
குறித்த நபர் பணிபுரிந்த வர்த்தக நிலையத்தில் பொருட்களை கொள்வனவு செய்த ஒருவர் பணம் செலுத்தாமல் தப்பிச் செல்ல முற்பட்டுள்ளார்.
இந்த சமயத்தில் குறித்த நபரை தப்பிச் செல்ல விடாது மொஹமட் மர்சிட் அவருடைய காரின் கண்ணாடியை பிடித்துக் கொண்டிருந்த வேளை கார் வேகமாகச் செல்ல தொடங்கிய வேளை விபத்து ஏற்பட்டுள்ளது.
வர்த்தக நிலையத்தில் இருந்து சுமார் 200 மீற்றர் தூரத்தை கடந்த பின் மொஹமட் மர்சிட் காரில் இருந்து கீழே விழுந்துள்ள நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தலையில் ஏற்பட்ட கடும் காயத்தால் மொஹமட் மர்சிட் உயிரிழந்துள்ள நிலையில் காரின் சாரதி தப்பிச் சென்றுள்ளார்.
உயிரிழந்த மொஹமட் மர்சிட் சுமார் இரண்டு வருட காலமாக தமது வர்த்தக நிலையத்தில் பணிபுரிந்து வந்ததாக அதன் உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார்
0 comments:
Post a Comment