இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

6/28/2014

முஸ்லிங்கள் தகுதியான தலைமைத்துவம் ஒன்றின் கீழ் ஒன்றுமைப்பட வேண்டும் பாரளமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ்

-எம்.வை.அமீர்-
 பொதுபலசேனா மற்றும் ராவண பலய போன்ற தீவிரவாத அமைப்புக்களின் கொடூர பிடியில் சிக்கியுள்ள முஸ்லிம் சமுகத்தை காப்பது என்றால் முஸ்லிங்கள் தகுதியான தலைமைத்துவம் ஒன்றின் கீழ் ஒன்றுமைப்பட வேண்டும். தமிழ் பத்திரிகைகளுக்கு வந்து எங்களுடைய வாயை பொத்தச் சொன்னார்கள் கதிரைகளை தூக்கினார்கள் என்று சொல்லும் தலைமைகலாகாக அமையக்கூடாது என்றும் முஸ்லிம் சமுகம் சார்ந்த பிரச்சனைகளை உள்நாட்டிலுன் வெளிநாட்டுக்கும் கொண்டு சென்று தகுந்த தீர்வை பெற்றுத்தரக் கூடிய தலைமையாக அது இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இலங்கையில் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள நெருக்குதல்கள் மற்றும் பதிக்கப்பட்ட மக்களுக்கும் மக்கள் பாதுகாக்கப்படவும் இறைவனிடம் துஆ பிரார்த்தனை செய்யும் நிகழ்வும் 2014-06-27 ல் லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் முஸ்லிம் சமுக ஆய்வக நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முஸ்லிம் இருப்பும் அச்சுறுத்தும் தீவிர வாதமும் எதிர்கொள்ளும் உபாயங்களும் எனும் தலைப்பில் முஸ்லிம் சமுக ஆய்வக நிறுவனத்தின் தலைவர் ஏ.எம் நசீல் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது உரையாற்றிய கல்முனை அபிவிருத்தி குழுவின் தலைவரும் பாராளமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரீஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய பாராளமன்ற உறுப்பினர் ஹரீஸ்
அண்மையில் அளுத்கமதர்ஹாநகர்பேருவளை மற்றும் பெலிப்பன்னை பிரதேசங்களில் பொதுபலசேனா மற்றும் சிங்கள தீவிரவாதிகளால் அப்பாவி முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட  இனவெறித் தாக்குதலைக் கண்டித்தும் ஈவிரக்கமற்றவர்களால் கொல்லப்பட்டும், சொத்துக்கள் சேதமாக்கப்பட்டும் துன்பகரமான நிலையில் இருக்கும் குறித்த பிரதேச மக்களுக்கு அல்லாஹ்வின் உதவி கிடைக்க பிரார்த்தனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  இன்றைய இந்த நிகழ்வையும் சில தினங்களுக்கு முன்னர் ஏற்பாடு செய்யப்பட்ட இது போன்ற நிகழ்வுகளையும் நிறுத்துவதற்கு அரச தரப்பில் இருந்து பல்வேறுபட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டதாகவும், மேலிடத்தின் அனுசரணையுடன் கல்முனை பொலிசாரால் இன்றைய நிகழ்வையும் தடை செய்ய முயற்சிகள் மேட்கோள்ளப்பட்ட போது சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஸ்தபா அவர்கள் உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவினரால் முறியடிக்கப்பட்டு இன்றைய நிகழ்வு நடந்து கொண்டிருப்பதாகவும் இவ்வாறான தடை உத்தரவை முறியடித்த சிரேஷ்ட சட்டத்தரணியும் ஸ்ரீ லங்கள் முஸ்லிம் காங்கிரசின் உயர் பீட உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேச சபையின் எதிர்க்கட்சி தலைவருமான எஸ்.எம்.எம்.முஸ்தபா உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவினருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ்வாறான நிகழ்வை மக்கள் வீதியில் கூடுவதால் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் என்ற அடிப்படையில் நீதிமன்ற உத்தரவு ஒன்றின் ஊடாக கல்முனை பொலிசார் தடுத்தன் ஊடாக சிறுபான்மையினருக்கு ஜனநாயக ரீதியான நடைமுறைகளுக்கு கூட தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன.

தற்போது முஸ்லிம்களுக்கு எதிராக அரங்கேற்றப்பட்டுள்ள இவ்வாறான தாக்குதல்கள் திட்டமிடப்பட்ட அடிப்படையில் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் இவ்வாறான செயல்கள் இடம்பெறக்கூடிய சாத்தியம் சம்மந்தமாக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் கொள்ளுப்பிட்டி பள்ளிவாசலில் முடிய அறையில் ஜம்மியத்துல் உலமாவின்  ஏற்பாட்டில், 18முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்து பேசிய போது முஸ்லிம்களுக்கு எதிராக மேட்கோள்ளப்பட திட்டமிடப்படும் தாக்குதல்கள் தொடர்பாக தெளிவு படுத்தப்படுத்தியதாகவும் அது போன்று பல்வேறு இடங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் இவ்வாறான கொடூர ததக்குதல்கள் தொடர்பில் சிவில் அமைப்புக்களினால் எச்சரிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த பாராளமன்ற உறுப்பினர் முஸ்லிம் சமுகத்தில் இருக்கின்ற பாரிய குறைபாடு பிரச்சினைகள் வந்தால் மட்டும் கூடுவது பின்னர் விட்டு விடுவது என்பதுதான், இவ்வாறு விட்டு விட்டதன் பலனையே தற்போது  அளுத்கமதர்ஹாநகர்பேருவளை மற்றும் பெலிப்பன்னை பிரதேசங்களிலும் ஏனைய பிரதேசங்களிலும் முஸ்லிம் சமுகம் அனுபவிப்பதாகவும் தெரிவித்தார். அளுத்கமதர்ஹாநகர்பேருவளை பிரதேசங்கள் தீவிரவாதிகளின் தாக்குதல்குக்கு உட்பட்டுக் கொண்டிருக்கும் போது குறித்த தாக்குதலை நிறுத்துவதற்கு தாங்கள் பல்வேறுபட்ட முயற்சிகளை மேற்கொண்ட போதும் உடனடியாக சாத்தியமடயாமல் போனதாக கவலை தெரிவித்தார்.
முஸ்லிம்களின் பாதுகாப்பு தொடர்பில் சரியான பொறிமுறை ஒன்று இல்லாததன் காரணமாகவே முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டதாகவும் உடனடியாக இங்கு வாழும் சிறுபான்மையினரின் பாதுகாப்பு தொடர்பில் அரசு காத்திரமான நடவடிக்கைகளை இன்றுவரை எடுக்க வில்லை என்றும் இவ்விடயத்தில் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அளுத்கமதர்ஹாநகர்பேருவளை மற்றும் பெலிப்பன்னை பிரதேசங்களில் பொதுபலசேன மற்றும் சிங்கள தீவிரவாதிகளால் அப்பாவி முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட தாக்குதல்களையும் கொள்ளையடிப்புக்களையும் அரச பாதுகாப்பு படையினர் கைகட்டி பார்த்துக்கொண்டிருந்ததாகவும் தெரிவித்தார்.

அரசு சிறுபான்மை முஸ்லிம் மக்களை பாதுகாக்க தவறியதன் காரணமாகவே அரசுடன் இருக்கின்ற முஸ்லிம் காங்கிரசானது ஒரு தீர்மானத்துக்கு வந்ததாகவும்  குறித்த விடயத்துக்கு நாங்கள் உள்நாட்டில் மட்டும் தீர்வை பெற்றுவிட முடியாது எஞ்சி இருக்கின்ற பிரதேசங்களையாவது பாதுகாப்பதென்றால் அரசுக்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளில் இருந்து அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டிய தேவை ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.

தெற்கில் இருக்கின்ற சிங்கள மக்களில் பெரும்பான்மையானோர் முஸ்லிம்களுடன் ஐக்கியமாகவே இருந்து வருவதாகவும் பொதுபலசேனா போன்ற குறுகிய எண்ணம்கொண்ட தீவிரவாத அடக்கியாளும் எண்ணம் கொண்ட சிலராலேயே இவ்வாறான காட்டுமிராண்டித்தனமான செயல்கள் நடத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியின்மைக்கு காரணம் பொதுபலசேனா மற்றும் ராவண பலய போன்ற அமைப்புகள் முன்னெடுத்துள்ள தீவிர நடவடிக்கியானது இங்கு இறுக்கமான அடக்கியாளும் நோக்கம் கொண்ட அரசு ஒன்றை நிறுவவேண்டும் என்ற கேட்ட எண்ணத்துடன் உணர்ச்சியுட்டும் பேச்சுக்களை பேசி மக்களை பிழையாக நடத்த முற்படுவதாகவும் இந்நிலை நாட்டுக்கு ஆரோக்கியமானதாக அமையாது என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

பொதுபலசேனா மற்றும் ராவண பலய போன்ற தீவிரவாத இயக்கங்களால் முன்னெடுக்கப்படும் போலிப்பிரச்சாரங்கலாகாக இந்தநாட்டுக்கு போதைப்பொருட்களை இறக்குமதி செய்பவர்கள் என்றும் கருத்தடை மாத்திரைகளை வழங்குபவர்கள் மற்றும் ஹவாலா உண்டியல் முலம் பணத்தினை அனுப்புபவர்கள் என்பன போன்ற 18 குற்றச்சாட்டுக்களை முஸ்லிம்கள் மீது திணிப்பதாகவும் கூறினார்.

முஸ்லிம்கள் மீது போலியான குற்றங்களை சுமத்தி, தீவிர போக்குக்கொண்ட சிங்கள இளைஞர்களை தம்வசப்படுத்தி அரசாங்கத்தை பயமுறுத்தி அரசாங்கத்தை அடிபணிய வைத்துள்ளார்கள் இதன் எதிரொலியாகவே பொதுபலசேனா மற்றும் ராவண பலய போன்ற தீவிரவாத அமைப்புக்களை தடை செய்யமுடியாது என்று அரசு வெளிப்படையாகவே சொல்லி வருகிறது

30 வருடங்கள் யுத்தம் செய்த புலிகளை அடக்கியதாக மார்தட்டும் அரசு இங்கு வாழும் முஸ்லிம் சமுகத்தின் மீது பொதுபலசேனா மற்றும் ராவண பலய போன்ற தீவிரவாத அமைப்புக்களால் மேட்கொள்ளப்படும் காட்டுமிராண்டித் தனங்களை தடுக்க முடியாமல் இருப்பது அரசியல் காரணங்களுக்காவே என்பது புலனாவதாகவும் தெரிவித்தார்.

முஸ்லிம் சமுக ஆய்வக நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் அதன் தலைவர் மௌலாவி அலி அஹமத் ரஸாதி அவர்கள் முஸ்லிம்களின் ஒற்றுமை தொடர்பில் நீண்டதொரு இஸ்லாமிய விளக்கத்தை தந்ததுடன் துஆ பிரார்த்தனைகளிலும் ஈடுபட்டார். இங்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.நசீர், அட்டாளைச்சேனை பிதேசசபை தவிசாளர் ஏ.எல். ஹன்சில் நிந்தவூர் பிரதேசசபை தவிசாளர் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் என அநேகர் கூடியிருந்தது குறிப்பிடத்தக்கது.



»»  read more

6/26/2014

கல்முனை மாநகரசபையில் கண்டனம்

-எம்.வை.அமீர்-

அண்மையில் அளுத்கமதர்ஹாநகர்பேருவளை மற்றும் பெலிப்பன்னை பிரதேசங்களில் பொதுபலசேன மற்றும் சிங்கள தீவிரவாதிகளால் அப்பாவி முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட  இனவெறித் தாக்குதலைக் கண்டித்து கல்முனை மானகரசபையில் கண்டனத் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.
கல்முனை மாநகரசபையின் மாதாந்த சபை அமர்வு இன்று (2014-06-25) பகல் கல்முனை மாநகரசபை சபா மண்டபத்தில் மாநகர முதல்வர் சட்ட முதுமாணி நிஸாம் காரியப்பர் அவர்களது தலைமையில் ஆரம்பமானது. முதற்கட்ட சபை நடவடிக்கைகளைத் தொடர்ந்து, ஏற்கனவே சபை நிகழ்வுகளில் குறிப்பட்டிருந்த அளுத்கமதர்ஹாநகர்பேருவளை மற்றும் பெலிப்பன்னை பிரதேசங்களில் பொதுபலசேன மற்றும் சிங்கள தீவிரவாதிகளால் அப்பாவி முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட  இனவெறித் தாக்குதலைக் கண்டிக்கும் தீர்மானத்தை முன்வைத்து முதல்வர் உரையாற்றினார்.
முதல்வர் தனது கண்டன உரையின் போது, 1983 ஜூலை கலவரத்தின் பிற்பாடு 2014 ஆண்டு ஜூனில் முஸ்லிம்களின் பொருளாதாரத்தின் மீதும் உடைமைகள் மற்றும் உயிர்கள் மீதும் இலக்குவைத்து மேட்கோள்ளப்பட்டுள்ள கொடூர தாக்குதலை ஜனநாயகத்தின்மீது பற்றுக்கொண்ட எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார்.
இந்த நாட்டின் பிரஜை என்ற முறையிலும் நாட்டை நேசிக்கின்ற தேசப்பற்றுள்ள பிரஜை என்ற முறையிலும் சிறுபான்மை தமிழ் பேசும் முஸ்லிம் சமுகத்தை சேர்ந்தவன் என்ற முறையிலும் பெரும்பான்மை சிங்கள மக்களுடன் அவர்களை நண்பர்களாக கொண்டு அவர்களின் பாசையில் அங்குள்ள பாடசாலையில் சரளமாக படித்தத்தவன் என்ற முறையிலும் மிகவும் வெட்கமான கேவலமான பௌத்த மதத்துக்கே அசிங்கமான தப்பான அபிப்பிராயத்தை ஏற்படுத்தக்கூடிய இவ்வாறான சம்பவத்தை முற்றாக நிராகரிப்பதாகவும், சட்டத்துக்கும் ஒழுங்குக்கும் பொறுப்பான மாண்புமிகு ஜனாதிபதி அவர்களும் பாதுகாப்பு செயலாளர் அவர்களும் நாட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் அந்தசந்தர்ப்பம் சூழ்நிலைகளை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு  பொதுபலசேனா என்று அழைக்கப்படும் ஒரு இயக்கமும் சிகல ராவய என்று சொல்லப்படும் இயக்கமும் ஒன்றாக சேர்ந்து சட்டத்தை தங்களது கையில் எடுத்து இவ்வாறான கொடூர செயலை செய்துள்ளதை வன்மையாக கண்டிப்பதாகவும் குறித்த கண்டன பிரரேணைக்கு சபையின் பூரண ஆதரவை கோரினார்.
குறித்த கண்டன பிரேரணை மீது உரையாற்றிய கல்முனை மாநகரசபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த வரும் எதிர்க்கட்சி தலைவருமான ஏ.அமிர்தலிங்கம் தனதுரையில் தங்களது கட்சி இவ்வாறான இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகளை வன்மையாக கண்டிப்பதாகவும் இவ்வாறான  இனச்சுத்திகரிப்பு நிலைகளை தான் சார்ந்த தமிழ் சமூகம் நிறையவே அனுபவித்ததால் இவ்வேதனையை உணர்ந்தவர்கள் என்ற வகையில் முதல்வரால் கொண்டுவரப்பட்டுள்ள இப்பிரரேனையை ஆதரிப்பதாகவும் தெரிவித்தார்.
அளுத்கமதர்ஹாநகர்பேருவளை மற்றும் பெலிப்பன்னை பிரதேசங்களில் பொதுபலசேன மற்றும் சிங்கள தீவிரவாதிகளால் அப்பாவி முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட  இனவெறித் தாக்குதலைக் கண்டித்து சபையில் தமில் கூட்டமைப்பு,பொதுசன ஐக்கிய முன்னணி, ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சி பேதமின்றி சகல உறுப்பினர்களும் கண்டன பிரரேணைக்கு ஆதரவாக உரையாற்றியதுடன் இறுதியில் சபையின் ஏகமனதான தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு உரையின் பிரதிகளை ஜனாதிபதி அமைச்சர்கள் வெளிநாட்டு துதரலயங்கள் மற்றும் நீதி வழங்கக்கூடிய சகலருக்கும் அனுப்பி வைப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.


»»  read more

5000 முஸ்லிம் பொலிசாரை நியமித்து முஸ்லிம் பிரதேசங்களை பாதுகாக்க வேண்டும் பத்திரகையாளர் மாநாட்டில் பாராளமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ்

-எம்.வை.அமீர்-

 

அளுத்கமதர்ஹாநகர்பேருவளை மற்றும் பெலிப்பன்னை பிரதேசங்களில் அண்மையில் பொதுபலசேன மற்றும் சிங்கள தீவிரவாதிகளால் அப்பாவி முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட  இனவெறித் தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள அமைதியின்மை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலும் கல்முனையில் புதன்கிழமையன்று நடாத்த திட்டமிட்டிருந்த துஆ பிரார்த்தனை மற்றும் கண்டன பேரணிக்கு பொலிஸ்மா அதிபரின் துண்டுதலின் காரணமாக நீதிமன்ற தடை உத்தரவு பிறப்பக்கப்பட்டுள்ளது சம்மந்ததாகவும், கல்முனை அபிவிருத்திக் குழுவின் தலைவரும் பாராளமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் ஊடகங்களுக்கு தெளிவு படுத்தும் ஊடக சந்திப்பு இன்று (2014-06-24)  பாராளமன்ற உறுப்பினரின் வாசஸ்தலத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் போது சிரேஷ்ட சட்டத்தரணியும் உயர்பீட உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேசசபை எதிர்கட்சி தலைவருமான எஸ்.எம்.எம்.முஸ்தபா மற்றும் பாராளமன்ற உறுப்பினரின் பிரத்தியோக செயலாளர் ஜின்னா மாஸ்ட்டர் உட்பட பெரும் திரளான ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த பாராளமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ்

அதி தீவிர போக்கைக் கொண்ட பொதுபலசேன போன்ற அமைப்புக்களின் வருகையைத் தொடர்ந்து மிகவும் ஐக்கியமாக வாழ்ந்த சிங்கள மக்களிடம்முஸ்லிம்கள் தொடர்பான பல்வேறுபட்ட உண்மைக்குப் புறம்பான விடயங்களை கூறி அவர்களை அப்பாவி முஸ்லிம்களுடன் மோத வைக்கின்ற கைங்கரியம் அரங்கேறிக்கொண்டிருக்கின்றது. இதன் காரணமாக இங்கு வாழும் முஸ்லிம்கள் மிகந்த அச்சத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இதன் தொடராக தம்புள்ளை தொடக்கி அளுத்கமதர்ஹாநகர்பேருவளை மற்றும் பெலிப்பன்னை மற்றும் ஏனைய இடங்களில் வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டு அங்கு கோடிக்கணக்கான பொறுமதி மிக்க சொத்துக்கள் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் உயிர்களும் காவு கொள்ளப்பட்டுள்ளன.

இவ்வாறான அச்சநிலையை போக்க முஸ்லிம் அமைச்சர்களும் பாராளமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து அரசாங்கத்துக்கு அழுத்தங்களைக் கொடுத்து முஸ்லிம்களில் இருந்து 5000 முஸ்லிம் பொலிசாரை நியமித்து முஸ்லிம் பிரதேசங்களை பாதுகாக்க வேண்டும். இவ்வாறான பொலிசாரை நியமித்து சிங்கள பெரும்பான்மை பொலிசாருடன் இணைத்து கடமையில் ஈடுபடுத்துவதன் ஊடாக பெரும்பான்மையினரின் சந்தேகத்தை போக்கி சுமுகமாக வாழ வழிசமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அளுத்கமதர்ஹாநகர்பேருவளை மற்றும் பெலிப்பன்னை பிரதேசங்களில் அண்மையில் பொதுபலசேன மற்றும் சிங்கள தீவிரவாதிகளால் அப்பாவி முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட  இனவெறித் தாக்குதலைத் தொடர்ந்து உடனடியாக முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் உள்ளிட்ட குழுவில் தான் உட்பட அதிகாலையே குறித்த பிரதேசங்களுக்கு விஜயம் செய்ததாகவும் நிலைமையை நேரடியாக கண்டபோது தங்களை அறியாமலேயே கண்கள் குழமானதாகவும், நமது நாட்டின் பொலிசார் மற்றும் இராணுவத்தினர் முன்னிலையிலேயே கொடூரங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், குறித்த பிரதேச மக்களின் பொருளாதரத்தை நசுக்கும் தீவிரவாதிகளின் ஒரு முன்னெடுப்பாகவே தான் இதனை பார்ப்பதாகவும் பாரளமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் கண்ணும் மனமும் உருகிய நிலையிலேயே கருத்துக்களை வெளியிட்டார்.

அளுத்கமதர்ஹாநகர்பேருவளை மற்றும் பெலிப்பன்னை சம்பவங்களிலும் தம்புள்ளை பள்ளிவாசல் தாக்குதல் தொடக்கி இன்றுவரை இடம்பெறும் முஸ்லிம்களுக்கு எதிரான எல்லா தாக்குதல்களின் பின்னும் பொதுபலசேன மற்றும் சிங்கள தீவிர அமைப்புக்கள இருப்பதை முஸ்லிம் காங்கிரஸ் வலியுறுத்தி வருவதாகவும் முஸ்லிம்களின் பாதுகாப்பு விடையத்தில் பல்வேறுபட்ட நகர்வுகளை செய்துவருவதாகவும் இதன் ஒருகட்டமாக முஸ்லிம்களின் பாதுகாப்பை வலியுறுத்தி அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் பொருட்டு அரசுக்கு முக்கியத்துவம் மிக்க பாராளமன்ற பிரரேணை ஒன்றுக்கு முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் வாக்களிக்காது விட்டதாகவும், அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் பொருட்டு முஸ்லிம் நாடுககளின் துதுவர்களை தெளிவு படுத்திவருவதாகவும்தெரிவித்தார்.

வன்செயல்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது ஊரடங்க சட்டத்தை பிறப்பித்து முஸ்லிம்களை மட்டும் முடக்கிவிட்டு அல்லது அவர்களை காடுகளுக்குள் துரத்திவிட்டு தீவைப்பு மற்றும் கொள்ளையடிப்பு நிகழ்வுகளை நடத்தி இருந்ததை தங்கள் அதிகாலையிலேயே அங்கு சென்ற போது அறிய முடிந்ததாகவும் பொதுபலசேனவின் இவ்வாறான காடைத்தனங்களை முஸ்லிம் காங்கிரஸ் மிகவும் கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.

பொதுபலசேன அமைப்பானது பயங்கரவாத பொலிசாக சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு நாட்டில்  முஸ்லிம்களை இன சுத்திகரிப்பு செய்து கொண்டு அதனுடாக கிடைக்கும் தீவிர போக்குக் கொண்ட சிங்கள மக்களின் ஆதரவை பெற்று அரசாங்கத்தை தடுமாற வைக்க முற்படுவதாகவும் குறித்த பொதுபலசேனவின் செயற்பாட்டுக்கு அரசாங்கத்தின் உயர் மட்டத்தின் கைகளும் இருப்பதாகவும் தெரிவித்தார்.

அண்மையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது ஜனாதிபதி, முஸ்லிம்கள் காத்தான்குடியில் கொல்லப்பட்டபோதும் யாழ்ப்பானத்தில் இருந்து வெளியேற்றிய போதும் ஹர்த்தால் அனுஷ்ட்டிக்காத்தவர்கள் தற்போது ஹர்த்தால் அனுஷ்ட்டிகின்றார்கள் என்று தெரிவித்த கருத்தை வன்மையாக நிராகரித்த பாராளமன்ற உறுப்பினர் ஹரீஸ் முஸ்லிம்களுக்கு அநீதிகள் இழைக்கப்பட்ட போதெல்லாம் தங்களது எதிர்ப்பை சாத்வீக ரீதியில் கறுப்பு வெள்ளி போன்ற பல்வேறுபட்ட நிலைகளில் வெளிப்படுத்தியதாகவும் கூறினார்.

தான் ஒரு அரசாங்க பாராளமன்ற உறுப்பினராக இருக்கின்ற போதிலும் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக பார்த்த மாத்திரத்தில் உடனடியாக சாத்வீக போராட்டத்துக்கு மக்களை அழைத்ததாகவும் அதன் எதிரொலியாக கல்முனை சம்மாந்துறை அட்டாளைச்சேனை உட்பட நாட்டின் முஸ்லிம்கள் செறிந்து வாழும் எல்லாப் பிரதேசங்களிலும் ஹர்த்தாலும் கடையடைப்புக்களும் இடம்பெற்றதாகவும் தற்போது எழுந்துள்ள தேவை குறித்த போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வராது, ஏனைய பிரதேசங்களை பாதுகாப்பது என்றால் முஸ்லிம்களது ஒற்றுமையை இந்த நாட்டுக்கும் சர்வதேசத்துக்கும் தெரிவிக்க வேண்டிய கடப்பாடு இருப்பதாகவும் பாரிய அகிம்சை போராட்டம் ஒன்றை முஸ்லிம்கள் அதிகமாக வாழும் அம்பாறை மாவட்டத்தில் திங்கட்கிழமை நடத்த திட்டமிட்டிருந்ததாகவும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஒரு பாராளமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் பொலிசாரின் அனுமதியுடன் குறித்த அகிம்சைப் போராட்டத்தை கல்முனைக்குடி முகைதீன் ஜும்மா பள்ளிவாசலுக்கு முன்னால் நடாத்த இருந்ததாகவும் அதற்க்கு செவ்வாய்க்கிழமை கிழமை நடத்த பொலிசார் தரப்பில் அனுமதி கிடைத்த போதும் பின்னர் அரச புலனாய்வு பிரிவின் தூண்டுதலால் அதுவும் தடுக்கப்பட்டதாகவும் புதன்கிழமை நடாத்த எல்லா ஏற்பாடுகளையும் செய்துள்ள நிலையில் பொலிஸ்மா அதிபரின் துண்டுதலின் காரணமாக அதற்கும் நீதிமன்றத்தின் ஊடாக தடை உத்தரவு பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கண்டியில் பொதுபலசேனவின் ஒன்று கூடலுக்கு அனுமதியளித்துள்ள பொலிஸ்மா அதிபர் மக்கள் பிரதிநிதியான என்னுடைய துஆ பிரார்த்தனையுடன் கூடிய நிகழ்வுக்கு தடை விதித்துள்ளதையிட்டு வேதனையடைவதுடன் அவரது பக்கச்சார்பான இவ்வாறான நிலையை மிகவும் கண்டிப்பதாகவும் தெரிவித்தார். இருந்த போதும் பொலிஸ்மா அதிபரின் இவ்வாறான போக்கை கருத்தில்கொண்டு பின்வாங்கப் போவதில்லை இன்னும் ஓரிரு தினங்களில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள புத்திஜீவிகள் இளைஞர்கள் பெரியவர்களை சந்தித்து ஏதோ அமைப்பில் சந்தித்து எதிர்காலத்தில் சமுகத்தை பாதுகாப்பது விடயத்தில் எங்களது பங்கு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது சம்மந்தமாக தெளிவுட்ட இருக்கின்றேன் என்றும் கூறினார்.

முஸ்லிம்களின் அமைதியின்மையை போக்க அரசுடன் இருக்கின்ற பாராளமன்ற உறுப்பினர்களின் அழுத்தங்கள் போதாமல் இருப்பதாக தெரிவித்த பாராளமன்ற உறுப்பினர் அவர்கள் விரைந்து செயட்படவேண்டியத்தன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

»»  read more

6/20/2014

மெற்றோபொலிடென் கல்லூரியின் புதிய கட்டட திறப்புவிழா

(அகமட் எஸ். முகைடீன்)
மெற்றோபொலிடென் கல்லூரியின் புதிய கட்டடம் வெகு விமர்சையாக நேற்று முந்தினம் திறந்துவைக்கப்பட்டது. அத்தோடு சர்வதேச “எட்ஹட்” நிறுவனத்தின் உயர் டிப்லோமா கற்கை நெறிகள் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் தேசிய காங்கிரஸின் கிழக்குமாகாண இளைஞர் அமைப்பாளரும் மெற்றோபொலிடென் கல்லூரியின் ஸ்தாபக தலைவருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் நடைபெற்ற  இந்நிகழ்வில் கல்லூரியின் புதிய அடுக்கு மாடி கட்டடம் மலேசிய நாட்டுத் தூதுவர் அஸ்மி சைனுடீனால்  திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாலைதீவு நாட்டின் துணைத் தூதுவர் கலாநிதி ஹூசைன் நியாஸ் மற்றும் முதல் செயலாளர் அகமட் முஜ்தபா, லண்டன் “எட்ஹட்” நிறுவனத்தின் பிரதிநிதி கலாநிதி ஏன் லதான், லண்டன் பக்கிங்ஹம்செயா பல்கலைக் கழகத்தின் முதன்மை விரிவுரையாளர் அலன் கிழாக், “எட்ஹட்” நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதி வினாயகமூர்த்தி ஜனகன், மூன்றாம் நிலைக்கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் பேராசிரியர் தயந்த எஸ். விஜேசேகர  மற்றும் மெற்றோபொலிடென் கல்லூரியின் விரிவுரையாளர்கள், அலுவலர்கள், மாணவர்கள், பெற்றோர் எனப் பலர் கலந்து கொண்டனர்.

மேற்படி நிகழ்விற்கு உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா, சிறுவர் அபிலிருத்தி மற்றும் பெண்கள் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த, பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்ததோடு மாணவர்களுக்கு வழங்கப்படும் வசதி வாய்ப்புகளை பார்வையிட்டு வியந்து பாராட்டினார்கள்.


ஐந்து மாடிகளைக் கொண்ட இக்கல்லூரியில் நூலகம், வைபையுடன் கூடிய கணணி ஆய்வுகூடம், அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய   குளிரூட்டப்பட்ட வகுப்பறைகள் மற்றும் மாணவர்களுக்கான ஓய்வுநேர பகுதி என்பன போன்ற பல வசதிகளை உள்ளடக்கிய இக்கல்லூரியில் சர்வதேச உயர் டிப்லோமா கற்கை நெறிகளை பூர்த்தி செய்வதோடு பட்டப்படிப்பின் இறுதி ஆண்டில் கற்பதற்கான அனைத்து தகுதியினையும் பெறவதோடு கற்கை நெறிகளை பூர்த்தி செய்கின்ற மாணவர்களுக்கான தொழில் மற்றும் வேலை வாய்ப்பினைப் பெறுவதற்கான வழிகாட்டல்களை இக்கல்லூரி வழங்குகிறது.   
»»  read more

கல்முனையில் கண்டனம்

-எம்.வை.அமீர்-
 அளுத்கமதர்ஹாநகர்பேருவளை மற்றும் பெலிப்பன்னை பிரதேசங்களில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இனவெறித் தாக்குதலைக் கண்டித்து பொது அமைப்புக்களினால் ஏற்பாடு செய்திருந்த கண்டம் தெரிவிக்கும் பேரணி இன்று கல்முகைக்குடி முகைதீன் ஜும்ஆ பெரியபள்ளிவாசல் முன்பாக இடம்பெற்றது.

அமைதியான முறையில் இடம்பெற்ற இக்கண்டன பேரணியில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு நியாயம் வழங்க வேண்டும், பொதுபலசேனாவை தடை செய்ய வேண்டும், இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்ற சுலோகங்களை காணக்கூடியதாக இருந்தது.


 பெருந்திரளான இளைஞர்களும், பொதுமக்களும் கலந்து கொண்ட இப்பேரணியில் கல்முனை அரசியல்வாதிகள் என்ற ரீதியில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ் மாத்திரமே கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


»»  read more

6/17/2014

அம்பாறை மாவட்டத்தில் ஹர்த்தால் வீதிகள் வெறிச்சோட்டம் பாடசாலைகள் அலுவலகங்கள் பூட்டு

-எம்.வை.அமீர்-
கடந்த சனிக்கிழமை முதல் அளுத்கம, பேருவளை, தர்ஹாநகர் உள்ளிட்ட பிரதேசங்களில் பேரினவாதிகளானா பொதுபலசேனா அமைப்பினரால் முஸ்லிம்கள் மீது மேற்கொண்ட  தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அம்பாறை மாவட்ட அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனம் மற்றும் அம்பாறை மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபை என்பன துக்க தினம் மற்றும் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்தன.

மாவட்டமெங்கும் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் வர்த்தக நிலையங்கள் பாடசாலைகள் அலுவலகங்கள் என்பன மூடப்பட்டு பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது. காலையில் சேவையில் ஈடுபட முற்பட்ட வாகனங்கள் சாய்ந்தமருது எல்லையில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டன.


இன்று லுகர் தொழுகையின் பின்னர் விசேட துஆ பிரார்த்தனைகளுக்கு மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.




»»  read more

6/13/2014

அட்டாளைச்சேனை நியுஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் 34 ஆவது வருட பூர்த்தி

(சப்னி)

அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும், அம்பாரை மாவட்டப் பொதுப்பணிகள் அமைப்பின் தலைவரும், அக்கரைப்பற்று/கல்முனை மாவட்ட சாரண  உதவி ஆணையாளரும், பிரபல சமூக சேவையாளரும், அகில இலங்கை சாமாதான நீதவானுமாகிய எஸ்.எல்.முனாஸுக்கு திகாமடுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பொடி அப்பு பியசேன பொன்னாடை போர்த்தி கெளரவித்தார்.

அட்டாளைச்சேனை நியுஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் 34 ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு பாலமுனை ஹிக்மா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் கழகத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினர் பியசேனவின் இணைப்புச் செயலாளரும், அல் ஜஷீரா வித்தியாலய அதிபருமான எம்.ஐ.றியாஸின் தலைமையில் இடம் பெற்ற கிறிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதி நாள் நிகழ்வின் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன கெளரவ அதிதியாகக் கலந்து சிறப்பித்த எஸ்இஎல்இமுனாசுக்கு அவரின் சமூக சேவையைப்பாராட்டி இக்கெளரவம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

»»  read more

அல்அமானா நற்பணி மன்றத்தின் ஒன்பதாவது வருடாந்த நிறைவு நிகழ்வு


-எம்.வை.அமீர்-
அல்அமானா நற்பணி மன்றத்தின் ஒன்பதாவது வருடாந்த நிறைவு நிகழ்வு (2014-06-08)சாய்ந்தமருது லீமெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் அல்அமானா நற்பணி மன்றத்தின் தலைவர் ஏ.எல்.ஏ.பரீட் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை அபிவிருத்திகுழுவின் தலைவரும் பாராளமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்கள் கலந்து கொண்டார்.

சுனாமியால் பாதிக்கப்பட்டு காணிகளை இழந்து தங்களது அமைவிடங்களை பாதுகாப்பான இடங்களில் அமைக்க வேண்டும் என்ற அவாவில் சாய்ந்தமருதின் மேட்குப்புறமாக நெற்செய்கை பண்ணப்படாத தருசு நிலங்களை துண்டம் துண்டங்களாக சுமார் 1350 குடும்பங்கள் கொள்வனவு செய்து நேரடியாக கிட்டத்தட்ட 15000 மக்கள் பயன்பெறும் அளவுக்கு விசாலமானா குறித்த காணிகளை கொண்டுள்ள மக்கள் அவர்களது நலன்களை பேணும் வகையில் ஏற்படுத்தப்பட்டு செயற்பட்டுவரும்  அல்அமானா நற்பணி மன்றத்தின் ஒன்பதாவது வருடாந்த நிறைவு நிகழ்வில்


பத்து விதவை பெண்களுக்கும் ஒரு இஸ்லாத்தை புதிதாக தழுவிய பெண்ணுக்கும் தலா 10000 ரூபாய் பொறுமதியான காசோலைகளும் வறுமையில்இருக்கும் இரண்டு குமார் பிள்ளைகளுக்கு காநித்துண்டுகளும் வழங்கி வைக்கப்பட்டது.

»»  read more

இன்னும் சில வருடங்களில் சாய்ந்தமருது கொங்கிரீட் காடாக மாறிவிடும் டாக்டர் எஸ்.நஜிமுடீன்


-எம்.வை.அமீர்-
சாய்ந்தமருதில்  ஒருகாலத்தில் தென்னைமரங்கள் இருந்தன பலாமரங்கள் இருந்தன பூசனைமரம்,வேப்பைமரம் வாழைமரம் என எத்தனையோ மரங்கள் இருந்தன. அவ்வோளையில் அப்போது வாழ்ந்த மக்கள் சுதந்திரமாக ஓடி விளையாட இடங்கள் இருந்தன அந்த நேரத்தில் அவர்களிடம் நோய்கள் மிகக்குறைந்த அளவிலேயே இருந்தன என்று முன்னாள் பிரதி DPDH உம் சாய்ந்தமருது வைத்தியசாலையின் முன்னாள் DMO வுமான டாக்டர் எஸ்.நஜிமுடீன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அல்அமானா நற்பணி மன்றத்தின் ஒன்பதாவது வருடாந்த நிறைவு நிகழ்வு (2014-06-08)சாய்ந்தமருது லீமெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் அல்அமானா நற்பணி மன்றத்தின் தலைவர் ஏ.எல்.ஏ.பரீட் தலைமையில் இடம்பெற்றது. தொடர்ந்து உரையாற்றிய  இந்நிகழ்வின் விசேட அதிதியாக கலந்து கொண்ட டாக்டர் எஸ்.நஜிமுடீன் இப்போது மக்கள் தொகையும் அதிகரித்துச் செல்கின்றன. கடந்த 2004ல் இடம்பெற்ற சுனாமி கடல் பேரலைகளின் காரணமாக பிரதான வீதியில் இருந்து ஒரு கிலோமீட்டராக இருந்த மேற்கில் இருந்து கிழக்கு நோக்கிய எல்லை 750 மீற்றருக்கும் குறைந்து விட்டது தங்களது வாழ்வாதாரம் சாய்ந்தமருது பிரதேசத்தை அண்டியதாக இருப்பதால் மக்கள் இப்பிரதேசத்திலேயே வாழ விரும்புகின்றனர். இதனால் மரம் செடி கொடிகள் காணப்பட்ட இடங்கள் எல்லாம் மாடிக்கு மேல் மாடியாக கொங்கிரீட் கட்டிடங்கள் முளைத்துக்கொண்டிருக்கின்றன என்று தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய டாக்டர் எஸ்.நஜிமுடீன் கட்டிடங்கள் பெருகியுள்ளதால் நாங்கள் சுவாசிப்பதற்கு சிறந்த காற்றை பெறமுடிவதில்லை அத்துடன் மக்களின் கழிவுகள் நிலத்தில் செலுத்தப்படுவதால் நிலமும் மாசடைந்துவருகின்றது என்றும் தெரிவித்தார்.

இவ்வாறான பிரட்சினைகளுக்கு உடனடியாக தீர்வு ஒன்றை பெற வேண்டியது அவசரமானதும் அவசியமானதுமாக இருப்பதாகவும் இப்பிராந்திய மக்களின் நிலத்தட்டுப்பட்டை நிவர்த்திப்பதில் கல்முனை அபிவிருத்திகுழுவின் தலைவரும் பாராளமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் பங்கு மிகமுக்கியமானது என்றும் தெரிவித்தார். அதிக விலை கொடுத்து காணிகளை வாங்க முடியாமல் தங்களிடமுல் குமார் பெண் பிள்ளைகளை திருமணம்முடித்துக்கொடுக்க முடியாது ஏழைப்பட்ட மக்கள் திண்டாடுவதாகவும் இவ்வாறான பிரட்சினைகளில் இருந்து விடுபட சாய்ந்தமருது கல்முனைக்குடி போன்ற பிரதேசங்களின் மேற்கே சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களால் கொள்வனவு செய்யப்பட்டுள்ள நெற் செய்கைக்கு உதவாத காணிகளை அவர்களாகவே மூடி அந்நிலங்களில் சிறு வீடுகளையும் மேட்டு பயிர் செய்கைகளையும் மேற்கொள்ள பாராளமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களும் இதனோடு சம்மந்தப்பட்டவர்களும் கஷ்ட்டப்படும் இம்மக்களுக்காக உதவ முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.


அவசரமாக சாய்ந்தமருது கல்முனைக்குடி மக்களின் காணிப்பிரட்சினை தீர்க்கப்பாடாது இழுத்தடிக்கப்ப்படுமாக இருந்தால் இப்பிராந்தியம் கொங்கிரீட் காடாக மாறி இங்கு வாழும் மக்கள் நோயினாலும் மீண்டுமொரு சுனாமி மீதமுள்ள எங்களையும் காவு கொண்டு விடுமோ என்ற மன நோயினாலும் பாதிக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை தெரிவித்தார்.


»»  read more

காகிதத் தூண் கவிதை நூல் வெளியீட்டு விழா


-எம்.ஐ.சம்சுதீன் கல்முனை விசேட நிருபர்-
சாய்ந்தமருது மீர்சாவின் காகிதத் தூண் கவிதை நூல் வெளியீட்டு விழா அல்ஜலால் வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் 08-06-2014 ல் இடம்பெற்றது.

கவிஞரும் வானொலி அறிவிப்பாளருமான மு.மு.மு.பாசில் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடாதிபதி கலாநிதி சபீனா இம்தியாஸ் கலந்து கொண்டா அதேவேளை கௌரவ அதிதியாக கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் எம்.எஸ்.ஏ.ரசாக் கலந்து கொண்டதுடன் நூலின் முதற்பிரதியையும் பெற்றுக்கொண்டார்.


இந்நிகழ்வின் அதிதிகள் வரிசையில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவர் கலாநிதி ரமீஸ் அப்துல்லாஹ, ரியாஸ் குறானா,கலாபூஷணம் ஏ.பீர் முஹம்மட்,செங்கதிரோன் தா.கோபால கிறிஸ்ணன் ஆகியோரும் கலந்து உரையாற்றினர்.

»»  read more

சாய்ந்தமருதில் பதாதை ஏந்தி போராட்டம்

-எம்.வை.அமீர்-
கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட கொடூர சுனாமி பேரலைகளால் இலங்கையில் பாதிக்கப்பட்ட கிராமங்களில் சாய்ந்தமருதுக் கிராமம் அதி உச்ச அளவில் பாதிக்கப்பட்டிருந்தது.

சுனாமி பேரலைகள் சாய்ந்தமருதை தாக்குவதற்கு முன்பு பிரதான வீதியில் இருந்து கடற்கரை வரை ஒரு கிலோமீட்டராக இருந்த மக்கள் வாழும் பிரதேசம் இப்போது கிட்டத்தட்ட 750மீட்டராக மாறியுள்ளது. சனநெரிசல் மிக்க சாய்ந்தமருது மக்களில் அதுவும் கரையோரத்தை அண்டி வாழ்ந்த மக்களின்  வாழ்வாதாரம் மீன்பிடி தொழிலை செய்பவர்களாகவும் வியாபாரம் மற்றும் விவசாயம் போன்ற தொழில்களில் ஈடுபடுபவர்களாகவும் இருப்பதாலும் அவர்கள் குறித்த பிரதேசத்திலேயே வாழவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கின்றனர். நேரடியாக பாதிக்கப்பட்டவர்களாகையால் கரையோரத்தில் மீண்டும் இருப்பதற்கு உள்ளத்தால் அஞ்சும் இம்மக்கள் சாய்ந்தமருதின் மேற்கே அமைந்துள்ள நீண்ட காலமாக நெற் செய்கை பண்ணப்படாத காணிகளை சிறு சிறு துண்டங்களாக கொள்வனவு செய்து குறித்த இடத்தை மேட்டுநிலப்பயிர் செய்வதுடன் அங்கு குடியிருக்க முயற்சிக்கும் போது அரசின் சுற்று நிருபங்களைக்காட்டி இவர்களது முயற்சிக்கு தடைகள் விதிக்கப்படுகின்றன.


ஏனைய பிரதேசங்களில் இவ்வாறான குடியேற்றங்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போது அரசே முன்வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு அரச நிலங்களை பங்கிடும் போது இம்மக்கள் மட்டும் தடுக்கப்படுவது கவலையளிப்பதாக மேற்படி பதாதை ஏந்தி போராட்டம் செய்தவர்களால் கோஷங்கள் எழுப்பப்பட்டன. 2014-06-08 ம் திகதி சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் அல் அமான நற்பணி மன்றத்தின் 9வது ஆண்டு நிறைவை ஒட்டி அதன் தலைவர் ஏ.எல்.ஏ பரீட் அவர்களது தலைமையில் இடம்பெற இருந்த நிகழ்வுக்கு வருகை தந்த கல்முனை அபிவிருத்தி குழுவின் தலைவரும் பாராளமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் வருகை தந்தபோதே மேற்படி பதாதை ஏந்தியா போராட்டம் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.


»»  read more

கல்முனையில் மர்ஹும் ஏ.எம்.தௌபீக் ஞாபகார்த்த நோக் அவுட் அடிப்படையிலான இறுதிப்போட்டி

-எம்.ஐ.சம்சுதீன்எம்.வை.அமீர்-
கல்முனை லக்கி ஸ்ட்டார் விளையாட்டுக்கழகத்தின் அனுசரணையுடன் அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனம், அம்பாறை மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையே கடந்த ஒரு மாத காலமாக நடத்தி வந்த நோக் அவுட் அடிப்படையிலான மர்ஹும் ஏ.எம்.தௌபீக் ஞாபகார்த்த அழைப்பு உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி (06.06.2014)  வெள்ளிக்கிழமை கல்முனை சந்தான்கேணி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

11 கழகங்கள் பங்கு பற்றிய மேற்படி சுற்றுப்போட்டியில் இறுதிப்போட்டிக்கு கல்முனை விர்லியன்ட் விளையாட்டுக்கழகமும் மருதமுனை ஈஸ்ட்டன் யூத் விளையாட்டுக்கழகமும் தெரிவாகி இருந்தது.
அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் தலைவரும் கல்முனை மாநகரசபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஏ.எம்.றக்கீப் தலைமையில் இடம்பெற்ற இந்த இறுதிப்போட்டியிலும் பரிசளிப்பு விழாவிலும் கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஆரிப் சம்சுதீன் அவர்களும் விசேட அதிதியாக கல்முனைத் தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளரும் கல்முனை மாநகரசபை உறுப்பினருமான ஏ.எம்.றியாஸ் அவர்களும் கலந்து கொண்ட அதேவேளை அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் பொதுச்செயலாளர் எம்.ஐ.எம். அப்துல் மனாப் அவர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.

போட்டியில் எந்த அணியும் வெற்றிபெறாததால் பெனால்ட்டி முறையில் மருதமுனை ஈஸ்ட்டன் யூத் விளையாட்டுக்கழகம், மர்ஹும் ஏ.எம்.தௌபீக் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணத்தை சுவிகரித்துக்கொண்டது.


வெற்றி பெற்ற கழகத்துக்கு கௌரவ மற்றும் விசேட அதிதிகள் வெற்றிக்கிண்ணத்தையும் பணப்பரிசில்களையும் வழங்கி வைத்தனர்.


»»  read more

நிந்தவூர் டைடன்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு கடினபந்து பொருட்கள் வழங்கி வைப்பு

(எம்.வை. அமீர்)

நிந்தவூரில் வளர்ந்து வரும் விளையாட்டுக் கழகங்களில் ஒன்றான டைடன்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு பிரபல சமூகசேவையாளரும், மெட்கோ சர்வதேச நிறுவனத்தின் மத்தியகிழக்கு முகாமையாளருமான எம்.சீ.எம். றிபாய் அவர்களினால் நேற்றைய தினம் (06.06.2014) டைடன்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு கடின பந்து பொருட்கள் கிரிக்கெட் அணியின் தலைவர் ஆசிரியர் ரி.எஸ். அஜ்மல் ஹுசைன் அவர்களிடம் வழங்கி வைக்கப்பட்டது. 

இந்நிகழ்வின்  நிந்தவூர் டைடன்ஸ் விளையாட்டுக் கழகத்தின் உப தலைவர்  எம்.ரி. அலி சப்றி, சிரேஷ்ட உறுப்பினர் முபாரக் ரிஷாத் மற்றும் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் மற்றும் வீரர்கள் அனைவரும் என அனைவரும் கலந்து கொண்டனர். 


இதேவேளை நிந்தவூரில் கடின பந்து துறையில் கால்பதிக்கும் 09வது  அணியாக டைடன்ஸ் அணி காணப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.


»»  read more

அட்டாளைச்சேனையில் சிறுவர் பூங்கா

(எம்.பீ(B).சப்னி)

அட்டாளைச்சேனைப் பிரதேச சபையின் நிதியில் இருந்து கோணாவத்தைக் கடற்கரையில் மக்கள் செறிந்து வாழும் பகுதியில் சிறுவர் பூங்கா ஒன்று அமைக்கும் பணி இன்று (4) காலை ஆரம்பமானது.

பிரதேச சபை உறுப்பினர் ஏ.எஸ்.எம்.உவைசின் கோரிக்கைக்கு அமைவாக இந்த சிறுவர் பூங்காவிற்கு தவிசாளர் எம்.ஏ.அன்சில் பிரதேச சபையின் நிதியில் இருந்து 1.5மில்லியன் ஒதுக்கீடு செய்து அதன் ஆரம்ப கட்ட வேலைகள் இன்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், தவிசாளர் எம்.ஏ.அன்சில், உறுப்பினர்களான எஸ்.எல்.முனாஸ், ஏ.எஸ்.எம். உவைஸ் மற்றும் ஊர் பிரமுகர்கள் கலந்து கொண்டு அடிக்கல் நட்டு ஆரம்பித்து வைத்தனர்.

»»  read more

6/02/2014

இரு சிறுநீரகங்களும் செயலிழந்து தவிக்கும் சகோதரி ஒருவர் இரக்க உள்ளம் கொண்டவர்களிடம் உதவி கோரி நிற்கின்றார்.



»»  read more

கல்முனை முஸ்லிம் பிரதேச செயலகத்துக்கு இரகசியமாக பெரும்பான்மை இன பிரதேச செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்

-எம்.வை.அமீர்-
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் கல்முனை முஸ்லிம் பிரதேச செயலகத்துக்கு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த பிரதேச செயலாளராக மொகான் விக்ரம ஆராச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.

கல்முனையைப் பொறுத்தவரையில் நூறு வீதம் தமிழ் பேசுபவர்களைக் கொண்ட பிரதேசமாகையால் காலம் காலமாக தமிழ் பேசும் உயர் அதிகாரிகளே நியமிக்கப்பட்டு வந்துள்ளனர் கல்முனை பொலிஸ் நிலையத்துக்கு மட்டுமே சில நேரங்களில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வந்துள்ளனர். தற்போது பொலிஸ் நிலையத்துக்கும் தமிழ் பேசும் ஒருவரே நியமிக்கப்பட்டுள்ளார். நூறு வீதம் தமிழ் பேசுபவர்களைக் கொண்ட கல்முனை பிரதேசத்தில் மக்கள் அவர்களது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள இலகுவாக இருந்தது.

தற்போது கல்முனை முஸ்லிம் பிரதேச செயலகத்துக்கு சிங்கள பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பது குறித்து பாராளமன்ற பிரதிநிதித்துவம் மற்றும் மாநகரசபை பேன்ற அதிகாரங்களை தன்னகத்தே கொண்டுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களை வினவியபோது நூறு வீதம் தமிழ் பேசுபவர்களைக் கொண்ட இப்பிரதேச செயலகத்துக்கு சிங்கள பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பதானது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றும் அம்பாறை மாவட்ட செயளாளருக்கே தெரியாமலே குறித்த நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் இது விடயமாக தமது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சகிதம் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சரை சந்தித்து விளக்கம் கோரவுள்ளத்தாகவும் உடனடியாக தமிழ் பேசும் பிரதேச செயலாளர் ஒருவரை கல்முனை முஸ்லிம் பிரதேச செயலகத்துக்கு நியமிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.


அண்மையில் தமிழ் கூட்டமைப்பின் தூதுக்குளுவுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தலைமையிலான குளுவுக்கும் இடையே கல்முனையில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றதற்கு இதற்கும் தொடர்பு உள்ளதா என வினவியபோது குறித்த நியமனமானது கூட்டமைப்பினுடனான கலந்துரையாடலுக்கு முன்பே வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்நியமனம் தொடர்பான பின்புலத்தை ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.
»»  read more

அல்-மிஸ்பா மாணவ தலைவர்களுக்கான முடிசூட்டு விழா

(ஏஎம்பி)
கல்முனை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் ஆங்கில கற்கை நிலையம் திறந்து வைத்தல், மாணவர் தலைவர்கள் அறிமுக நிகழ்வு மற்றும் மணவ தலைவர்களுக்கு சின்னம் சூட்டு வழாவும் இன்று இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் ஏ.எம்.எம். பரீட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை மாநகர முதல்வரும், ஸ்ரீ.ல.மு.கா. பிரதி செயலாளர் நாயகமுமான சட்டத்தரணி கௌரவ எம். நிஸாம் காரியப்பர் அவர்களும், கௌரவ அதிதியாக கல்முனை மாநகர சபை உறுப்பினரும், ஸ்ரீ.ல.மு.கா. அம்பாறை மாவட்ட மக்கள் பிரதிநிதிகளின் செயலாளருமான ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ் அவர்களும், மற்றும் பாடசாலையின் உதவி அதிபர் எம்.எச்.எம்.அன்சார், வலைய அதிபர்கள் ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் லீடர்ஸ்சஞ்சிகை வெளியிடப்பட்டதுடன், மாணவ தலைவர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டு சின்னம் சூட்டி கௌரவிக்கப்பட்டது.


இவ்விழாவில் பிரதம அதிதி அவர்களுக்கு நினைவு வாழ்த்து மடல் வழங்கப்பட்டதோடு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.



»»  read more

5/29/2014

கல்முனை மாநகரசபையின் தென்கோடியில் உள்ள வரவேற்பு வளைவுக்கு பெயரிட வேண்டும்

-எம்.வை.அமீர்,எம்.ஐ.சம்சுதீன்-
இன்று கல்முனை மாநகரசபையின் அமர்வு சபை முதல்வர் நிஸாம் காரியப்பர் தலைமையில் இடம்பெற்ற போது அங்கு கருத்து தெரிவித்த கல்முனை மாநகரசபையின் பிரதி முதல்வரும் தற்போதைய மாநகரசபை உறுப்பினருமான ஏ.ஏ.பஷீர் அவர்கள் தனதுரையில் கல்முனை மாநகர சபையின் தெற்கே அமைந்துள்ள சாய்ந்தமருது மாளிகைக்காடு எல்லையில்அமைந்துள்ள வரவேற்பு வளைவுக்கு சாய்ந்தமருது வரவேற்கிறது கல்முனை மாநகர சபை என்ற பெயர் வாசகங்களை இட வேண்டும் என வலியுறுத்தினார்.  


இதனையும் சபை ஏற்றுக்கொண்டு சாய்ந்தமருதில் உள்ள குறித்த வளைவை புனர்நிர்மாணம் செய்து சாய்ந்தமருது சார்ந்த உறுப்பினர்களின் அங்கீகாரத்துடன் சாய்ந்தமருது வரவேற்கிறது கல்முனை மாநகர சபை என்ற வாசகத்தை பொறிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.


»»  read more

விசேட சொற்பொழிவும், முகம்மது நபி (ஸல்) அவர்களின் ஸீரா தொடர்பான நூல்கள் அடங்கிய பொதிகள் வழங்கி வைத்தாலும்

-எம்.வை.அமீர்-
முகம்மது நபி ஸல்லால்லாஹு அலைஹிவசல்லாம்  அவர்களின் கற்றுக்கொள்ளலலும் பற்றுக்கொள்ளலலும் எனும் தலைப்பில் விசேட சொற்பொழிவும், முகம்மது நபி ஸல்லால்லாஹு அலைஹிவசல்லாம்  அவர்களின் ஸீரா தொடர்பான நூல்கள் அடங்கிய பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு, மேர்சி லங்கா நிறுவனத்தின் அனுசரணையுடனும் குவைத் லஜன்னத்துஸ் சனாபில் அல் கைரியா நிறுவனத்தின் நிதி ஒதுக்கீட்டுடனும் சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜம்மியத்துல் உலமா சபையும் ஜமாத்துஸ் சலாமா அமைப்பும் இணைந்து  சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் சட்டத்தரணி என்.எம்.அப்துல் முஜீப் (நளீமி) தலைமையில் சாய்ந்தமருது பாரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் (2014-05-21)மாலை இடம்பெற்றது.


மேற்படி நிகழ்வுக்கு மேர்சி லங்கா நிறுவனத்தின் பணிப்பாளர் ஒஸ்தாத் நஸ்ர் ஹஸன் கலீல் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்த அதேவேளை மேர்சி லங்கா நிறுவனத்தின் திட்டமிடல் முகாமையாளர் அஷ்சேக் எம்.ஆர்.எம். முனாஸ் (நளீமி) அவர்கள் கற்றுக்கொள்ளலலும் பற்றுக்கொள்ளலலும் எனும் தலைப்பில் விசேட சொற்பொழிவு ஒன்றினை வழங்கினார். இந்நிகழ்வில் மேர்சி லங்கா நிறுவனத்தின் நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் அஷ்சேக் ஹஸன் சியாத் (நளீமி) அவர்களும் இப்பிராந்தியத்தின் உயர் மார்க்க அறிஞ்சர்களும் பெரும் திரளான மக்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் இங்கு வந்திருந்த அனைவருக்கும் முகம்மது நபி ஸல்லால்லாஹு அலைஹிவசல்லாம்  அவர்களின் ஸீரா தொடர்பான நூல்கள் அடங்கிய பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது குறிப்படித்தக்கது.


»»  read more
புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா