(ஹனீபா)
புலம் பெயர் தொழிலாளர் பிரஜைகளின் நலநோம்பல் மற்றும் மேம்பாடு கருதி வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நலநோம்;பல் அமைச்சின் ஏற்பாட்டில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் பிரதேசங்கள் தோறும் 'ரட்டவிருவோ அமைப்பு' அமைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேசத்துக்கான 'ரட்டவிருவோ அமைப்பு' அமைக்கும் நிகழ்வு நேற்று (30) மாலை சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உதவி முகாமையாளர் ஏ.எம்.உமாறத், கல்முனை நிலையப் பொறுப்பதிகாரி எம்.ஐ.நாஸர், அம்பாறை நிலையப் பொறுப்பதிகாரி என்.பி.எம்.அன்வர், சம்மாந்துறை பிரதேச செயலக தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் றிஸ்வி உட்பட கிராம உத்தியோகத்தர்கள் உட்பட வெளிநாடுகளில் உள்ள குடும்பங்களின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment