவமும் அளுத்கமையில் அரங்கேரியிருக்கின்றது. அளுத்கமையைப் பொறுத்தவரையில் சட்டம் ஒழுங்கு முற்றாக துடைத்தெறியப்பட்டுள்ளதை என்னால் உறுதியாக கூறக்கூடியதாக உள்ளது. அளுத்கமையில் இடம்பெற்ற சம்பவத்தை வெறுமனே அளுத்கமைக்கு மட்டுமே உரிய சம்பவமாக நான் பார்க்க விரும்பவில்லை. மாறாக நாடு பூராகவுமுள்ள முஸ்லிம்களுக்கு அவர்களது இருப்புக்கும் அவர்களது வர்த்தகத்துக்கும் ஏற்படுத்தப்பட்ட அச்சுறுத்தலாகவே நான் பார்க்கின்றேன். அரசின் முக்கிய பங்காளிக்கட்சியாக உள்ள எமது முஸ்லிம் காங்கிரஸும் அதன் தலைமையும் இந்த விடயத்தில் ஒரு தெளிவான முடிவை எடுக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றது.

நாட்டிலுள்ள முஸ்லிம்களின் பெரும்பான்மையான ஆதரவைப் பெற்ற முஸ்லிம் காங்கிரஸ் அளுத்கமை விடயத்திலும் இதற்கு முன்னர் நடந்த கொடூர சம்பவங்கள் விடயத்திலும் மிகக் கடுமையான அழுத்தத்தையும் எச்சரிக்கையையும் இந்த அரசுக்குக் கொடுக்க நாட்கள் எண்ணிக் கொண்டிருப்பை பொறுப்புடன் இச்சந்தர்ப்பத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

அளுத்கமை கொடூர சம்பவத்தை அடுத்து பிரதமர் தலைமையில் அரசின் அவசர கூட்டமொன்று களுத்துறையில் இடம்பெற்றது. எனினும் கூட்டம் இடம்பெற்ற அந்த இரவே வெலிப்பென்னை பிரதேசத்தில் உள்ள முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதுஇ வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன, பள்ளிவாசல் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் பதுளையில் பொதுபலசேனாவினால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடாத்தப்பட்டு அங்கு ஒரு கடை தாக்கப்பட்டும் கடை உரிமையாளர்மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுமுள்ளது. இதேநிலை துந்துவை என்ற பகுதியிலும் இடம்பெற்றுள்ளது. 

இந்தநிலையைப் பார்க்கும் போது 1915ம் ஆண்டு கம்பளையில் வேண்டுமென்று திட்டமிட்டு சிங்கள இன வெறியாளர்களால் எவ்வாறு சிங்கள – முஸ்லிம் கலவரம் தோற்றுவிக்கப்பட்டதோ அதேபோன்று சரியாக 100 வருடங்களின் பின்னர் அவ்வாறானதோர் சிங்கள – முஸ்லிம் கலவரத்தைத் தூண்ட இன்று அளுத்கமையில் அடித்தளமிடப்பட்டுள்ளதா? என்ற நியாயமான கேள்வி எம்முன் எழுகின்றது.

எனவே முஸ்லிம் இளைஞர்கள் விழிப்பாக இருங்கள். நாட்டிலுள்ள முஸ்லிம்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இளைஞர்களான உங்களின் கைகளில்தான் தங்கியுள்ளது.

எமது சமூகத்தின் மீதான இனவெறியர்களின் கொட்டத்தை அடக்குவதற்கு ஜனநாயக முறையில் தயாராகுங்கள். சமூக வலையத்தளங்களைப் பயன்படுத்தி எமக்கெதிரான அட்டூழியங்களை அராஜகங்களை சர்வதேசமயப்படுத்துங்கள். ஆங்கிலம்இ அரபு மொழி தெரிந்தவர்கள் இந்த விடயத்தில் கூடிய அக்கறை செலுத்துங்கள்.


மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நாடு பூராணவும் ஜனநாயக வழிமுறைகளுக்கமைய அமைதி ஊர்வலங்களை நடத்துங்கள். கட்சி பேதங்களைத் துறந்து ஒன்றுபடுங்கள். உங்களுக்கு என்றும் ஆதரவளிக்க என் உயிருள்ளவரை முன்னிற்பேன் என்றும் ஹரீஸ் எம்பி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (AMB)
»»  read more

கிழக்கு மாகாணசபையில் அரசுக்கு எதிரான கண்டன பிரேரணை

-எம்.வை.அமீர்-

இன்று இடம்பெறவுள்ள கிழக்கு மாகாணசபையின் அமர்வின் போது, அண்மையில் முஸ்லிம்களுக்கு எதிராக பொதுபலசேன அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அரசு இவ்வாறான சம்பவங்களுக்கு நடவடிக்கை எடுக்க வில்லை என்பதை கண்டித்தும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் சார்பில் கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரசின் உறுப்பினர்கள் குழுத்தலைவர் ஏ.எம்.ஜெமீல் அவர்களால் பொதுபலசேனவுக்கு எதிராகவும் அரசுக்கு எதிராகவும் கண்டன பிரேரணை கொண்டுவரப்படவுள்ளதாக ஏ.எம்.ஜெமீல் எமது செய்திச்சேவைக்கு தெரிவித்தார்.
»»  read more

அமைச்சுப் பதவியைத் துறக்கிறார் ஹக்கீம்

my.Ameer
அரசாங்கம் முஸ்லிம்களுக்காக பாதுகாப்பினை உடனடியாக வழங்க தயாராக வேண்டும். அரசு இதனை வழங்க தவறும்பட்சத்தில் அமைச்சுப்பதவியை துறக்க என்றும் தயார். இதற்கான அங்கீகாரத்தையும் உரிமையையும் கட்சியின் உயர்மட்டம் எனக்கு வழங்கியுள்ளது என நேற்று அழுத்கமை, தர்கா நகர் மற்றும் பேருவளையில் முஸ்லிம்களின் மீது இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் இன்று கட்சியின் தலைமையகமமான தாருஸ்ஸலாமில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த ஸ்ரீ.ல.மு.கா தேசிய தலைவரும் நீதியமைச்சருமான ரஊப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
நேற்றைய சம்பவங்கள் தொடர்பில் நேரில் சென்று பார்த்த போது அங்குள்ள மக்கள் மத்தியில் முகங்கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. முஸ்லிம்கள் கொல்லப்பட்டும் அவர்களின் சொத்துக்களுக்கும் ஏற்பட்டுள்ள அழிவுகளை பார்க்கின்றபோது இனவாத வெறியர்கள் இதனை திட்டமிட்டு செய்திருக்கின்றார்கள் என்பது புலப்படுகின்றது.

மக்களளும் கட்சியின் முக்கியஸ்தர்களும் முஸ்லிம் காங்கிரஸ் அரசிலிருந்து உடனடியாக வெளியிறங்க வேண்டும் என அழுத்தமாக தமது கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில் பக்குவமாக நிதானமாக சிந்திக்கும் கட்சி என்ற ரீதியில் உடனடியாக மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையை துரிதமாக மேற்கொண்டு வருகின்றது.

அரசு உடனடியாக சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டுவதோடு நேற்று இடம்பெற்ற கூட்டத்திற்கு அனுமதி வழங்கியது தொடர்பில் அரசும் பொலிசாரும் பதில் கூறவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன். அத்துடன் முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு அரசு உடனடியாக உத்தரவாதம் வழங்க வேண்டும். அதைவிடுத்து பேச்சுவார்த்தை என்ற ரீதியில் சமாளிப்புக்களை முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை.

அரசாங்கம் குறித்து பாரிய அதிர்ப்தியான கருத்துக்களை மக்களும் கட்சியின் உயர்மட்டங்களும் தெரிவிக்கின்றது. அமைச்சுப் பதவியில் இருந்து கொள்வது தொடர்பான முடிவினை எடுக்கும் பொறுப்பினை என்னிடம் வழங்கியுள்ளார்கள்.

அரசாங்கம் முஸ்லிம்களுக்காக பாதுகாப்பினை உடனடியாக வழங்க தயாராக வேண்டும். அரசு இதனை வழங்க தவறும் பட்சத்தில் அமைச்சுப்பதவியை துறக்க என்றும் தயார் இதற்கு முன்னரும் இருமுறை இதனைச் செய்துள்ளேன்.

சந்தர்ப்பவாத அரசியல் செய்ய நாங்கள் ஒருபோதும் தயாரில்லை. முஸ்லிம் காங்கிரஸ் ஒரு கபட நோக்கத்தில் செயற்படுகிறது  என்ற குற்றச்சாட்டையும்இ தருணம் பார்த்து அரசின் காலைவாருகின்றது என்றும் ஒரு குழுவினர் தெரிவித்துக்கொண்டு வருகின்றார்கள்.

நெருக்கடியான இவ்வாறான கட்டத்தில் பாதுகாப்பு சகவாழ்வு உறுதிப்படுத்தப்படல் வேண்டும். இனவாத குழுக்களுக்கும் இனவாத சக்திகளுக்கும் எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மக்கள் கேட்கின்றார்கள் இவ்வரசில் இருந்து என்ன நன்மை என? அழுத்தமான அரசியல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இன்றைய உயர்மட்டக்குழு தெரிவித்துள்ளனர்.

முஸ்லிம்களுக்கான பாதுகாப்பை அரசு வழங்க தவறும் பட்சத்தில் அமைச்சுப் பதவியை துறப்பேன். இது தொடர்பான எங்களது நடவடிக்கைகளை நாளை அல்லது நாளை மறுதினம் பாராளுமன்றத்தில் காட்டவுள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன். என்றார்.


இவ்ஊடகவியலாளர் சந்திப்பில் கட்சியின் செயலாளர் நாயகம்இ தவிசாளர்இ பாராளுமன்ற உறுப்பினர்கள்இ மாகாண சபை அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், மாநகர முதல்வர், பிரதேச சபை தவிசாளர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
»»  read more

5/05/2014

'மத விவகாரப் பொலிஸ் பிரிவு' தொடர்பான தேசிய ஷூறா சபையின் ஊடக அறிக்கை

2014-04-27
ஊடக அறிவித்தல் :

பௌத்த மத மற்றும் மத விவகார அமைச்சுடன் இணைக்கப்பட்டு 'மத விவகாரப் பொலிஸ்' அலகொன்று அமைக்கப்பட்டுள்ளமைஇ நம் நாட்டின் பொலிஸார் சட்டத்தை பின்பற்றி செயல்படுவதற்கு பதிலாக ஒரு சில பிக்களுக்கும் மத கோட்பாடுகளுக்கும் கீழ் படிந்து செயற்படும் ஒரு நிலைமையையே உருவாக்கும் என தேசிய சூறா சபை கருதுகின்றது.

மாறி மாறி வந்த அரசாங்கங்களின் தீவிர அழுத்தம் காரணமாக பொலிஸார் தமது கடமையை சட்டத்தின் கோட்பாடுகளின் படி மேற்கொள்ள முடியாமல் திணறிக்கொண்டிருப்பதை சகலரும் அறிவர். நிலைமை இவ்வாறிருக்கஇ வேறு ஒரு அமைச்சில் சட்டத்திற்கு புறம்பான விதத்தில் மற்றுமொரு பொலிஸ் பிரிவை அமைத்தலானது நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் பொலிஸாரின் கடமையை மேலும் சிரமமாக்கும்.

நம் நாட்டின் பொலிஸ் திணைக்களமானது பொலிஸ் மா அதிபர் முதற் கொண்டு அதிகாரிகள் வரையான கட்டமைப்பொன்றின் மூலம் நிர்வகிக்கப்படுகின்றது. இவர்கள் சட்டமா அதிபர் மற்றும் நீதிமன்றத்தின் வழிநடத்தல் மூலமும்இ பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டங்களுக்கு உட்பட்டும் செயற்படுவதோடு தமது செயற்பாடுகள் தொடர்பாக பாராளுமன்றத்திற்கு பதில் கூறும் கடப்பாடும் இவர்களுக்கு உண்டு.

ஆனால்இ தற்போது ஸ்தாபிக்கப்பட்டுள்ள மத விவகார பொலிஸின் முக்கிய விடயங்கள் ஒரு சில மதகுருமார்களிடம் கொடுக்கப்பட்டு அது குறிப்பிட்ட ஒரு மதத்தின் கோட்பாடுகளுக்கு முன்னுரிமை கொடுத்து செயற்படுமேயானால் அது பொலிஸ் திணைக்களத்திற்கு சாவு மணியாக அமைவதோடு நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதில் பாரிய பிரச்சினையையும் ஏற்படுத்தும்.

தற்போதுஇ ஒரு சில பிக்குகள் மதத்தின் பெயரால் சட்டங்களை மீறி பல்வேறுபட்ட குற்றச்செயல்களை மேற்கொண்டு வருவதைஇ சட்டம் ஒழுங்கு தொடர்பாக நமது நாடு முகங்கொடுத்து வரும் பாரிய பிரச்சினையாகக் குறிப்பிடலாம். இந்த மதகுருமார்கள்

​ ​தான்தோன்றித்தனமாக செயற்பட்டு வருவதுடன்இ பொலிஸார் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாத விதத்தில் சில அரச அதிகார பலமுள்ளவர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். மேற்படி குழப்பங்களை விளைவிப்பவர்கள் ஏற்கனவே அனுபவித்து வரும் சட்டவிரோத வரப்பிரசாதங்களைஇ புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதப் பொலிஸ் பிரச்சினைக்குத் தீர்வாக அமையாமல் மேலும் பிரச்சினை பலம் பெரும் என்றே தேசிய சூரா சபை அஞ்சுகின்றது.

நாட்டில் தற்போது மத ஒற்றுமை இருப்பதாக அண்மையில் இடம் பெற்ற ஊடக ஆசிரியர்களுடனாக சந்திப்பொன்றின்போது அதிமேதகு ஜனாதிபதி கூறினார். ஒரு சில தீவிரவாதிகளின் வன்முறைச் செயல்களைத் தவிர்த்து நோக்கும் போது மேற்படி கூற்று ஓரளவு உண்மையானதே. இருப்பினும்இ அவசர அவசரமாக மத விவகார பொலிஸ் பிரிவொன்றை அமைத்திருப்பதுஇ நாட்டில் இத்துறையில் ஏதோ மோசமான நிலையொன்று உருவாகியுள்ளது என்ற செய்தியை உலக நாடுகளுக்கு அனுப்பலாம். இதற்கு பதிலாகஇ அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் அடிக்கடி கூறுவதைப் போல மதகுருமார் உட்பட எவருக்கும் சட்டத்தை தம் கையில் எடுக்கும் உரிமை கொடுக்கப்பட மாட்டாது என்ற கூற்றை செயலில் காட்டிய வண்ணம்இ தீவிரவாதப் போக்கில் செயற்படுகின்ற ஒரு சிலருக்கெதிராகவேனும் கடும் நடவடிக்கை எடுப்பது மேலும் அதிகம் பயன் தரும். இல்லையாயின்இ நமது தாய் நாட்டின் நிலை இன்னும் மோசமடைவதை தவிர்க்க முடியாமல் போய் விடலாம் என நாம் அஞ்சுகிறோம்.

இஸ்மயில் ஏ. அஸீஸ்
பொதுச்செயலாளர்
தேசிய சூரா சபை

மேலதிக விபரங்களுக்கு சபையின் தலைவர் திரு. தாரிக் மஹ்மூத் (0777304512) அல்லது

​​செயலாளர் நாயகம் திரு. இஸ்மயில் ஏ. அஸீஸ் (0773451544) தொடர்பு கொள்ளவும்.
»»  read more

4/12/2014

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவாரா குமார் சங்ககார?

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்ககாரவை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

டி20 உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் வீரர்களுக்கு அண்மையில் நாடாளுமன்றத்தில் வழங்கப்பட்ட வரவேற்பின் போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சங்ககார உரையாற்றி கொண்டிருந்த போது, சங்ககார, நாடாளுமன்றத்திற்கு வரும் காலம் கனிந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க கூறியுள்ளார்.

இதன் போது கருத்து வெளியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான நளின் பண்டார, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட சங்ககார சிறந்தவர் என குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சியினரின் இந்த கருத்துக்களுக்கு எந்த பதிலையும் வழங்காத சங்ககார சிரித்ததாக கூறப்படுகிறது.
»»  read more

4/06/2014

கல்வியில் உயர்ந்து செல்வது போன்று பண்பிலும் உயரவேண்டும் மொனராகலை மஹாமேவ்ன அசபௌவ தேரோ

 -எம்.வை.அமீர்-

கல்வியில் உயர்ந்து செல்வது போல் புத்த மஹான் எங்களுக்கு உபதேசித்துள்ளது போன்று பண்பிலும் உயரவேண்டும் என்று மொனராகலை மஹாமேவ்ன அசபௌவ தேரோ தனது மார்க்க உரையின் போது தெரிவித்தார்.

இன்று இலங்ககை தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தில் இடம்பெற்ற 'சம்புத்த ராஜ நமமி' நிகழ்வின் போது அங்கு மாணவர்கள் மத்தியில் உரையாற்றும் போதே மேற்படி கருத்துக்களை வெளியிட்டார். தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட முதலாம் இரண்டாம் வருட மாணவர்களால் ஏற்பாடு செய்யப்படிருந்த இந்நிகழ்வுக்கு தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட மாணவர் ஆலோசகர் கலாநிதி கே.கோமதி விசேட அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.

பெரும்திரளான சிங்கள மாணவர்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. சம்மாந்துறையில் நடைபெறும் நிகழ்வில் பன்குகொள்வதர்க்காக மாணவர்கள் ஒலுவில் வளாகங்களில் இருந்து வருகை தருவதற்காக பல்கலைக்கழகத்தால் விசேட வாகன வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.

 


வீடியோ இணைக்கப்பட்டுள்ளது
http://youtu.be/itSpdbjbgoA
»»  read more

3/29/2014

சொக்லட்டில் பன்றியின் உருவத்தை ஒத்த உருவம்

இன்று நாட்டில் சிறு பான்மை முஸ்லிம்களுக்கு எதிரான பலவிடையங்கள் பகிரங்கமாகவும் இரகசியமாகவும் அரங்கேறிவரும் இந்நிலையில் மிகுந்த நூதனமாகவும் சில விடையங்கள் நடந்து வருகின்றன.

ஏற்கனவே ஹலால் சான்றிதழை விலக்கியுள்ள உபாலி நிறுவனம் அதன் சொக்லட் உற்பத்திகளில் ஒன்றான Magical Moments எனும் உற்பத்தியில் வடிவமைக்கப்பட்டுள்ள சொக்லட்களில் சிலவற்றில் பன்றியின் முக உருவத்தை ஒத்த வடிவில் சொக்லட்டுக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

முஸ்லிம்களாலும் பெரிதும் நுகரப்படும் குறித்த நிறுவனத்தின் உற்பத்திபொருட்களில் இவ்வாறான விரும்பப்படாத செயற்பாடுகள் நடைபெறுவது கவலையளிக்கக்கூடிய விடையமாகும். குறித்த நிறுவனம் இவ்வாறான செயற்பாடுகளை தவிர்க்குமானால் முஸ்லிம்களாலும் மதிக்கக்கூடிய நிலை உருவாகும்.

இருந்தபோதும் முஸ்லிம்களால் உண்ணப்படும் உணவுகளில் அதன் ஹலால் நம்பிக்கையை உணரமுடியும் என்ற அடிப்படையில்இ மிகுந்த நூதன அடிப்படையிலும் இஸ்லாமிய விரோத செயற்பாடுகள் இடம்பெறுகின்றன என்பதை முஸ்லிம்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.






»»  read more

3/20/2014

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமுடைய காலம் கடந்த தேர்தல் ஞானம்- மௌலவி முபாறக்

-எம்.வை.அமீர்-

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்படக்கூடிய காலம் கணிந்துள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் கூறியிருப்பது காலம் கடந்த தேர்தல் ஞானமாகும் என முஸ்லிம் மக்கள் (உலமா) கட்சித்தலைவர் மௌலவி முபாறக் குறிப்பிட்டார்.

கொழும்பு மாளிகாவத்தையில்இ  நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் முஜிபுர்ரஹ்மானை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு அவர் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கூறியதாவது:

 அமைச்சுப்பதவிகளுக்காக அரசாங்கத்துடன் இணைந்த இந்த முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் சமூகம் எதிர் நோக்கும் எந்தப்பிரச்சினைகளையும் நிபந்தனையாக்கவில்லை என்பதை நாமறிவோம். கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தல் காலத்திலும் அரசுக்கும் ஹக்கீமுக்கும் முறுகல் என்பது போல் காட்டப்பட்டது. தேர்தலின் பின் தீர்க்கமான முடிவை மேற்கொள்வோம் என அன்றும் இதே போல் ஹக்கீம் கூறினார். அதன் மூலம் கிழக்கு மாகாணத்தின் ஆட்சியை அரசாங்கம் இழக்கப்போகிறது என்றே கிழக்கு மக்கள் நம்பினர். அனாலும் நாம் மிகத்தெளிவாக ஒரு விடயத்தை அன்றே கூறினோம். அதாவது ஹக்கீம் இன்னமும் அமைச்சுப்பதவியில் ஒட்டியிருப்பதால் இவர்கள் அரசுக்கே முஸ்லிம்களை அடகு வைப்பார்கள் என கூறினோம். தேர்தல் முடிந்த பின் இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அலறி மாளிகையில் புரியாணி சாப்பிட்டார்கள்.

ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் எந்தக்காலத்திலாவது சரியான நேரத்தில் சரியான முடிவெடுத்ததாக ஒன்றைக்காட்ட முடியுமா? புலிகளுக்கெதிராக இந்த அரசு போராடிய போது புலிகளுக்கு சார்பாக நின்றார்கள். முஸ்லிம்களின் பள்ளிவாயல்களை இந்த அரசு உடைக்கும் போது அரசுக்கு ஆதரவாளர்களாக நி;ற்கிறார்கள். தேர்தல் வந்தால் அரசை சாடுவார்கள். தேர்தல் முடிந்தால் இந்த அரசாங்கமே நம்மை பாதுகாக்கும்; என கூறுவார்கள். மு. காவின் இத்தகைய நடவடிக்கைகளினால் முஸ்லிம் சமூகம் இன்று வெட்கிப்போயுள்ளது.

முஸ்லிம் காங்கிரசின் தலைமை கிழக்குக்கு வெளியே அதுவும் அமைச்சராக இருக்கும் வரை ஒரு போதும் கிழக்கின் ஆட்சியை மாற்ற இவர்கள் முன்வரமாட்டார்கள் என்பதே உண்மையாகும். சில வேளை தான் கிழக்கின் முதலமைச்சராக வந்து கிழக்கானின் வயிற்றில் அடிக்க வேண்டும் என நினைக்கிறாரோ தெரியவில்லை. இவர்கள் அரசாங்கம் இரண்டு உதை விட்டால் த தே கூட்டமைப்புடன் இணையும் காலம் வந்து விட்டது என்பார்கள். அரசாங்கம் இரண்டு மாலைகளை போட்டு விட்டால் அரசின் காலை நக்கிக்கொண்டு இன்றைய சூழலில் நாம் நிறைய சிந்திக்க வேண்டியுள்ளது என ஞானம் பேசுவார்கள். அவர் பேசுவது புரியாமல் புரிகிறது என்பதை காட்டுவதற்காக அப்பாவி கிழக்கு முஸ்லிம்கள் கைதட்டுவார்கள்.

கிழக்கில் ஐ தே க  மற்றும் த. தே. கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சியை ஏற்படுத்தியிருந்தால் வடமாகாண சபை தேர்தல் நடந்திருக்காது என ஹக்கீம் கூறுவது சிறு பிள்ளைத்தனமான பேச்சாகும். சர்வதேச தலையீடு மூலமே வட மாகாண சபை தேர்தல் நடைபெற்றது எனப்பதைக்கூட புரியாதவராக உள்ளாரா அல்லது தமிழ் மக்கள் முட்டாள்கள் என எண்ணிக்கொண்டு பேசுகிறாரா?

எதிர் காலத்தில் கிழக்கு மக்கள் முஸ்லிம் காங்க்pரசை ஒதுக்கி விட்டு தமது பகுதி தலைமையைக்கொண்ட தனிக்கட்சியை பலப்படுத்துவதன் மூலமே கிழககு மாகாண சபை பற்றிய தீர்க்கமான முடிவுக்கு சுயமாக முன்வர முடியும். அதே போல் கிழக்கில் ஒரு காலையும் தெற்கில் இன்னொரு காலையும் வைத்துக்கொண்டு தடுமாறிக்கொண்டிருக்கும் முஸ்லிம் காங்கிரசால் தென்னிலங்கை மக்களுக்கும் எந்த விமோசனமும் இதுவரை கிடைத்ததுமில்லைஇ இனியும் கிடைக்கப்போவதுமில்லை என்பதை கொழும்பு முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும். மாறாக இந்தக்கட்சியினரினதும் அமைச்சர் ரிசாத் தலைமையிலான கட்சியினரினதும் மடத்தனமான அரசியல் செயற்பாடுகளால் தென்னிலங்கை முஸ்லிம்கள் பாரிய இனவெறுப்புக்குள் தள்ளப்படுகிறார்கள் என்பதை புரிந்து இக்கட்சிகளை முற்றாக நிராகரிக்க முஸ்லிம்கள் முன்வர வேண்டும் என கூறினார்.
»»  read more

3/15/2014

கொழும்பு கல்விச் சமூகத்தால் அமைச்சர் ரிசாத்துக்கு பாராட்டு!

(Arivu)
கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு கொழும்பில் நாளை மாபெரும் கௌரவிப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

கொழும்பின் பழைமை வாய்ந்த பாடசாலைகளில் ஒன்றான அல் ஹிஜ்ரா முஸ்லிம் வித்தியாலயத்தின் கல்விச் சமூகம் இப்பாராட்டு விழாவை நடத்துகின்றது.

பாடசாலையின் 95 ஆவது ஆண்டு நிறைவு விழாவோடு ஒட்டியதாக இக்கௌரவிப்பு விழா நடத்தப்படுகின்றது.

ஜோர்தானில் அம்மானில் உள்ள றோயல் இஸ்லாமிய தந்திரோபாய நிலையத்தால் உலகின் செல்வாக்கு மிக்க 500 முஸ்லிம் பிரமுகர்களில் ஒருவராக அமைச்சர் ரிசாத் பதியுதீன் பெயர் குறிப்பிடப்பட்டு உள்ளார். இப்பெருமையை பெற்ற ஒரே ஒரு இலங்கை முஸ்லிம் இவரே ஆவார். இப்பெருமையை கொண்டாடியே விழா எடுக்கப்படுகின்றது.

»»  read more

அரசையும், அரசுக்கு ஆதரவான முஸ்லிம் தலைவர்களையும் முஸ்லிம் மக்கள் கட்சி ஏன் எதிர்க்கிறது?.. முபாறக் அப்துல் மஜீத் மௌலவி

-எம்.வை.அமீர்-
நாம் இந்த அரசையும், அரசுக்கு ஆதரவான முஸ்லிம் அமைச்சர்களையும்இ பாராளுமன்ற உறுப்பினர்களையும்,  மாகாண மற்றும்  மாநகர சபை உறுப்பினர்களையும் மிக கடுமையாக விமர்சிப்பதாக பலரும் ஆதங்கம் தெரிவிக்கின்றனர். ஆனால் நாம் ஒன்றும் எடுத்த எடுப்பிலேயே இவ்வாறு விமர்சனம் செய்யவில்லை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என முஸ்லிம் மக்கள் கட்சி தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:

    நாம் இந்த ஜனாதிபதியை அவரது பதவியில் அமர்த்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்கள். அதற்காக எமது லட்சக்கணக்கான சொந்தப்பணத்தை அவருக்காக செலவு செய்துள்ளோம். 2005ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதிக்கு ஆதரவாக பேச ஒரு மௌலவியேனும் முன் வராத போது நாம் பாரிய அச்சுறுத்தல்களையும் பொருட்படுத்தாது அவரது வெற்றிக்காக பாடுபட்டோம். அதே போல் கிழக்கு மாகாண சபை தேர்தல் உட்பட சகல மாகாண சபை தேர்தல்களிலும் அரசின் வெற்றிக்காக பாடுபட்டோம்.

    அரசும் நாம் எதிர்பார்த்தது போல் நன்றாகவே இருந்தது. ஆனால் 2012ம் ஆண்டு தம்புள்ள பள்ளிவாயல் தாக்கப்பட்ட போது அதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு நடவடிக்கை எடுக்காமை பாரிய விபரீதங்களை எதிர் காலத்தில் ஏற்படுத்தும் என நாம் அரசுக்கு ஆலோசனை கூறினோம். ஆனால் அது கருத்தில் எடுபடவில்லை. இதன் காரணமாக நாம் அரசாங்க ஆதரவிலிருந்து விலகினோம்.

    அதனை தொடர்ந்து பல அநியாயங்கள் முஸ்லிம்களுக்கு நடந்தேறியதை நாம் கண்டோம். அவ்வேளை நாமும் அரசுடன் இருந்திருந்தால் இன்று நாம் அரசையும் அமைச்சர்களையும் கண்டிப்பதாக கூறுபவர்கள் முஸ்லிம் சமூகத்துக்கெதிரான இத்தனை அநியாயங்களுக்கும் நாமும் பொறுப்பு என கூறியிருப்பர். ஆனாலும் சரியான நேரத்தில் சரியான முடிவை நாம் எடுத்ததால் முஸ்லிம் மக்கள் கட்சியின் தலைமைத்துவத்தை இத்தகைய அநீதிகளுக்கு துணை போனது என்ற பழிச்சொல்லிலிருந்து இறைவன் காப்பாற்றினான். அத்தகைய தூர நோக்க சிந்தனையை இறைவன் எமக்குத்தந்தான்.

 இன்று முஸ்லிம் காங்கிரஸ்இ அதாவுள்ளா காங்கிரஸ்இ  ரிசாத் காங்கிரசெல்லாம் அரசுக்கு முண்டியடித்துக்கொண்டு முட்டுக்கொடுக்கின்றன. இவர்களால் இந்த சழுதாயம் என்ன உரிமைகளை பெற்றுள்ளது என்ற கேள்வியின் காரணமாகத்தான் நாம் இவர்களை விமர்சிக்க வேண்டியுள்ளது. அது மட்டுமல்லாமல் இது வரை காலமும் முஸ்லிம்கள் அனுபவித்து வந்த பல விடயங்கள் இல்லாமல் போவதற்கு இவர்களும் அரசாங்கத்தின் பங்காளி என்பதனாலேயே நாம் இவர்களை குற்றம் சாட்ட வேண்டியுள்ளது.

    இந்த அமைச்சர்கள் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை வென்று தருவார்களாயின் அவர்களை பாராட்டுவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம். ஆனால் உரிமைகள் பற்றி கவலைப்படாது கொந்தராத்துகளின் மூலம் தமது வயிற்றுப்பிழைப்பையே முக்கியமாக கருதி இவர்கள் அனைவரும் செயற்படுகிறார்கள். ஒரு பெண்ணை பகிரங்கமாக நிர்வாணப்படுத்தி அவளை அவமானப்படுத்திக்கொண்டு அவளுக்கு புரியாணியை சாப்பிட நீட்டுவது போன்று இந்த அமைச்சர்களும் அவர்களின் கட்சிக்காரர்களும் அபிவிருத்தி பற்றி செயற்படுவதை சமயம் கற்ற மௌலவிமார் என்ற வகையில் கூட நாம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.

 ஆகவேதான் கூறுகின்றோம் முஸ்லிம் கட்சிகளின் ஒத்துழைப்புடன் ஆட்சி நடத்தும் அரசாங்கம் பேரினவாதிகளால் தாக்கப்பட்ட அனைத்து பள்ளிவாயல்கள் சம்பந்தமாக ஆராயும் கமிசன் ஒன்றை நிறுவி அவற்றுக்கான நஷ்ட ஈடுகள் வழங்கப்பட வேண்டும். தரை மட்டமாக்கப்பட்ட அநுராதபுரம் பள்ளிவாயல் போன்றவை மீண்டும் கட்டிக்கொடுக்கப்பட வேண்டும். அதே போல் சஊதி அரசால் சுனாமி பாதிப்புக்கள்ளான ஏழை மக்களுக்காக கட்டப்பட்ட வீடுகள் கைளிக்கப்பட வேண்டும். முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களம் தனியான அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும். மௌலவி ஆசிரியர் நியமனம் மீண்டும் வழங்கப்பட வேண்டும்இ கொழும்புஇ  குச்சவெளி. ஒலுவில் போன்ற முஸ்லிம்களிடமிருந்து பறித்தெடுக்கப்பட்ட காணிகள் அனைத்தும் மீண்டும் கையளிக்கப்பட வேண்டும் அல்லது உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும். ஹலால் அனுமதி பத்திரம் வழங்கும் உரிமையை ஜம்இய்யத்துல் உலமாவுக்கு மீண்டும் வழங்க வேண்டும். இவற்றை பெற்றெடுக்க முஸ்லிம் காங்கிரசும் ஏனைய காங்கிரஸ்களும்; முயற்சி செய்யாமல் வெறுமனே வார்த்தை ஜாலங்களால் இந்த சமூகத்தை தொடர்ந்தும் ஏமாற்றிக்கொண்டிருந்தால் அவர்களை நாம் விமர்சிக்காமல் இருப்பது இந்த சமூகத்துக்கு செய்யும் மிகப்பெரிய துரோகமாகும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
»»  read more

பொருளாதார அபிவிருத்திக்கான, அறிவுறுத்தும் வேலைத்திட்டம்

(ஹனீபா)
பொருளாதார அபிவிருத்தியினை இலக்காகக் கொண்ட தேசிய வரவு செலவுத்திட்டம் தொடர்பான பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படத்துவதற்கு பயனாளிகள் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தும் வேலைத்திட்டம் இன்று (11) அம்பாறை எச்.எம்.வீரசிங்க விளையாட்டு மைதானத்தில் அம்பாறை மாவட்ட செயலாளர் நீல் டீ அல்வீஸ் தலைமையில் நடைபெற்றது.

இந்த வைபவத்தில் பிரதம அதிதியாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸீல் ராஜபக்ஷ கலந்து கொண்டார் கௌரவ அதிதிகளாக அமைச்சர்களான ஏ.எல்.எம்.அதாஉல்லா, பீ.தயரத்ன, கிழக்கு மாகாண ஆளுணர் ரியர்அட்மிரல் மொஹான் விஜயவிக்ரம, பாராளுமன்ற உறுப்பினர்களான ரியர்அட்மிரல் சரத்வீரசேகர, சட்டத்தரணி சிறியாணி விஜேவிக்ரம, சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், பைஷhல் காசீம், எம்.ரீ.ஹசன்அலி, கிழக்கு மாகாண அமைச்சர்களான எம்.ஐ.எம்.மன்சூர், விமலவீர திசாநாயக்க உட்பட மடாகாண சபை உறப்பினர்கள்,பிரதேச சபைகளின் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள் திணைக்களத்தலைவர்கள், மதத்தலைவர்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள். பொதுநால அமைப்புக்களின் தலைவர்கள் என பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்த கொண்டனர்.

இந்த நிகழ்வில் கலந்த கொண்ட அமைச்சர்  பஸீல் ராஜபக்ஷ உரையாற்றுகையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற கமநெகும புறநெகும,திவிநெகம வேலைத்திட்டங்கள் தொடர்பாக மக்களுக்கு பூரண விளக்கமளித்தார்.







»»  read more

3/10/2014

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிலேயே இருந்து மரணிப்பேன்!

-எம்.வை.அமீர், எஸ்.எம்.எம்.றம்ஸான்,ஏ.எம்.சம்சுதீன்-

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிலேயே இருந்து மரணிப்பேன்!
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வழங்கினால் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பானவராக செயற்பட தயாராய் உள்ளேன்!!.
எஸ்.நிஜாமுதீன்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆரம்ப கால போராளியான தான் தனக்கு சில சில அநீதிகள் இழைக்கப்பட்ட சமயங்களில் கட்சியில் இருந்து ஒதுங்கி இருந்தபோதும், தாங்கள் கஷ்ட்டப்பட்டு போராட்டங்களுக்கு முகம்கொடுத்து  ஊயிர் அச்சுறுத்தல்களுக்குள்ளாகி மற்றும் உயிர்ப்பலிகள் கொடுத்து வளர்த்த கட்சியை விட்டு ஒதுங்க வில்லை என்றும், தங்களால் வளர்க்கப்பட்ட கட்சியை மானசீகமாக நேசிப்பதாகவும் அந்த அடிப்படையிலேயே மீண்டும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசில் இணைந்து கொண்டதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆரம்ப கால உறுப்பினரும் முன்னாள் பிரதி அமைச்சரும், அமைச்சர் ரிசாத் பதியுதீன்னுடைய ஸ்ரீ லங்கா மக்கள் காங்கிரசின் பிரதித் தலைவருமான எஸ்.நிஜாமுதீன் தெரிவித்தார்.

எதிர்பாராதவிதமாக அண்மையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசில் இணைந்துகொண்ட முன்னாள் பிரதி அமைச்சர் எஸ்.நிஜாமுதீன் தான் முஸ்லீம் காங்கிரசில் இணைந்து கொண்டது தொடர்பாக ஊடகங்களுக்கு தெளிவு படுத்தும் ஊடக சந்திப்பு ஒன்றை சாய்ந்தமருது சீ பிறீஸ் ஹோட்டேல் கேட்போர் கூடத்தில் 2014-03-08 ம் திகதி சனிக்கிழமை ஏற்பாடு செய்திருந்தார். முன்னாள் பிரதி அமைச்சர் எஸ்.நிஜாமுதீனின் இணைப்புச்செயலாளர் முஹம்மட் ஆஷிக் பதுர்தீன்னுடைய தலைமைத்துவத்துடன் ஆரம்பமான இவ்வூடக சந்திப்பில் தொடர்ந்து கருத்து வெளியிட்ட  முன்னாள் பிரதி அமைச்சர் எஸ்.நிஜாமுதீன், முஸ்லிம் காங்கிரசில் இருந்து பிரிந்து சென்ற சிலர் பாராளுமன்றத்தில்இ தலைவர்கள் என்ற பெயரில் முன் ஆசனங்களில் அமர்வதற்காக கட்சிகளை நடத்தி வருவதாகவும், இதில் சில கட்சிகளுக்கு சரியான முறையில் யாப்புகளோ கொள்கைகளோ இல்லை என்றும், அரசாங்கத்தில் இருக்கின்ற போதிலும் அவர்களால் அவர்கள் சார்ந்த கட்சிக்கு அவர்கள் விரும்புகின்ற சின்னத்தை தானும் பெற முடியாதுள்ளதாகவும்இ இப்படியானவர்களால் முஸ்லிம் சமுகம் சார்ந்த பிரட்சினைகளை எவ்வாறு பேச முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.

அண்மையில் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழு தொடர்பில் ஜனாதிபதிக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையின் போது அதனை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் கையாண்ட முறை மிகவும் வரவேற்க தக்கது என்றும் இவ்வாறானதொரு சூழலை ஏனைய கட்சித்தலைவர்களால் நினைத்துக்கூட பார்க்க முடியாது என்றும் தெரிவித்தார்.

கட்சியில் இணைந்து கொண்டது சம்மந்தமாக கருத்து தெரிவித்த போது, தான் எவ்வித நிபந்தனை அடிப்படையிலும் கட்சியில் இனைய வில்லை என்றும் தன்னால் வளர்க்கப்பட்ட கட்சியை இன்னும் பலப்படுத்தும் நோக்கிலேயே இணைந்து கொண்டதாக தெரிவித்தார். இன்றைய நிலையில் ஆளுக்கு ஒரு கட்சி என்ற நிலையில் முஸ்லிம்கள் பிரிந்து விடுவார்களானால் அதனால் எமது சமூகம் மிகவும் பாதிக்கப்படும் என்றும் இவ்வாறானதொரு நிலை இப்போது ஏற்பட்டு வருவதாகவும்,இவ்வாறான நிலையைப் போக்க முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் குறிப்பிட்ட கொள்கை அடிப்படையிலாவது ஒன்றிணைய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

முஸ்லிம் காங்கிரசை விட்டு சிறிது காலம் ஒதுங்கியிருந்த போதும் எந்த சந்தர்ப்பத்திலும் முஸ்லிம் காங்கிரசை மலினப்படுத்தும் எவ்விதமான செயட்பாடுகளிலும் தான் ஈடும்படவில்லை என்றும் தெருவித்தார்.

சர்வதேச ரீதியில் பரிட்சயமான நீங்கள் முஸ்லிம் காங்கிரசின் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பான ஒருவராக நியமிக்கப்படுவீர்களா என வினவிய போது தான் எந்த நிபந்தனை அடிப்படையிலும் கட்சியில் இணைந்து கொள்ள வில்லை என்றும்இ ஆரம்ப காலத்தில் இருந்து தான் கட்சியின் உயர் பதவிகளை வகித்துள்ளதாகவும் மாகாண சபை உறுப்பினராகவும் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரதி அமைச்சர் என பல நிலைகளில் இருந்து மக்களுக்கு சேவையாற்றியுள்ளதாகவும் கட்சி எவ்வாறான பதவிகளை தந்தாலும் அதனை சிறப்பாக செய்யக்கூடிய ஆற்றல் தன்னிடம் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

தேசிய மற்றும் பிரதேச அரசியலில் எதிர்காலத்தில் எவ்வாறு செயற்பட உள்ளீர்கள் என வினவிய போது தலைவரின் பணிப்பின் பெயரில் தேசிய மட்ட செயற்பாடுகளில் ஏற்கனவே தனது வேலைகளை ஆரம்பித்து விட்டதாகவும், உள்ளுர் அரசியல் விடையத்தில் இங்குள்ள உள்ளூர் அரசியல் பிரமுகர்களுடன் இணைந்து அவர்களது கருத்துக்களையும் உள்வாங்கி செயட்படவுள்ளதாகவும் தான் யாருடைய பதவிகளையோ அல்லது செல்வாக்கையோ பறித்தோ அல்லது பங்கு போடவோ வரவில்லை என்றும் அவர்களுடன் இணைந்து கட்சியின் அபிவிருத்திக்கு பாடுபடவுள்ளதாகவும். தங்களால் உருவாக்கப்பட்ட கட்சியில் இருந்து மரணிக்கவே விரும்புவதாகவும் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா மக்கள் காங்கிரசின் பிரதித்தலைவர் பதவியில் இருந்த உங்களை பின்தொடர்ந்து மாகாண சபை உறுப்பினர் அமீர் அலியும் முஸ்லிம் காங்கிரசில் இணையவுள்ளதாக பேசப்படுகிறதே என வினவிய போது அவரும் முஸ்லிம் காங்கிரசில் இருந்தவர் முஸ்லிம் காங்கிரசையும் அவர் தற்போது இருக்கின்ற கட்சியையும் ஒப்பிட்டு பார்த்திருப்பார் அதன் காரணமாக அவரது தெரிவு முஸ்லிம் காங்கிரசாக இருக்கலாம் ஏன் குறிப்பிட்டார்.

»»  read more

3/05/2014

தேசத்தின் மகுடத்தில் சிங்கள சிறுமிகளின் குத்தாட்டம்!

(Arivu)
குருணாகல் மாவட்டத்தில் உள்ள குளியாபிட்டிய நகரத்தில் இடம்பெற்று முடிந்த தேசத்தின் மகுடம் - 2014 கண்காட்சியில் பாடசாலை மாணவிகளான சிங்களச் சிறுமிகள் போட்ட அதிரடி குத்தாட்டம் ஒன்றை காட்டுகின்ற பதிவு இது.

தமிழில் மிக பிரசித்தி பெற்ற கொக்கர கொக்கரக்கோ .... என்கிற சினிமா பாட்டுக்கு இவர்கள் ஆட்டம் போட்டார்கள்.

ஜனாதிபதி செயலகத்தின் சமூக அபிவிருத்தி பிரிவால் மெய்யறிவையும், சிறந்த பண்பையும் மேம்படுத்துகின்ற சிசுதிரிய வேலைத் திட்டத்தின் கீழ், இச்செயலகத்தின் பணிப்பாளர் நந்தன விஜேசிங்கவின் ஆசியுடன் தேசத்தின் மகுடத்தின் பிரதான மேடைகளில் கலை நிகழ்ச்சிகள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.









வீடியோ லிங்
http://www.youtube.com/watch?v=jDGh2JnO7fs
»»  read more

3/01/2014

சிங்களத்து சின்ன மயில்களின் சிங்கார நாட்டியம்!

(Arivu)
குருணாகல் மாவட்டத்தில் குளியாபிட்டிய நகரத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற தேசத்தின் மகுடம் கண்காட்சியில் ஊடக வலய காட்சிக் கூடத்தில் அமைந்து இருக்கும் மேடையில் சிங்கள மாணவிகள் மிக நளினமாக குட நடனம் ஆடினார்கள்.

இந்நடனம் பார்வையாளர்களை பெரிதும் பரவசப்படுத்தி இருந்தது.

இக்கண்காட்சியை ஊடகவியலாளர்கள் பார்வையிடுகின்றமைக்கான விசேட ஏற்பாடுகளை ஜனாதிபதி செயலகத்தின் சமூக அபிவிருத்திப் பிரிவு பணிப்பாளர் நந்தன விஜேசிங்க செய்து கொடுத்து இருந்தார்.








»»  read more

சிலரால் அமைச்சர் பதவி இன்றி கட்சி தலைவராக ஒரு நாள் கூட நீடிக்க முடியாது :ரவூப் ஹக்கீம்

(ஹனீபா)
சிலரால் அமைச்சர் பதவி இன்றி கட்சி தலைவராக ஒரு நாள் கூட நீடிக்க முடியாது என்று குறிப்பிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்; தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம், தமது கட்சி சமூகத்தை பாதுகாக்கும் பணியை மிகவும் கச்சிதமாக மேற்கொள்ளும் எனவும் நம்பிக்கைதெரிவித்தார்.

முன்னர் தேசிய காங்கிரஸில் கிழக்கு மாகாணசபையில் தவிசாளர் பதவி வகித்த சட்டத்தரணி எச்.எம்.எம். பாயிஸ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொள்ளும் நிகழ்வு கட்சியின் 'தாருஸ்ஸலாம்' தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை இன்று (28) முற்பகல் இடம் பெற்ற பொழுது உரையாற்றுகையிலேயே அமைச்சர் ஹக்கீம் இதனைக் கூறினார்.
அங்கு உரையாற்றும் பொழுது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீம்

எமது கட்சியின் புதிய உறுப்பினராகவும், கட்சியின் அங்கத்துவ விவகாரங்களுக்கான பணிப்பாளராகவும் சட்டத்தரணி எச்.எம்.எம். பாயிஸ் அவர்கள் உத்தியோகபூர்வமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைத்துக் கொள்ளும் இந்த நிகழ்வின் உண்மையான தாக்கம் மிகவும்விசாலமானது.

சட்டத்தரணி எச்.எம்.எம். பாயிஸ் கடந்த மாகாண சபையில் தவிசாளராக பதவி வகித்தவர். அத்துடன் இந்த மாகாணசபை தேர்தலிலும் போட்டியிட்டவர். திருகோணமலை மாவட்டத்தில், குறிப்பாக கிண்ணியா பிரதேசத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை மேலும் பலப்படுத்துகின்ற விடயமாக இது மாறும் என்ற நம்பிக்கை எங்கள் எல்லோருக்கும் இருக்கிறது. அதிலும் முக்கியமாக சட்டத்தரணி பாயிஸ் அவர்கள் தேசிய காங்கிரஸில் இருந்து நீங்கி, முஸ்லிம் காங்கிஸில் இணைந்து கொள்ளும் இந்த காலகட்டம் மிக முக்கியமானது.

கடந்த மாகாண சபை தேர்தலின் போது, மாகாணசபையில் ஆட்சித் தரப்பில் இருந்த மூன்று பேர் எங்கள் கட்சியோடு இணைந்து கொண்டார்கள். இது திருகோணமலை மாவட்டத்திலும், அம்பாரை மாவட்டத்திலும், மட்டக்களப்பு மாவட்டத்திலும் இடம்பெற்றது. இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெற்கில் இரண்டு மாகாண சபை தேர்தல்களுக்கு முகங்கொடுக்கின்ற சூழ்நிலையில் சட்டத்தரணி பாயிஸ், திருகோணமலை மாவட்டத்தில் கணிசமான அரசியல் அந்தஸ்த்தை தக்கவைத்துக் கொண்டவர்கள் அடிப்படையில் அவரது இணைவு ஒரு முக்கிய திருப்பு முனையாக அமையுமென எதிர்பார்க்கின்றோம். எமது கட்சியின் மேல் மட்ட உறுப்பினர்கள் அனைவரும் இதனை வரவேற்கின்ற சூழ் நிலை உருவாகியிருக்கின்றது.

வழமையாக குறிப்பிட;டால் ஒரு தேர்தல் நடக்கும் பொழுது கட்சியில் வந்து சேரும் ஒரு படலம் நடப்பதுண்டு. அதற்கு மாற்றமாக, தேர்தலுக்கு இன்னும் எவ்வளவோ காலம் எஞ்சியிருக்கதக்கதாக முன் கூட்டியே வந்து சட்டத்தரணி பாயிஸ் எங்களோடு வந்து இணைந்து கொள்கிறார். கட்சியை தாம் பலப்படுத்த வேண்டும் என்ற மனப்பூர்வமான உள் உணர்வுடன், தூய்மையான உள்ளத்தோடு எங்களோடு வந்து அவர் இணைந்து கொள்கிறார். சிலர் நிபந்தனைகளோடு வந்து தேர்தல் முடிந்த கையோடு திரும்பி போன வரலாறும் உண்டு. இது கடந்த காலங்களில் அனுபவங்களாக இருந்துள்ளன. சொந்த அரசியல் சுயலாப நோக்கில் செய்யப்படும் குறுகிய அரசியல் முன்னெடுப்பாக பாயிஸ் அவர்களின் இணைவை நான் காணவில்லை.

சுய நலமில்லாத அரசியல் என்று 100வீதம் இருக்க முடியாது. குறைந்தளவு சுயநலம் 50 வீதம் சமூக நலன் 50 வீதம் என்றாவது ஒவ்வொருவரிடத்திலும் காணப்பட வேண்டும் என நான் வழமையாக விநயமாக வேண்டி கொள்வதுண்டு. நல்ல கட்சியோடு தன்னை முழுமையாக சங்கமிக்க செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு அவர் எமது கட்சியோடு இணைந்து கொள்கிறார். கட்சி தலைமையினதும், கட்சியின் மாவட்ட தலைமையினதும் ஒத்துழைப்பு தமக்கு கிடைக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் அவர் எங்களுடன் இணைந்து கொள்கிறார்.

எங்களுக்கென்று ஒரு வகிபாகம் இருக்கின்றது. அரசாங்கத்தில் இருந்தாலும் நாங்கள் மிகவும் வெளிப்படையாக, ஒளிவு மறைவு இன்றி செயல்படும் இயக்கமாக தொடர்ந்தும் இயங்குகிறோம். யாருடைய தயவிலும் தங்கியிருக்க வேண்டும் என்ற தேவை இல்லாத இயக்கம் இது. அத்துடன் நாங்கள் அமைச்சுப் பதவிகளை பற்றி பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை.

இதை சகோதரர் பாயிஸ் அனுபவ பூர்வமாக கண்டிருக்கிறார். அவர் முன்னிருந்த கட்சியின் அமைச்சர் ஒரு நாள் கூட அமைச்சுப் பதவி இல்லாமல் கட்சி தலைவராக நீடிக்க முடியாதவர். அமைச்சராக இல்லாமல் கட்சி தலைவராக ஒரு நாள் கூட அவரால் இருக்க முடியாது. நிறைய பேரின் கதை இது தான். அவர்கள் எமது கட்சியின் ஊடாக அரசியல் முகவரியையும், அடையாளத்தையும் பெற்றுக் கொண்டு பின்னர் அமைச்சர் பதவிக்காகவே வலிந்து போனவர்கள். இந்த அரசாங்கத்தில் நாங்கள் இணைந்துள்ள சம்பந்தமாக ஜனாதிபதி இன்று கூட என்னிடம் வெளிப்படையாகவே கேட்டார். நாங்கள் தாமாகவே விலக வேண்டியது இல்லை. வேண்டுமானால் எங்களை தாராளமாக வெளியேற்றலாம். அதற்கு நாங்கள் தயாராகவே இருக்கின்றோம். அதில் எந்த பிரச்சினையும் இல்லை.

கட்சி எமது அடையாளச் சின்னம். சமூகத்தை பாதுகாக்கின்ற போராட்டத்தை எமது கட்சி கச்சிதமாகசெய்யும். எல்லா கட்சிகளையும் போல எங்களது கட்சிக்குள்ளும் பல விதமான வித்தியாசமான கருத்துக்களை உடையவர்கள் இருக்கலாம் என்ற படியால், நான் ஜனாதிபதியிடத்தில் உங்களது கட்சியிலும் வித்தியாசமான கருத்துக்களை உடையவர்கள் இருக்கிறார்கள்;. எமது கட்சியிலும்; வேறு கருத்துக்களை கொண்டவர்கள் இருக்கிறார்கள் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும் என கூறினேன்.

தெளிவான, சலனமற்ற இயக்கம் என்ற அடிப்படையில் எந்த சவாலுக்கும் தயாரான இயக்கம் என்ற அடிப்படையில், இவ்வாறான காலகட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தனது சமூகத்தின் பிரச்சினையை அரசாங்கத்துள்ளும் பேசுகின்ற கட்சியாகவும்,  உள்ளொன்றும், புறமொன்றும் பேசாத கட்சியாகவும் தொடர்ந்தும் இருந்து வருகின்றது. இந்த கட்சியில் கருத்து சுதந்திரத்தை நாம் தாராளமாக அனுமதித்து இருக்கின்றோம். ஜனநாயக நாட்டில் சுதந்திரம் கட்சிக்குள் பிரதிபலிக்க வேண்டும். ஏதாவது ஒரு தருணத்தில் அந்த கட்சியின் கட்டுப்பாட்டை மீறுகின்ற விடயமாக வரும் பொழுது கட்சி சம்பந்தப்பட்ட உறுப்பினர்களை அழைத்து விளக்கங்களை கோரும். கட்சியின் அங்கிகாரம் இல்லாமல் பாரதூரமாக எதையாவது பேசினால் அதற்கு நடவடிக்கை எடுக்கும் கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் தன்னை அடையாளம் காட்டியிருக்கிறது.

சிலர் சில சந்தர்ப்பங்களில் கட்சியின் தலைமை ஒரு மெத்தனப் போக்கை கடைபிடிக்கிறது என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால்இ வெட்டொன்று துண்டு இரண்டாக முடிவெடுக்கின்ற சந்தர்ப்பங்கள் உள்ளன. இது தனி நபர்களுக்கான இயக்கமல்ல. தனி நபர்கள் எவருக்காவது ஜால்ராபோடுகின்றஇ வேறு அரசியல் நோக்கங்களை அடைந்து கொள்கின்ற விதத்தில் வெறும் வார்த்தை ஜாலங்களில் கையாள்;பவர்களை கட்சி போராளிகள் சரிவர அடையாளம் கண்டு கொள்கின்றார்கள். இது பற்றி நானும் எனது பேச்சுக்களில் சூசகமாக சொல்கின்ற பொழுதுஇ அதன் உள் அர்த்தத்தை மக்கள் சரிவர புரிந்து கொள்கின்றார்கள்.

இந்த கட்சியின் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பலவீனங்களை களைய வேண்டிய அவசியம் இருக்கின்றது. புதிய தேர்தல் முறையின் கீழ் உள்ளுராட்சி தேர்தல் வட்டார முறையில் வரும் நடைமுறை உருவாகியிருக்கின்றது. ஆகையால் கட்சியை கிளைகளினூடாக பலப்படுத்துகின்ற ஒரு பாரிய பணிகாத்திருக்கின்றது. இவ்வாறான ஒரு பதவியின் மூலம் அந்தப் பணியை சிறப்பாக மேற்கொள்வதற்கு சட்டத்தரணி பாயிஸ் எங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கவுள்ளார். கட்சியின் பிரசார நடவடிக்கைகளிலும் அவர் தன்னை முழுமையாக ஈடுபடுத்திகொள்கின்றார்.

அவர் தமது ஆதரவாளர்களோடு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸோடு இணைந்து கொள்ளும் பாரிய நிகழ்வொன்று தெற்குத் தேர்தல் முடிந்த கையோடு கிண்ணியா மண்ணிலே நிகழ இருக்கின்றது. அதில் அவர் மிகவும் ஆர்வமாக இருக்கிறார். மாவட்ட அமைப்பாளர் எம்.எஸ். தௌபீக் எம்.பியின் ஒத்துழைப்போடு அதனை அந்த பிரமாண்டமான நிகழ்வை அவர் ஏற்பாடு செய்யஆவலாகஇருக்கின்றார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக்,  சட்டத்தரணி எச்.எம்.எம். பாயிஸ் ஆகியோரும் உரையாற்றினர். கட்சியின் செயலாளர் நாயகம் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரி. ஹஸன் அலி,  கட்சியின் மூத்த துணைதலைவர் முழக்கம் அப்துல் மஜீத், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறப்பினர் அப்துல் ஜவாத், அக்கரைபற்று மாநகர சபை எதிர்க்கட்சி உறுப்பினர் எஸ்.எல்.எம். ஹனீபா (மதனி, திருகோணமலை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் செயற்குழு செயலாளர் ஜே.எம். ஷாபி,  சட்டத்தரணி எம்.சி.எம். நவாஸ், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.



»»  read more

இறைச்சிக்காக மாடுகளை அறுக்க தடைவிதித்துள்ள உள்ளுராட்சி சபைகளும் வர்த்தமானி அறிவித்தலும் அவற்றின் உற்பத்திப்பொருட்களை தடுக்காதது ஏன்?

-எம்.வை.அமீர்-

அண்மையில் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் பல  பிரதேசங்களில் கால்நடைகளுக்கு 1992ம் ஆண்டின் 59ம் இலக்க விலங்கு நோய் சட்டத்தின் முதலாம் அட்டவணையில் பட்டியல் படுத்தப்பட்டுள்ள குறித்துரைக்கப்பட்டுள்ள நோய்களில் ஒன்றான கால்வாய் எனப்படும் விளங்கு நோய் விலங்குகளுக்கு ஏற்பட்டுள்ளதாக அறியப்பட்டதால் கால்நடை உற்பத்தி சுகாதார பணிப்பாளர்,1850ஃ30 ஆம் இலக்கம் 2014.02.19ம் திகதிய அதி விசேட வர்த்தமான பத்திரிகையுடாக பின்வரும் தடைகளை விதித்திருந்தார்.

•    நோய் தொற்றத்தக்க விலங்குகளில் செயற்கை முறை இனவிருத்தி முறைகளை மேற்கொள்ளல்;

•    நோய் தொற்றத்தக்க விலங்குகளை அறுத்தல்;
•    நோய் தொற்றத்தக்க விலங்குகள் சம்மந்தப்பட்டவாறான உயிர் விலங்குச் சந்தைகள்இ கண்காட்சிகள் போட்டி நிகழ்ச்சிகள் நடத்துதல்;

•    நோய் தொற்றத்தக்க விலங்குகளை அல்லது அவற்றின் உற்பத்திப்பொருட்களைஇ நோய்த்தாக்கம் கொண்ட பொருட்கள் விற்றல்இ விற்பனைக்கு காட்சிப்படுத்துதல்இ விற்பனைக்கு விடுதல்இ களஞ்சியப்படுத்துதல்இ விநியோகித்தல் அல்லது பகிர்தல்;

•    குறித்த சில பிரதேசங்களில் கால்வாய் நோய் தாக்கத்துக்கு உள்ளான கால்நடைகள் சில இனம்கானப்பட்டதால் கட்டம் கட்டமாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள உள்ளுராட்சி சபைகள் கால்நடைகளை அறுப்பதற்கான தடையை விதித்துள்ளன.  இருந்தபோதும்  வர்தமானப் பத்திரிகையில் இலக்கம் 2 (ஈ) என்ற பந்தியில் கூறப்பட்டுள்ள

•    நோய் தொற்றத்தக்க விலங்குகளை அல்லது அவற்றின் உற்பத்திப்பொருட்களைஇ நோய்த்தாக்கம் கொண்ட பொருட்கள் விற்றல்இ விற்பனைக்கு காட்சிப்படுத்துதல்இ விற்பனைக்கு விடுதல்இ களஞ்சியப்படுத்துதல்இ விநியோகித்தல் அல்லது பகிர்தல்;கூற்றுக்கு  அமைவாக எந்த உள்ளுராட்சி சபைகளோ அல்லது இது விடையத்தில் கவனம் செலுத்த வல்ல நிறுவனங்களோ கவனம் செலுத்தவில்லை. இப்போதும் கூட வர்த்தமானியில் குறித்துரைத்த பிரதேசங்களில் இருந்து யோகட்இ தாயிர்இ நெய்இ பால்போன்ற உற்பத்திப் பொருட்கள் நாளாந்தம் கொண்டுவரப்பட்டு விற்பனைக்கு விடப்படுகின்றன. இவைகள் விடையத்தில் உள்ளுராட்சி சபைகளும் சம்மந்தப்பட்டோரும் கவனம் செலுத்துவார்களா?

தற்போது ஏற்பட்டுள்ள தெளிவின்மை தொடர்பாக அம்பாறை மாவட்ட கால்நடை வைத்திய அதிகாரி எம்.சீ.ஜுனைட் அவர்களை தொடர்புகொண்டு கேட்டபோது அம்பாறை மாவட்டத்தின் சில பிரதேசங்களில் கால்வாய் நோய் பரவியுள்ளதை உறுதிப்படுத்தினார்.

கால்வாய் நோய் காரணமாக மனிதர்களுக்கு பாதிப்பு சம்மந்தமாக வினவிய போது இதுவரையும் மனிதர்களுக்கு உடலியல் ரீதியான பிரட்சினை இல்லை என்று தெரிவித்த வைத்தியர்இ விலங்குகள் பாதிக்கப்படுவதால் பொருளாதார ரீதியில் மக்கள் பாதிக்கப்படுவர் என்று குறிப்பிட்டார்.

கால்நடை உற்பத்திகளை பாவிப்பது தொடர்பில் வினவியபோது கால்நடை பண்ணைகளில் இருந்து மாற்றுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது பாதிக்கப்பட்ட விலங்கில் இருந்து நோய்க்கிருமிகள் ஏனைய பிரதேசத்தில் உள்ள விலங்குகளை தாக்கக்கூடிய வாய்ப்பு உள்ளதாக் குறிப்பிட்டார்.

விலங்கு மேய்ப்போர்இ அங்கு சென்று வரும் வாகனம் மற்றும் பொருட்கள் ஊடாக குறித்த நோய் பரவக்கூடிய வாய்ப்புள்ளதால் நோய் கட்டுப்பாட்டுக்கு வரும் வரை கால்நடை உற்பத்திப்பொருட்களை தவிர்ப்பது சிறந்தது என்றும் தெரிவித்தார்.

நேற்று 27.02.2014ல் கல்முனை மாநகரசபை முதல்வர் நிஸாம் காரியப்பர் தலைமையில் கால்நடை வியாபாரம் செய்வோருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது  உணவுக்கு கால்நடைகளை அறுப்பதை இன்றுமுதல் 14 நாட்களுக்கு நிறுத்தி வைப்பது என தீர்மானிக்கப்பட்டது.
இதன்போது முதல்வர் மற்றும் மாநகரசபை பிரதம வைத்தியர் போன்றோர் வெளியிட்ட கருத்துக்கள் வீடியோ வடிவில்
»»  read more

தேசத்தின் மகுடத்தில் குஸ்தி போட்ட சிங்கள பெண்கள்!

(Arivu)
குருணாகல் மாவட்டத்தில் குளியாபிட்டிய நகரத்தில் இடம்பெற்றுக் கொண்டு இருக்கின்ற தேசத்தின் மகுடம் கண்காட்சியின் பிரதான மேடைகளில் ஒன்றில் ஏராளமானோர் வேடிக்கை பார்க்க பெண்கள் குஸ்தி போட்டார்கள்.

இவர்கள் சிங்கள பாரம்பரிய போர் உடையில் மேடையில் தோன்றினார்கள்.சிங்களவர்களின் பண்டைய, பாரம்பரிய போர் முறைகளில் ஒன்று அங்கம்.இப்பெண்கள் அங்கம் என்கிற யுத்த சாஸ்திரத்தில் மிகுந்த நிபுணத்துவம் பெற்று வருகின்றார்கள்.

அங்கம் என்கிற யுத்த சாஸ்திரம் அருகி வருகின்ற நிலையில் தேசத்தின் மகுடத்தில் இதை மக்களுக்கு காண்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.இக்கண்காட்சியை ஊடகவியலாளர்கள் பார்வையிடுகின்றமைக்கான விசேட ஏற்பாடுகளை ஜனாதிபதி செயலகத்தின் சமூக அபிவிருத்தி பிரிவு பணிப்பாளர் நந்தன விஜேசிங்க செய்து கொடுத்து உள்ளார்.








»»  read more
புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா